க்ரைம் கதை மன்னன் ராஜேஷ்குமார் தட்ஸ்தமிழில் எழுதும் 'நான் முகம் பார்த்த கண்ணாடிகள்'!
ராஜேஷ்குமார்...
கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் எழுத்துலகில் க்ரைம் கதை மன்னனாகத் திகழ்பவர்.
கோவையில் பிறந்து, பிரபல எழுத்தாளரான பிறகும் சென்னை வாசத்தைத் தவிர்த்து, கோவைலேயே வசித்து வரும் ராஜேஷ்குமார் எழுதிய முதல் நாவல் வாடகைக்கு ஒரு உயிர் 1980-ல் மாலைமதியில் வெளியானது.
அவர் எழுதிய முதல் தொடர் ஏழாவது தீர்ப்பு கல்கண்டுவில் வெளியானது.

இதுவரை 1500 நாவல்கள் எழுதி உலக சாதனைப் படைத்திருக்கிறார் ராஜேஷ்குமார். 2000 சிறுகதைகள், 250 தொலைக்காட்சித் தொடர்கள் என அவர் சாதனைகள் தொடர்கின்றன.
இன்றைய சினிமா இயக்குநர்கள் பலருக்கும் இன்ஸ்பிரேஷன் ராஜேஷ்குமாரின் விறுவிறு க்ரைம் கதைகளே. ஆனால் அவருக்கோ திரைப்படத் துறையில் ஆரம்பத்தில் நேர்ந்தவை கசப்பான அனுபவங்கள். அவற்றை ஒரு தனி தொடராகவே எழுதியிருக்கிறார்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்போதுதான் மீண்டும் உள்ளே வந்திருக்கிறார். சரத்குமார் நடித்த சண்டமாருதம் இவரது கதை, திரைக்கதை, வசனத்தில் உருவானதுதான். இப்போது நான்கு படங்கள் இவரது எழுத்தில் உருவாகிக் கொண்டிருக்கின்றன.
பொதுவாக ஒரு காலகட்டத்துக்குப் பிறகு எழுத்தாளர்கள் அப்படியே தேங்கி விடுவார்கள். ஆனால் ராஜேஷ்குமார் எழுத்து நான்காவது தலைமுறையிலும் அதே வேகத்துடன் தொடரக் காரணம், அவருக்கு தொடர்ந்து உருவாகி வரும் புதிய வாசகர்கள். கல்லூரி மாணவர்கள், சமூக வலைத் தளங்கள் என இன்றைய தலைமுறையிலும் இவர் எழுத்தை வாசித்துக் கொண்டிருக்கிறார்கள்.
ராஜேஷ்குமாரின் எழுத்துப் பணியைப் பாராட்டி கலைமாமணி விருதினை வழங்கி கவுரவித்தது தமிழக அரசு. லயன்ஸ் க்ளப் சார்பில் வாழ்நாள் சாதனை விருது, இலக்கியச் சிந்தனை விருது என பல விருதுகளைப் பெற்றாலும், அவற்றையெல்லாம் விட பெருமையாக ராஜேஷ்குமார் கருதுவது மக்கள் சூட்டிய 'க்ரைம் கதை மன்னன்' விருதினைத்தான்.
உலகிலேயே அதிக நாவல் எழுதியவர் என்ற சாதனையை கின்னஸ் புத்தகத்தில் பதிய முயன்றபோது, ரூ 50 ஆயிரம் கட்டணமாக செலுத்த வேண்டும் என்று கூறிவிட்டார்கள். 'பணம் கொடுத்து நம் சாதனையை பதிவு செய்ய வேண்டுமா... அவர்களே தாமாக எப்போது அங்கீகரிக்கிறார்களோ அதுவரை அமைதியாக காத்திருப்போம்' என்று கூறிவிட்டவர் ராஜேஷ்குமார்.
இத்தனை பெருமைகளுக்குரிய ராஜேஷ்குமாரின் புதிய தொடர் 'நான் முகம் பார்த்த கண்ணாடிகள்' இன்றுமுதல் ஒன்இந்தியாவில் வெளியாகிறது.
இணையத்தில் அவர் எழுதும் முதல் தொடரும் இதுதான். இந்தத் தொடர் இதுவரை நீங்கள் படித்திராத வித்தியாசமான தொடராக இருக்கும். தொடர்ந்து படியுங்கள்!
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications