Fact check: இந்திய பெண் விமானி ஷிவானி சிங் பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கிக் கொண்டாரா? உண்மை என்ன?
டெல்லி: இந்தியா பாகிஸ்தான் மோதலுக்கு மத்தியில், இந்திய பெண் விமானி ஷிவானி சிங் பாகிஸ்தான் ராணுவத்திடம் பிடிபட்டதாக செய்திகள் பரப்பப்பட்டு வரும் நிலையில், அதனை இந்திய விமானப்படை மறுத்துள்ளது. இது பாகிஸ்தானின் பொய் பிரச்சாரம் என்று இந்திய விமானப்படை தெரிவித்துள்ளதாக மத்திய அரசின் கீழ் இயங்கும் PIB தெரிவித்துள்ளது.
கடந்த 22 ஆம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா 'ஆபரேஷன் சிந்தூர்' எனும் நடவடிக்கையை பாகிஸ்தான் மீது மேற்கொண்டு வருகிறது இந்தியா. இதைத் தொடர்ந்து இரு நாடுகளின் எல்லையில் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது. மேலும் பாகிஸ்தான் ராணுவம் கடந்த 3 நாட்களாக இந்திய எல்லைகளை அடிக்கடி தாக்கி வருகிறது. அதற்கு இந்திய ராணுவம் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறது. பாகிஸ்தான் ராணுவத்தின் ட்ரோன்கள் தகர்க்கப்பட்டன.

இந்நிலையில், சமூக ஊடகங்களில் இந்திய விமானப்படை (IAF) விமானிகளில் ஒருவரான ஸ்க்வாட்ரான் லீடர் ஷிவானி சிங்கின் ஜெட் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும், அவர் பாகிஸ்தானில் கைது செய்யப்பட்டதாகவும் ஒரு செய்தி புகைப்படத்துடன் பரவி வருகிறது. பரவும் போலிச் செய்தி குறித்து மத்திய அரசின் உண்மை கண்டறியும் பத்திரிகை தகவல் பணியகம் (PIB) விளக்கியுள்ளது.
உண்மை என்ன?
தவறான தகவலை பரப்பிய பதிவுகளை பத்திரிகை தகவல் பணியகம் (PIB) நிராகரித்து, அது "போலியான தகவல்" என்று கூறியிருக்கிறது. மேலும், "இது பாகிஸ்தான் சார்ந்த சமூக ஊடகங்கள், இந்திய பெண் விமானப்படை விமானி, ஸ்க்வாட்ரான் லீடர் ஷிவானி சிங், பாகிஸ்தானில் பிடிபட்டதாகக் கூறுவதை பரப்பி வருகின்றன. இந்தக் கூற்று போலியானது" என்று விளக்கம் அளித்துள்ளது.

உலகில் மிகவும் சக்திவாய்ந்த போர் விமானங்களில் ஒன்றான ரஃபேல் ஜெட் விமானத்தை ஓட்டிய முதல் இந்தியப் பெண் என்ற பெருமைக்குரியவர் தான் ஷிவானி சிங். கடந்த 2020 ஆம் ஆண்டு ரஃபேல் படையில் சேர்ந்த இவர் தற்போது அம்பாலா விமானப்படையில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் தான் அவரது புகைப்படத்துடன் தவறான செய்தியை பாகிஸ்தான் ஊடகங்கள் பரப்பி வருகின்றன.

Fact Check
வெளியான செய்தி
இந்திய விமானப்படை அதிகாரி ஷிவானி சிங்கை பாகிஸ்தான் சிறைபிடித்தது என சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவின.
முடிவு
இது பாகிஸ்தானால் பரப்பப்படும் போலிச் செய்தி என இந்திய விமானப்படை மறுத்துள்ளது.
ரேட்டிங்
-
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
கஜானாவை நிரப்ப விஜய் அதிரடி நடவடிக்கை.. டாஸ்மாக் விதித்த கூடுதல் கட்டணம்.. மதுபான விலை உயர்வு?












Click it and Unblock the Notifications