"பல்லு பட்டாலே பாய்சன்?" கொரோனா எல்லாம் பழசு.. சீனாவில் பரவும் ஜாம்பி வைரஸ்? ஷாக் வீடியோ! உண்மை என்ன
டெல்லி: சீனாவில் பரவ தொடங்கிய கொரோனா உலகெங்கும் மிக மோசமான ஆபத்தை ஏற்படுத்திய நிலையில், அங்கே அடுத்து ஜாம்பி வைரஸ் பரவுவதாக இணையத்தில் வீடியோ ஒன்று பரவி வருகிறது. அது குறித்துப் பார்க்கலாம்.
கடந்த 2019ஆம் ஆண்டில் சீனாவில் கொரோனா வைரஸ் முதலில் பரவியது. அதன் பிறகு உலகின் பல்வேறு நாடுகளுக்கும் பரவிய கொரோனா வைரஸ் மிக மோசமான ஒரு பாதிப்பை ஏற்படுத்தியது.

கொரோனா ஏற்பட்ட பாதிப்பில் இருந்தே இப்போது தான் உலகம் முழுமையாக மீண்டுள்ளது. இதற்கிடையே சீனாவில் பொதுமக்களை திடீரென ஜாம்பிகளை மாற்றும் வைரஸ் ஒன்று பரவி வருவதாக இணையத்தில் வீடியோ பரவி வருகிறது.
ஜாம்பி: மெட்ரோ ரயிலில் பயணிக்கும்போது திடீரென நகரில் ஜாம்பி தாக்குதல் ஏற்படுகிறது என வைத்துக் கொள்ளுங்கள்.. அப்போது ரயில் நிலையத்தை நெருங்கும் போது, பிளாட்பாரத்தில் கடிக்க ரெடியாக இருக்கும் ஜாம்பி குழுவை ரெடியாக இருப்பதை நீங்கள் காண்கிறீர்கள்.. ரயில் நின்றவுடன் அந்த ஜாம்பி படை திடீரென உங்கள் பெட்டிக்குள் நுழைந்து உங்களைத் தாக்கப் பாய்ந்தால் என்ன செய்வீர்கள்.
அப்படியொரு ஷாக் வீடியோ தான் இப்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. இதைப் பார்த்தால் கண்டிப்பாக நீங்கள் அதிர்ச்சியின் உச்சத்திற்கே சென்றுவிடுவீர்கள். இந்த வீடியோ தான் இணையத்தில் இப்போது டிரெண்டாகி வருகிறது. இது ஏதோ பேய் படத்தில் நடந்த சம்பவம் இல்லை என்றும் சீனாவில் உண்மையாகவே நடந்த சம்பவம் தான் இது என்று கூறி பரப்பி வருகின்றனர்.
வடக்கு சீனா: இது வடக்கு சீனாவில் நடந்த சம்பவம் என்று கூறி இணையத்தில் இந்த வீடியோவை பரப்பி வருகின்றனர். இதுதான் ஜாம்பி வைரஸ் என்றும் இதனால் பாதிக்கப்படுவோர் இப்படி மூர்க்கத்தனமாகவும் விசித்திரமாகவும் நடந்து கொள்வதாகவும் நெட்டிசன்கள் பலரும் தகவல்களைப் பகிர்ந்து வருகின்றனர். கொரோனாவுக்கு பிறகு இந்த ஜாம்பி வைரஸ் மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தி வருவதாகவும் அவர்கள் பதிவிட்டு வருகின்றனர்.
இந்த வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வரும் நிலையில், இது உண்மைதானா என்று பார்க்கலாம். அந்த வீடியோவை பார்த்தால் ரயிலில் இருந்த பயணிகள் பெரியளவில் பயப்படவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. ரியல் லைப்பில் ஜாம்பி தாக்குதல் நடந்தால் பொதுமக்கள் இப்படி அசால்டாக நடந்து கொள்ள மாட்டார்கள்.
உண்மை என்ன: இந்த போட்டோவை எடுத்து நாம் ரிவர்ஸ் சேர்ச் செய்து பார்க்கும் போது, கடந்த 2022இல் இது குறித்து வெளியான செய்திகளை நம்மால் பார்க்க முடிகிறது. அதன்படி பார்க்கும் போது, இது நடந்தது சீனாவில் இல்லை. இந்தோனேசியா தலைநகர் ஜகார்த்தாவில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. அப்போது பொது போக்குவரத்தை மேம்படுத்துவது குறித்து நடத்தப்பட்ட பிரசாரத்தின் ஒரு பகுதியாக அவர்கள் இதைச் செய்துள்ளனர்.
நாம் தொடர்ந்து தேடும் போது, கடந்த 2022இல் ஆகஸ்ட் 5 - செப்டம்பர் 11 இடைப்பட்ட காலத்தில் பொது போக்குவரத்து குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த இந்தோனேசியா தலைநகர் ஜகார்த்தாவின் ரயில் நிறுவனத்துடன் இணைந்து தனியார் நிறுவனம் இந்த பிரசாரத்தைச் செய்துள்ளது.
முற்றிலும் பொய்: உலகிலேயே ரொம்பவே மோசமான போக்குவரத்து நெரிசலைக் கொண்ட நகராக ஜகார்த்தா இருக்கும் நிலையில், பொது போக்குவரத்து குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்கள் இப்படிச் செய்தது உறுதியாகிறது. இதன் மூலம் சீனாவில் ஜாம்பி வைரஸ் பரவுவதாகப் பரவும் தகவல் 100% பொய் என்பது தெளிவாகத் தெரிகிறது.

Fact Check
வெளியான செய்தி
சீனாவில் கொரோனாவை போல ஜாம்பி வைரஸ் பரவி வருகிறது. இது மனிதர்களை ஜாம்பிகளாக மாற்றுகிறது.
முடிவு
இந்த வீடியோ சீனாவில் எடுக்கப்பட்டதே இல்லை. பொது போக்குவரத்து குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த இந்தோனேசியாவில் எடுக்கப்பட்ட வீடியோ இது
ரேட்டிங்
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications