Fact Check: மோடி அரசின் அதிரடி வியூகத்தால் 28 தீவுகளை இந்தியாவிடம் ஒப்படைத்த மாலத்தீவு? உண்மை என்ன?
டெல்லி: இந்தியாவை கடுமையாக எதிர்த்து வரும் மாலத்தீவு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் வியூகத்தால் 28 தீவுகளை இந்தியாவிடம் ஒப்படைத்திருக்கிறது என சமூக வலைதளங்களில் பரப்பிவிடப்படும் தகவல்கள் பொய்யானவை என தெரியவந்துள்ளது.
மாலத்தீவு அதிபராக மொய்சு பதவியேற்ற உடனேயே இந்திய ராணுவத்தினரை அங்கிருந்து வெளியேற்றும் நடவடிக்கைகளை மேற்கொண்டார். இந்தியாவே வெளியேறு முழக்கத்தின் மூலம் அதிபரான சீன சார்பு நிலைப்பாடு கொண்டவர் மொய்சு. பிரதமர் மோடியின் லட்சத்தீவு பயணம் குறித்து மாலத்தீவு அமைச்சர்கள் பகிரங்கமாக விமர்சனம் செய்ததால் இருநாடுகளிடையேயான நல்லுறவில் மேலும் விரிசல் ஏற்பட்டது.
ஆனால் மாலத்தீவின் தற்போதைய நடவடிக்கைகளில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இதனையடுத்து மாலத்தீவின் மாலேயில் ஆகஸ்ட் 9-ந் தேதி இரு நாடுகளுக்கும் இடையிலான மேம்பாட்டு கூட்டாண்மை விவாதங்களின் ஒரு பகுதியாக 2024-2029 காலகட்டத்தில் 1000 மாலத்தீவு குடிமைப்பணி அதிகாரிகளின் திறனை வளர்ப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மத்திய வெளியுறவு அமைச்சர் டாக்டர் எஸ் ஜெய்சங்கர் மற்றும் மாலத்தீவின் வெளியுறவு அமைச்சர் மூசா ஜமீரும் புதுப்பித்தனர்.
இந்த நிலையில் மாலத்தீவு தமக்கு சொந்தமான 28 தீவுகளை இந்தியாவிடம் ஒப்படைத்துவிட்டதாகவும் இந்த தீவுகளில் குடிநீர் மற்றும் சுகாதார மேம்பாடு பணிகளை இந்தியா மேற்கொள்ள இருக்கிறது எனவும் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக கூட்டணி அரசின் வியூகத்தால் மாலத்தீவு இந்தியா பக்கம் திரும்பிவிட்டது என்றும் சமூக வலைதளங்களில் பரப்பிவிடப்பட்டு வருகின்றன.
திட்டவட்ட மறுப்பு: ஆனால் இதனை மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. மாலத்தீவின் 28 தீவுகளை இந்தியாவிடம் கொடுத்துள்ளதாக சமூக வலைதளங்களில் பகிரப்படும் செய்தியில் எந்த ஒரு உண்மையும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜெய்சங்கர் பயணத்தில் என்ன நடந்தது?: மத்திய அமைச்சர் ஜெய்சங்கரின் மாலத்தீவு பயணம் தொடர்பான அரசின் செய்திக் குறிப்பில், மாலத்தீவின் மாலேயில் ஆகஸ்ட் 9-ம் தேதி இரு நாடுகளுக்கும் இடையிலான மேம்பாட்டு கூட்டாண்மை விவாதங்களின் ஒரு பகுதியாக 2024-2029 காலகட்டத்தில் 1000 மாலத்தீவு குடிமைப்பணி அதிகாரிகளின் திறனை வளர்ப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை இந்தியாவின் வெளியுறவு அமைச்சர் டாக்டர் எஸ் ஜெய்சங்கர் மற்றும் மாலத்தீவின் வெளியுறவு அமைச்சர் மூசா ஜமீரும் புதுப்பித்தனர்.
பங்களாதேஷ், தான்சானியா, காம்பியா, மாலத்தீவுகள், இலங்கை மற்றும் கம்போடியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த அரசு ஊழியர்களுக்கான திறன் மேம்பாட்டு திட்டங்களை வெளியுறவு அமைச்சகத்தின் வழிகாட்டுதலின் கீழ், நல்லாட்சிக்கான தேசிய மையம் வெற்றிகரமாக நடத்தியுள்ளது.

திறன் மேம்பாட்டு முயற்சிகளின் ஒரு பகுதியாக, இந்திய அரசின் நல்லாட்சிக்கான தேசிய மையம், மாலத்தீவு குடியரசின் மாலத்தீவு குடிமைப்பணிகள் ஆணையம் இடையே 1000 மாலத்தீவு அரசு ஊழியர்களுக்கு திறன் மேம்பாட்டுத் திட்டங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் 2019, ஜூன் 8 அன்று கையெழுத்தானது.
2024-ம் ஆண்டில், மாலத்தீவின் நிரந்தர செயலாளர்கள், தலைமைச் செயலாளர்கள், உயர்நிலைப் பிரதிநிதிகள் உட்பட மொத்தம் 1000 அரசு ஊழியர்களுக்கு கள நிர்வாகத்தில் மொத்தம் 32 திறன் மேம்பாட்டு திட்டங்களில் பயிற்சி அளித்ததன் மூலம் நல்லாட்சிக்கான தேசிய மையம் குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியுள்ளது.
இந்த ஒத்துழைப்பின் வெற்றியை அங்கீகரித்த மாலத்தீவு வெளியுறவு அமைச்சகம், புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு புதுப்பிக்குமாறு கேட்டுக் கொண்டது. 2024, ஆகஸ்ட் 9 அன்று, புரிந்துணர்வு ஒப்பந்தம் அதிகாரப்பூர்வமாக புதுப்பிக்கப்பட்டது. இதன் மூலம் 2029-க்குள் மேலும் 1,000 மாலத்தீவு அரசு ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்க உறுதியளிக்கப்பட்டுள்ளது. இது மாலத்தீவு குடிமைப் பணியாளர்களின் திறன்களை மேம்படுத்துவதுடன், இந்தியா மற்றும் மாலத்தீவு இடையேயான உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என்று மட்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Fact Check
வெளியான செய்தி
இந்தியாவை எதிர்க்கும் மாலத்தீவை தற்போது 28 தீவுகளை இந்தியாவிடம் ஒப்படைக்க வைத்துவிட்டது மத்திய அரசு
முடிவு
மாலத்தீவு ஏற்கனவே இந்தியாவுடன் தீவுகள் தொடர்பான ஒப்பந்தங்களை செய்திருக்கிறது. 2019-ம் ஆண்டே இது தொடர்பான ஒப்பந்தங்களையும் மேற்கொண்டிருக்கிறது. இந்த தீவுகளில் குடிநீர் மற்றும் சுகாதார கட்டமைப்புகளை மேம
ரேட்டிங்
-
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications