Fact Check: திருவையாறில் பழமையான கோயிலை இடிக்க நெடுஞ்சாலைத்துறை திட்டமா? உண்மை என்ன?
சென்னை: திருவையாறு பகுதியில் சுமார் 300 ஆண்டுகள் பழைமையான சிவராமர் திருக்கோவிலை தமிழக அரசின் நெடுஞ்சாலை துறை இடிப்பதற்கு முடிவெடுத்துள்ளதாக ஒரு தகவல் பரவி வருகிறது. இதன் உண்மைத்தன்மை பற்றி பார்க்கலாம்.
பரவும் செய்தி: தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு பகுதியில் சுமார் 300 ஆண்டுகள் பழமையான சிவராமர் திருக்கோவிலை அரசின் நெடுஞ்சாலைத் துறை இடிப்பதற்கு முடிவெடுத்துள்ளது என்ற தகவல் சமூக வலைதளங்களில் பரப்பப்படுகிறது. குறிப்பாக தஞ்சை வடக்கு மாவட்ட பாஜகவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இவ்வாறு பதிவிடப்பட்டுள்ளது.

உண்மை என்ன?: இது திரிக்கப்பட்ட தகவல் என தமிழக அரசின் உண்மை சரிபார்ப்பகம் தெரிவித்துள்ளது. நெடுஞ்சாலைத்துறை உதவிக்கோட்டப் பொறியாளர் (திருவையாறு) இந்த வதந்தி தொடர்பாக அளித்துள்ள விளக்கத்தை வெளியிட்டுள்ளது உண்மை சரிபார்ப்பகம்.
அதில், "தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில் மாநில நெடுஞ்சாலையான SH-22 மேற்கில் நெடுஞ்சாலைத்துறை இடத்தை ஆக்கிரமித்து தனியாரால் இராமர் பாதம் ஆலயம் (அருள்மிகு சிவாலயம்) கட்டப்பட்டுள்ளது. இது போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதால் ஆலய நிர்வாகிக்குக் கால அவகாசம் வழங்கித் தாங்களாகவே ஆக்கிரமிப்பினை அகற்ற முறைப்படி தாக்கீது வழங்கப்பட்டு ஆலயத்திலும் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. சமூக வலைத்தளங்களில் பரவும் தகவலில் உண்மையில்லை" என்று நெடுஞ்சாலைத்துறை உதவிக்கோட்டப் பொறியாளர் (திருவையாறு) விளக்கமளித்துள்ளார். வதந்தியை நம்பாதீர்!" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Fact Check
வெளியான செய்தி
திருவையாறு பகுதியில் சுமார் 300 ஆண்டுகள் பழைமையான சிவராமர் திருக்கோவிலை தமிழக அரசின் நெடுஞ்சாலை துறை இடிக்க முடிவெடுத்துள்ளதாக தகவல் பரவி வருகிறது.
முடிவு
நெடுஞ்சாலைத்துறை இடம் தனியாரால் ஆக்கிரமிப்பு செய்து கோவில் கட்டப்பட்டுள்ளது. போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதால் தாங்களாகவே ஆக்கிரமிப்பை அகற்ற அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications