Fact Check: என்னாது படத்தில் இருக்கும் முதலை காசர்கோடு பாபியாவா? வெளிநாட்டு நபர் முத்தமிடுகிறாரா?
திருவனந்தபுரம்: கேரளா மாநிலம் காசர்கோடு அனந்த பத்மநாப சுவாமி கோயிலில் சைவ முதலையாக இருந்து இறந்த முதலைக்கு ஒரு நபர் அதன் மூக்கில் அவருடைய நெற்றியை வைத்துக் கொண்டிருப்பது போன்ற புகைப்படம் வெளியாகியுள்ளது. ஆனால் அந்த முதலை சைவ முதலை பாபியா அல்ல என்பது பேக்ட் செக்கில் தெரியவந்தது.
கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்தில் உள்ளது அனந்தபுரா கிராமம். இங்கு ஒரு குளம் அமைந்துள்ளது. அதன் அருகே அனந்த பத்மநாப சுவாமி கோயிலும் உள்ளது.
இது திருவனந்தபுரத்தில் உள்ள அனந்தபத்மநாப சுவாமி கோயிலின் மூலவர் என சொல்லப்படுகிறது. இந்த கோயில் குளத்தில் ஒரு முதலை வசித்து வந்தது. இதன் பெயர் பாபியா. இந்த கோயிலை பாதுகாக்க கடவுளால் அனுப்பப்பட்டது என்று சொல்லப்படுகிறது.

கடவுள்
மேலும் இது கடவுளின் தூதுவன் என்றும் நம்பப்படுகிறது. ஒரு முறை குளத்திலிருந்து கோயில் வளாகத்திற்குள் வந்த முதலையை குருக்கள் ஒருவர் தனது செல்போனில் படம் பிடித்து சமூகவலைதளங்களில் பகிர்ந்தார். பொதுவாக முதலைகள் மாமிசத்தை உண்ணும் பழக்கம் கொண்டவை. நீர் நிலைகளில் உள்ள உயிரினங்களை சாப்பிட்டு உயிர் வாழும்.

உயிரியல் பூங்கா
உயிரியல் பூங்காக்களில் உள்ள முதலைகளுக்கு மாட்டு கறி உணவாக வழங்கப்படுகிறது. நீர் நிலைகளில் வசிக்கும் முதலைகள் சில நேரங்களில் மனிதர்கள், கால்நடைகளின் உடல் பாகங்களையும் கூட அடித்து சாப்பிடும். ஆனால் இந்த பாபியா சைவ முதலையாகும். இது கோயிலில் கொடுக்கப்படும் பிரசாத சோற்று உருண்டையை மட்டுமே உண்ணும்.

முதலை
இது வரை இந்த முதலை யாரையும் தாக்கியதில்லை. இது குளத்திற்கு எப்படி வந்தது, இதற்கு பாபியா என பெயரிட்டது யார் என்பெதல்லாம் தெரியவில்லை. கோயில் குருக்கள் பாபியாவிற்கு காலையும் மதியமும் இரு முறை உணவிடுவார். கோயில் குளத்தில் அதிக அளவு மீன்கள் இருந்தும் அதை பாபியா சுவைத்ததே இல்லை.

மக்கள் மனங்கள்
மக்கள் மனங்களை கொள்ளை கொண்ட பாபியா ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தது. அதற்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். இந்த நிலையில் முதலையின் மூக்கில் யாரோ ஒரு நபர் தனது நெற்றியை வைப்பது போன்று ஒரு புகைப்படம் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தில் இருக்கும் முதலை காசர்கோடு கோயில் சைவ முதலை பாபியா என சொல்லப்படுகிறது. ஆனால் உண்மையில் அது காசர்கோடு முதலை பாபியா இல்லை.

மனிதர்களுக்கும் வன விலங்குகளுக்கும்
மனிதர்களுக்கும் வன விலங்குகளுக்கும் இடையே உள்ள வழக்கத்திற்கு மாறான நட்பு என்பது குறித்து பேசும் வீடியோதான் தற்போது பாபியா என வைரலாகி வருகிறது. அந்த படத்தில் இருக்கும் முதலைக்கு பெயர் கோஸ்டா ரிகான் முதலையாகும். அருகே இருக்கும் நபர் அதன் உரிமையாளர் சீட்டோ. அந்த முதலைக்கு உடல்நலம் பாதிக்கப்பட்ட போது சீட்டோ அதற்கு சிகிச்சை அளித்தார் என சொல்லப்படுகிறது. ஆனால் அந்த புகைப்படத்தில் இருக்கும் காட்சி அசல் வீடியோவில் இல்லை. இந்த வீடியோ 2010ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது. எனவே இணையதளத்தில் வைரலாவது போலி செய்தி.

Fact Check
வெளியான செய்தி
புகைப்படத்தில் உள்ள முதலை காசர்கோடு அனந்த பத்மநாப கோயில் குளத்து சைவ முதலை பாபியா
முடிவு
புகைப்படத்தில் காணப்படுவது காசர்கோடு கோயில் முதலை அல்ல.
ரேட்டிங்
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications