Fact Check: கருணாநிதி கைதின் போது ஸ்டாலின் ஒளிந்து கொண்டார் என ஆதவ் அர்ஜுனா பேசியது பொய்!
சென்னை: 2001ஆம் ஆண்டு ஜூன் 29ஆம் தேதி முன்னாள் முதல்வர் கருணாநிதி கைது செய்யப்பட்ட போது, தற்போதைய முதல்வர் ஸ்டாலின் கைதுக்கு பயந்து ஓடிப் போனதாக தவெக தேர்தல் மேலாண்மை பிரிவு பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா பேசியுள்ளார். இதன் உண்மைத்தன்மை குறித்து இந்த செய்தியில் பார்க்கலாம்.
கரூர் விவகாரத்திற்கு பின் தவெகவின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் நடைபெற்றது. இந்த பொதுக்குழுவில் தவெக தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா பேசுகையில், கரூர் சம்பவத்திற்கு பின் பொதுச்செயலாளர் ஓடிவிட்டார், நிர்மல் குமார் ஓடிவிட்டார் என்கிறார்கள்.

யார் ஓடினார்கள்? கலைஞர் கைதின்போது நீங்கள் (ஸ்டாலின்) ஓடியது போலவா? வரலாறு பற்றி பேசினால் தாங்க மாட்டீர்கள் என்று பேசி இருக்கிறார். ஆதவ் அர்ஜுனாவின் பேச்சில் கலைஞர் கைதின் போது தற்போதைய முதல்வர் ஸ்டாலின் ஓடி ஒளிந்து கொண்டதாக கூறி இருக்கிறார். 2001ஆம் ஆண்டு மறைந்த முதல்வர் ஜெயலலிதா 2வது முறையாக ஆட்சிக்கு வந்தார்.
அதன்பின் 2001ஆம் ஆண்டு ஜூன் மாதம் 29ஆம் தேதி இரவு முன்னாள் முதல்வர் கருணாநிதி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். அப்போது முன்னாள் முதல்வர் கருணாநிதி வீடு மட்டுமல்லாமல், முரசொலி மாறன் வீட்டையும் காவல்துறையினர் சூழ்ந்தனர். அதேபோல் அப்போதைய சென்னை மாநகராட்சியின் மேயரான ஸ்டாலினின் வீடும் காவல்துறையினரால் வளைக்கப்பட்டுள்ளது.
ஆனால் ஸ்டாலின் பெங்களூரில் இருந்திருக்கிறார். தொடர்ந்து கருணாநிதி கைது செய்யப்பட்ட நிலையில், அடுத்த நாளான ஜூன் 30ஆம் தேதியே ஸ்டாலினின் நீதிபதி அசோக் குமார் முன்னிலையில் சரணடைந்துள்ளார். அதன்பின் ஸ்டாலினுக்கு நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்ட நிலையில், முதலில் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இதன்பின் மதுரை மத்திய சிறைக்கு ஸ்டாலின் மாற்றப்பட்டுள்ளார். இது பல்வேறு செய்தி தாள்களிலும் வந்துள்ளது. அதேபோல் கைதுக்கு பயந்து ஸ்டாலின் தலைமறைவாக வேண்டும் என்றால், அடுத்த நாள் காலையில் ஸ்டாலின் ஆஜராகாமல் இருந்திருக்கலாம். அடுத்த நாளிலேயே ஸ்டாலின் நீதிபதி முன் சரணடைந்தது ஏன் என்ற கேள்வியும் எழுகிறது.

Fact Check
வெளியான செய்தி
கலைஞர் கைதின்போது நீங்கள் (ஸ்டாலின்) ஓடியது போலவா? வரலாறு பற்றி பேசினால் தாங்க மாட்டீர்கள்
முடிவு
அப்போதைய சென்னை மாநகராட்சி மேயரான ஸ்டாலின் அந்த நேரத்தில் பெங்களூரில் இருந்தார். முன்னாள் முதல்வர் கருணாநிதி கைதான விஷயம் தெரிந்து, அடுத்த நாள் காலை சென்னை வந்த ஸ்டாலின், நீதிபதி அசோக் குமார் முன்னிலை
ரேட்டிங்
-
விஜய் கையில் எடுக்கப்போகும் 2 மெகா திட்டங்கள்.. ஆதவ் அர்ஜுனா சர்ப்ரைஸ் அப்டேட் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications