‛‛சாமி சிலையை வாங்க மறுத்த ராகுல் காந்தி?’’ பரவும் வீடியோவால் விமர்சிக்கும் பாஜக.. உண்மை என்ன?
மும்பை: பாரத் ஜோடோ நியாய யாத்திரையில் நடந்த விழாவில் நிர்வாகிகள் வழங்கிய விட்டல் சிலையை ராகுல் காந்தி வாங்க மறுத்ததாக வீடியோ வெளியாகி உள்ளது. இதனை பாஜகவினர் கடுமையாக விமர்சனம் செய்துள்ள நிலையில் அதன் உண்மை நிலை பற்றிய விபரம் வெளியாகி உள்ளது.
லோக்சபா தேர்தல் தேதி நேற்று அறிவிக்கப்பட்டது. மொத்தம் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. ஏப்ரல் 19 ம் தேதி முதல் ஜுன் மாதம் 1ம் தேதி வரை மொத்தம் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. அதன்பிறகு தேர்தல் தேதி ஜுன் மாதம் 4ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளது.

இந்த தேர்தலில் பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ‛இந்தியா' என்ற பெயரில் கூட்டணியை அமைத்துள்ளது. இதில் காங்கிரஸ், ஆம்ஆத்மி, திமுக, தேசியவாத காங்கிரஸ், சிவசேனா (உத்தவ் அணி), ஆர்ஜேடி உள்பட 25 கட்சிகள் உள்ளன. இந்நிலையில் தான் ராகுல் காந்தி ‛பாரத் ஜோடோ நியாய யாத்திரை' என்ற பெயரில் 2வது யாத்திரையை தொடங்கினார்.
15 மாநிலங்களில் மொத்தம் 110 மாவட்டங்களில் 337 சட்டசபை தொகுதிகள், 100 நாடாளுமன்ற தொகுதிகள் வழியாக யாத்திரைக்கு திட்டமிடப்பட்டது. ஜனவரி மாதம் 14ம் தேதி மணிப்பூரில் தொடங்கிய இந்த யாத்திரை இன்று மும்பையில் முடிவடைய உள்ளது. யாத்திரையில் ராகுல் காந்தி 6,713 கிலோமீட்டர் தொலைவை ராகுல் காந்தி கடந்துள்ளார். இந்நிலையில் தான் ராகுல் காந்தியின் யாத்திரையின் நிறைவு விழா பொதுக்கூட்டம் நாளை மும்பையில் நடைபெற உள்ளது.
இந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்க ‛இந்தியா' கூட்டணி கட்சிகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த பொதுக்கூட்டத்தில் தமிழக முதல்வர் ராகுல் காந்தி, காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, பிரியங்கா காந்தி உள்பட பல தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். சமாஜ்வாதியின் அகிலேஷ் யாதவ், ஆர்ஜேடி கட்சியின் தேஜஸ்வி யாதவ், சிவசேனா (உத்தவ் அணி) தலைவர் உத்தவ் தாக்கரே, தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார்) தலைவர் சரத்பவார் பங்கேற்க உள்ளனர்.
முன்னதாக, நாசிக்கில் ராகுல் காந்தியின் கிசான் மகாபஞ்சாயத்து நடந்தது. இதில் ராகுல் காந்தி பங்கேற்றார். அப்போது ராகுல் காந்திக்கு கடவுள் விட்டல் சிலை பரிசாக வழங்கப்பட்டது. அதனை ராகுல் காந்தி மறுத்ததாக வீடியோ பரப்பப்பட்டு வருகிறது. இதுபற்றி பாஜகவின் ஐடி விங்க் அமித் மாளவியா, ‛‛மேடையில் ராகுல் காந்தி, பகவான் விட்டல் சிலையை வாங்க மறுத்துவிட்டார். இது மில்லியன் கணக்கான இந்து மக்களின் உணர்வுகளை புண்படுத்துகிறது. திமுக முதல் காங்கிரஸ் வரை ‛இந்தியா' கூட்டணி கட்சியின் இதனை செய்து வருகின்றனர். ராகுல் காந்தி ஹிந்துமிசியாவால் பாதிக்கப்பட்டுள்ளார்'' என தெரிவித்து இருந்தார்.
இதுதொடர்பான முழுவீடியோ இப்போது வெளியாகி உள்ளது. அதில் ராகுல் காந்திக்கு சிலர் மாலை அணிவிக்கின்றனர். அப்போது நிர்வாகிகள் விட்டல் சிலையை வழங்க செல்கின்றனர். மாலை அணிவிக்கும் நிகழ்ச்சியால் ராகுல் காந்தி விட்டல் சிலையை வாங்க மறுக்கிறார். அதன்பிறகு மாலை அணிவிப்பு நிகழ்ச்சி முடிந்த பிறகு ராகுல் காந்தி விட்டல் சிலையை வாங்கி கொள்ளும் காட்சி இடம் பெற்றுள்ளது.

Fact Check
வெளியான செய்தி
மேடையில் கடவுள் விட்டல் சிலையை ராகுல் காந்தி வழங்க மறுத்ததாக வீடியோ பரவி வருகிறது.
முடிவு
மாலை அணிவிக்கும் நிகழ்ச்சியால் கடவுள் விட்டல் சிலையை ராகுல் காந்தி தாமதமாக பெற்று கொண்டார்.
ரேட்டிங்
-
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு












Click it and Unblock the Notifications