For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கொரோனா 3ம் அலை.. குழந்தைகளை நேரடியாக அதிக அளவில் தாக்குமா.. உண்மை என்ன? - பின்னணி!

Google Oneindia Tamil News

டெல்லி: கொரோனா இரண்டாம் அலை தற்போது ஓய்ந்து உள்ள நிலையில் மூன்றாம் அலை ஏற்பட்டால் அதனால் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன. ஆனால் அறிவியல்பூர்வமாக இது நிரூபிக்கப்படவில்லை.

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை மிகப்பெரிய தாண்டவம் ஆடிவிட்டு இப்போதுதான் ஓய்ந்து இருக்கிறது. மூன்றாம் அலை மீண்டும் ஏற்பட வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் பலர் எச்சரித்து வருகிறார்கள். புதிய வகை கொரோனாக்கள் உருவாகி வருகின்றன.

டெல்டா வகை மட்டுமின்றி, டெல்டா + வகையும் உருவாகிவிட்டது. இந்த நிலையில் கொரோனா மூன்றாம் அலை எப்போது வேண்டுமானாலும் ஏற்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.

ரதிதேவி செய்த பகீர்.. சடலத்தை நிர்வாணப்படுத்தி.. அதுவும் பெண் கொரோனா நோயாளியிடம்.. அலறிய சென்னைரதிதேவி செய்த பகீர்.. சடலத்தை நிர்வாணப்படுத்தி.. அதுவும் பெண் கொரோனா நோயாளியிடம்.. அலறிய சென்னை

குழந்தைகள்

குழந்தைகள்

இந்த நிலையில் மூன்றாம் அலை ஏற்பட்டால் அதனால் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன. ஆனால் அறிவியல்பூர்வமாக இது நிரூபிக்கப்படவில்லை. இந்தியாவில் கடந்த இரண்டு அலைகளில் பெரிய அளவில் குழந்தைகள் பாதிக்கப்படவில்லை. 10 வயதுக்கு மேலே உள்ளவர்கள் பாதிக்கப்பட்டதை விட 10 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் பாதிக்கப்பட்டது ஒப்பீட்டளவில் குறைவுதான்.

இல்லை

இல்லை

இது தொடர்பாக தி லென்செட் மருத்துவ ஆராய்ச்சி குழு நடத்திய ஆராய்ச்சியில், கொரோனா பாதிக்கப்பட்ட குழந்தைகளில் வைரஸின் தீவிரம் குறைவாகவே இருந்துள்ளது. உதாரணமாக பெரும்பாலான குழந்தைகள் அறிகுறியே இல்லாமல் குணமாகி உள்ளனர். சிலர் லேசான அறிகுறியை கொண்டு இருந்தனர். இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்ட 10 வயதுக்கு குறைவான 2600 குழந்தைகளை சோதனை செய்ததில் இந்த முடிவுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாடு

தமிழ்நாடு

தமிழ்நாடு, கேரளா, மஹாராஷ்டிரா, டெல்லி ஆகிய மாநிலங்களில் இந்த சோதனை நடத்தியதில் குழந்தைகள் இடையே இறப்பு சதவிகிதம் 2.4% ஆக இருந்துள்ளது. அதிலும் கூட 40% பேர் ஏற்கனவே உடல் ரீதியாக சில நோய்கள் இருந்த குழந்தைகள். 9% குழந்தைகள் மட்டுமே உடல்நிலை மோசமாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இரண்டு

இரண்டு

முதல் அலையிலும் சரி, மோசமான இரண்டாம் அலையிலும் இதே நிலைமைதான் என்று தி லென்சட் கூறியுள்ளது. இந்தியாவில் மட்டுமின்றி உலகம் முழுக்க இதே நிலைதான். அதேபோல் கொரோனா மூன்றாம் அலை ஏற்பட்டால் அதில் குழந்தைகள்தான் அதிகம் பாதிப்படைவார்கள் என்பதற்கு ஆதாரம் எதுவும் இல்லை, என்று எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனர் டாக்டர் ரன்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.

என்ன சொன்னார்

என்ன சொன்னார்

இந்தியாவில் ஏற்பட்ட முதல் அலை, இரண்டாம் அலையை எடுத்துக்கொண்டாலும் சரி. உலகம் முழுக்க வந்த கொரோனா டேட்டாக்களை எடுத்துக்கொண்டாலும் சரி. எதிலும், எந்த வகையான கொரோனாவும் குழந்தைகளை அதிகம் பாதித்ததாக டேட்டா இல்லை. இந்தியாவில் இரண்டாம் அலை மூலம் பாதிக்கப்பட்ட குழந்தைகளில் 60-70% பேருக்கு உடலில் ஏற்கனவே ஏதாவது நோய் இருந்திருக்கிறது.

குழந்தைகள்

குழந்தைகள்

சில குழந்தைகள் கீமோ தெரபி சிகிச்சை எடுத்துள்ளனர். இவர்களை தவிர மற்ற குழந்தைகளை பெரிதாக பாதிக்கவில்லை. எனவே மூன்றாவது அலையில் குழந்தைகள்தான் அதிகம் பாதிப்படைவார்கள் என்பதற்கு சான்று எதுவும் இல்லை, என்று எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனர் டாக்டர் ரன்தீப் குலேரியா தெரிவித்துள்ளார். உலகம் முழுக்கவே இதே நிலைதான் என்று அவர் தெரிவித்துள்ளார்.

எய்ம்ஸ்

எய்ம்ஸ்

அதேபோல் எய்ம்ஸ் மருத்துவர் குழு இதுகுறித்து பேசுகையில், இந்தியாவில் கொரோனா காரணமாக குழந்தைகள் இறப்பு சதவிகிதம் 2%தான். 1 லட்சம் குழந்தைகளில் 500 பேர் மட்டுமே மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார்கள். அதில் 2 பேர் மட்டுமே பலியாகிறார்கள். இது இந்த வைரஸ் குழந்தைகளிடம் பெரிதாக பரவவில்லை, ஆற்றல் மிக்கதாக இல்லை என்பதை காட்டுகிறது. இதனால் இந்த வைரஸின் மூன்றாம் அலை குழந்தைகளை தாக்கும் என்று உறுதியாக கூற முடியாது, என்று விளக்கி உள்ளனர்.

Fact Check

வெளியான செய்தி

கொரோனா இரண்டாம் அலை தற்போது ஓய்ந்து உள்ள நிலையில் மூன்றாம் அலை ஏற்பட்டால் அதனால் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன.

முடிவு

இந்த தகவல் அறிவியல்பூர்வமாக இது நிரூபிக்கப்படவில்லை. மூன்றாம் அலை ஏற்பட்டால் அதில் குழந்தைகள்தான் அதிகம் பாதிப்படைவார்கள் என்பதற்கு ஆதாரம் எதுவும் இல்லை. எந்த வகையான கொரோனாவும் குழந்தைகளை அதிகம் பாதித

ரேட்டிங்

False
பேக்ட் செக் தொடர்பான உங்களது ஆலோசனைகளையும் சொல்லுங்கள். அனுப்ப வேண்டிய இ மெயில் - [email protected]
English summary
Fact Check: No Coronavirus 3rd wave may not affect Kids in India says AIMMS doctors and other experts.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X