ட்ரம்ப் சொன்னதை நம்பி டெட்டால், லைசாலை குடிச்சிராதீங்க.. ஒரு எச்சரிக்கை
சென்னை: COVID-19 நோயாளிகளுக்கு கிருமிநாசினிகளை குடிக்க வைத்து வைரஸைக் கொல்ல முடியும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கூறியிருந்தார். இதை நம்ப வேண்டாம் என டெட்டால், லைசால் போன்ற கிருமிநாசினி நிறுவனங்கள் எச்சரித்துள்ளன.
Recommended Video
"ஒரு நிமிடத்தில், கொரோனா வைரசை அழிக்கும் கிருமிநாசினிகளை கைகளை கழுவ நாம் பயன்படுத்தி வருகிறோம்.. இந்த கிருமிநாசினியை உடலின் உள்ளே ஊசி மூலம் செலுத்த ஏதாவது செய்ய வழி இருக்கிறதா?" என்று டிரம்ப் கூறியிருந்தார். மேலும் வெயிலால் கொரோனா பரவல் குறையும் என்ற ஆய்வு முடிவை சுட்டிக் காட்டி, உடலை வெப்பப்படுத்தலாமே என்றும் ஐடியா சொன்னார்.

மருத்துவ உலகில் இது விமர்சனத்திற்கு உள்ளானதால், அது வேடிக்கையாக சொல்லப்பட்ட வார்த்தை என ட்ரம்ப் இன்று சமாளித்துள்ளார்.
இந்த நிலையில் டெட்டால் மற்றும் லைசால் தயாரிப்பாளரான ரெக்கிட் பென்கிசர் நிறுவனம், மனித உடலில் கிருமிநாசினி தயாரிப்புகளை உட்செலுத்த கூடாது என்று மக்களை எச்சரித்துள்ளது.
"சமீபத்திய ஊகங்கள் மற்றும் சமூக ஊடக செய்திகள் காரணமாக, கிருமிநாசினிகளை விழுங்கினால் கொரோனா வைரஸ் (SARS-CoV-2) சிகிச்சையில் அது பயன்படுமா என்று நிறைய பேர் கேட்கிறார்கள்.
எந்தவொரு சூழ்நிலையிலும் கிருமிநாசினி பொருட்கள் ஊசி, குடிப்பது அல்லது வேறு எந்த வழியிலும் மனித உடலில் செலுத்த கூடாது. இதில் நாம் தெளிவாக இருக்க வேண்டும். எல்லா தயாரிப்புகளையும் போலவே, எங்கள் கிருமிநாசினிகள் மற்றும் சுகாதாரப் பொருட்கள், அவற்றில் குறிப்பிடப்பட்டஉள்ள, நோக்கம் மற்றும் பயன்பாட்டு வழிகாட்டுதல்களின்படி மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். லேபிள் மற்றும் பாதுகாப்பு வழிமுறைகளைப் படிக்கவும். வெளிப்புற பயன்பாட்டுக்கு மட்டுமே கிருமிநாசினிகள் பயன்படுத்தப்பட வேண்டும். உட்கொள்ளக் கூடாது" இவ்வாறு அந்த நிறுவனம் கூறியுள்ளது.
-
காரை அடிக்கடி துடைத்தால் இப்படியொரு பிரச்சனை வருமாம்.. தெரியாம கூட இதை மட்டும் செய்ய வேண்டாம்! -
“இந்தியா என்னை 100% நம்பலாம்.. நான் மோடியின் மிகப்பெரிய ரசிகன்!” ஓபனாக பேசிய டிரம்ப்! -
இந்தியர்கள் 3 நாடுகளுக்கு செல்ல அதிரடி தடை.. அறிவித்த மத்திய அரசு.. பின்னணியில் ‘எபோலா' நோய்த்தொற்று -
இரு துருவத்தில் பயணிக்கும் இந்தியா - அமெரிக்கா.. முதலீட்டாளர்களே இதையெல்லாம் நோட் பண்ணுங்கப்பா!! -
பாகிஸ்தான் கூட டிரம்ப்பை மதிக்கல.. அமெரிக்காவை சீண்டும் ஷெரீப் அரசு.. இனி தான் இருக்கு சம்பவம்! -
"திறக்கப்படும் ஹார்முஸ்.." முடிவுக்கு வரும் அமெரிக்கா ஈரான் போர்.. டிரம்ப் அதிரடி அறிவிப்பு! -
பிடுங்கப்படும் அதிபரின் பவர்.. ஈரான் போரில் படுதோல்வி? 3 மாதங்களை கடந்தும் திணறும் டிரம்ப்! -
சீனாவில் இருந்தபடி ஹைதராபாத்தில் ஆபரேஷன்! 3,000 கிமீ தொலைவில் ரோபோவை கண்ட்ரோல் செய்த இந்திய டாக்டர் -
அமெரிக்க போரில் மேஜர் திருப்பம்.. யுரேனியத்தை வழங்க ஈரான் ஒப்புதல்? பின்னணியில் நடப்பது என்ன? -
கரப்பான் பூச்சி கட்சிக்கு பின்னணியில் பாகிஸ்தான்? முடக்கப்பட்ட பக்கங்கள்.. அடுத்து திடீர் விளக்கம் -
பெட்ரோல், டீசல் விலை மேலும் உயரும்.. இதை தவிர்க்கவே முடியாது.. BPCL முன்னாள் இயக்குனர் எச்சரிக்கை -
92% மார்க் எடுத்த பிறகும் நேர்ந்த சோகம்! நீட் ரத்தால் கர்நாடக மாணவி விபரீதம்.. கண்ணீரில் பெற்றோர்












Click it and Unblock the Notifications