Fact Check:பான் கார்டு அப்டேட் இல்லாவிட்டால் இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் அக்கவுண்ட் முடக்கமா? உண்மையா?
டெல்லி: பான் கார்டு அப்டேட் செய்யப்படாவிட்டால் இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கி கணக்கு 24 மணி நேரத்தில் முடக்கப்படும் எனும் சமூக ஊடகங்களில் பரவி வரும் தகவல் பொய்யானது என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
சமூக வலைதளங்களில் ஒரு தகவல் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. அதில், உங்களது பான் கார்டு அப்டேட் செய்யாவிட்டால் 24 மணிநேரத்தில் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் அக்கவுண்ட் முடக்கப்படும் என இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி அறிவுறுத்தல் விடுத்துள்ளதாக ஒரு தகவல் பகிரப்பட்டு வருகிறது.

இதனால் பொதுமக்கள், பான் கார்டு அப்டேட் தொடர்பாகவும் போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி கணக்கு தொடர்பாகவும் அச்சமடைந்தனர்.
இந்த நிலையில் மத்திய அரசு இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ளது. அதில், இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கி கணக்கு 24 மணி நேரத்தில் முடக்கப்படும் எனும் சமூக ஊடகங்களில் பரவி வரும் தகவல் பொய்யானது! @IndiaPostOffice
இதுபோன்ற எந்தச் செய்திகளையும் தெரிவிக்கவில்லை. உங்கள் தனிப்பட்ட விவரங்களை அல்லது வங்கி தகவல்களை யாருடனும் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.


Fact Check
வெளியான செய்தி
பான் கார்டு அப்டேட் செய்யப்படாவிட்டால் இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கி கணக்கு 24 மணி நேரத்தில் முடக்கப்படும்
முடிவு
இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி அப்படி அறிவிக்கவில்லை.












Click it and Unblock the Notifications