For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

லாக்டவுன் காலத்தில் குஜராத் கோவிலில் கள்ள நோட்டு பறிமுதல் என்பது பொய் செய்தி

Google Oneindia Tamil News

அகமதாபாத்: கொரோனா பரவுவதைத் தடுக்க அமல்படுத்தப்பட்டிருக்கும் லாக்டவுன் காலத்தில் குஜராத் கோவில் ஒன்றில் கள்ள நோட்டுகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததாகவும் அது பறிமுதல் செய்யப்பட்டதாகவும் பரவி வரும் தகவலில் உண்மை இல்லை என தெரியவந்துள்ளது.

சமூக வலைதளங்களில் குஜராத் கோவில் குறித்து ஒரு செய்தி வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது. அதில் லாக்டவுன் காலத்தில் கொரோனாவுக்கு எதிராக நாம் போராடுகிறோம்.

Fake News: Fake currency from Gujarat temple was not seized during lockdown

இன்னொரு பக்கம் குஜராத்தின் சூரத் ஸ்வாமிநாராயண் கோவிலில் கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக அர்ச்சகர் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கு ஆதாரமாக டிவி சேனல் ஒன்றில் வெளியான க்ளிப்பிங்கும் இணைக்கப்பட்டிருந்தது. உண்மையில் இச்சம்பவம் நடைபெற்றது 2019-ல். அந்த செய்தியைத்தான் தற்போது நடைபெற்றதாக திரித்து வதந்தி பரப்பி உள்ளனர்.

2019 சம்பவத்தில் மொத்தம் ரு1 கோடி மதிப்பிலான கள்ள ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
A fake message on the social media claiming that fake notes were seized from a temple in Gujarat during the lockdown has gone viral.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X