ஹெலிகாப்டரிலிருந்து மத்திய அரசு கட்டுக் கட்டாக பணம் போடப் போகுது.. தீயாக பரவும் பொய் செய்தி
சென்னை: கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஹெலிகாப்டரிலிருந்து மத்திய அரசு மக்களுக்கு பணத்தை வாரி இறைக்கப்போகிறது என்று ஒரு மெசேஜ் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
கொரோனா பாதிப்பை தடுக்க லாக்டவுனை இந்தியா முழுக்க மே 3ம் தேதிவரை மத்திய அரசு நீட்டித்துள்ளது. இந்த காலகட்டங்களில், பொருளாதார பாதிப்பில் தவிக்கும் மக்களுக்கு, உதவி செய்ய ஒரு நிதி பேக்கேஜ் அறிவிக்கப்பட்டுள்ளது. 2வது ஒரு நிதி பேக்கேஜ் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இன்னும் அறிவிப்பு வரவில்லை.

இந்த நிலையில்தான், மக்கள் கையில் பணப் புழக்கத்தை ஏற்படுத்தி ஹெலிகாப்டரில் இருந்து அரசு பணம் தூவப்போவதாக கூறி செய்திகள் வலம் வருகின்றன. இதை நம்ப வேண்டாம் மக்களே என்று அரசு தெளிவுபடுத்தியுள்ளது.
முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி அனைத்து இந்தியர்களுக்கும் தலா ரூ .15 ஆயிரம் தருவதாக ஒரு செய்தி வந்தது. இந்த கடினமான காலங்களில் அனைத்து இந்தியர்களுக்கும் ரூ .15,000 வழங்க பிரதமர் முடிவு செய்துள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது. இது போலியானது, இதுபோன்ற எந்த அறிவிப்பும் அரசால் வெளியிடப்படவில்லை.
பிரதமர் நாட்டு மக்களிடையே உரையாற்றியபோது அத்தகைய அறிவிப்பை வெளியிடவில்லை. அவர் லாக்டவுனைத்தான் மே 3 வரை மட்டுமே நீட்டித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Recommended Video
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications