திருப்பதி கோயில் அர்ச்சகர் வீட்டில் '128 கிலோ தங்கம், ரூ.150 கோடி பணம்' பிடிபட்டதா.. உண்மை என்ன?
திருப்பதி: சமூக வலைதளங்களில் பரவுவதை உண்மை என்று நம்பி பலர் இந்த காலக்கட்டத்தில் ஷேர் செய்கிறார்கள். நமக்கு தெரிந்தவர்கள், பிரபலமானவர்கள் பரப்பினால் உண்மை என்று பலரும் நம்புகிறார்கள். அதேபோல் செய்தி சேனல்களில் கார்டுகளாக வருவதையும் உண்மை என்று நம்புகிறார்கள். ஆனால் உண்மையில் செய்தி சேனல்களில் வரும் தகவல்களிலேயே உண்மை இருப்பது இல்லை. இந்நிலையில் 128 கிலோ தங்கம்; ரூ.150 கோடி பணம்' திருப்பதி கோயிலில் பணியாற்றும் அர்ச்சகர் வீட்டில் கைப்பற்றப்பட்டதாக வதந்தி வேகமாக பரவி வருகிறது.
இன்றைய சூழலில் சமூக வலைதளங்களில் பரவும் எதையும் உண்மை என்று நம்பிவிடக்கூடாது.. ஏனெனில் கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய்.. தீர விசாரிப்பதே மெய் என்பது சமூக வலைதளங்களுக்கு நிச்சயம் பொருந்தும். ஏனெனில் யார் மீதும், யார் வேண்டுமானாலும் அவதூறு பரப்ப முடியும். டீப் பேக் வீடியோக்கள், டீப் பேக் புகைப்படங்கள் வேகமாக பரவி வருகின்றன. யாரை வேண்டுமானாலும் ஆபாசமாக சித்தரிக்க முடியும். யாரை வேண்டுமானாலும் தத்ரூபமாக மோசமாக சித்தரிக்க முடியும்.

அதேபோல் எங்கோ நடந்த விஷயத்தை யாருக்கு எதிராகவோ திருப்பிவிட முடியும். எங்கோ நடந்த நல்ல விஷயத்தை இங்கு நடந்ததாக பரப்ப முடியும்.. இல்லாத ஒன்றை இருப்பதாகவும், இருப்பதை இல்லவே இல்லை என்றும் பரப்ப முடியும். அதேபோல் குறிப்பிட்ட மக்களுக்கு எதிராக, குறிப்பிட்ட நபர்களுக்கு எதிராக டீப் பேக் வீடியோ அல்லது தவறான தலைப்புகளை கேப்சனாக வைத்து மோசமான விஷயங்களை பதிவிட்டு பொய்களை பரப்ப முடியும். இவை எல்லாம் அதிகமாக நடக்க தொடங்கிவிட்டது. தங்களுக்கு எதிரானவர்கள், தங்கள் கட்சிக்கு எதிரானவர்களை பரப்புவது நடக்கிறது.
அப்படித்தான் ஒரு வீடியோ தற்போது வேகமாக பரவி வருகிறது. அந்த வீடியோவில், தங்க, வைர நகைகள் ஒரு மிக நீண்ட மேசையில் அடுக்கிவைக்கப்பட்டு உள்ளது. போலீசார் பிடிபட்ட நகைகள் குறித்து செய்தியாளர்களைச் சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இந்நிலையில்திருப்பதி கோயிலில் பணியாற்றும் 16 அர்ச்சகர்களில் ஒருவரின் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது 150 கோடி ரூபாய் பணம், 128 கிலோ தங்கம், 70 கோடி மதிப்புள்ள வைர நகைகள் ஆகியவை பிடிபட்டுள்ளதாக பரப்புகிறார்கள்.' - இதுதான் இந்த வீடியோவைப் பகிரும் பெரும்பாலானவர்கள் திருப்பதியில் அர்ச்சகர் வீட்டில் பறிமுதல் செய்யப்பட்டவை, 128கிலோ தங்கம்
150 கோடி ரொக்கம், 70 கிலோ வைரம், ஐயர் மிகவும் நல்லவர் என்ற கேப்சனுடன் பரப்பி வருகிறார்கள்.
இந்நிலையில் இது முற்றிலும் பொய்யான செய்தி என்பது விசாரித்த போது தெரியவந்தது. ஏனெனில் கடந்த 2022ம் ஆண்டும் இதே வீடியோவை பரப்பி திருப்பதி அர்ச்சகர் வீட்டில் பிடிப்பட்ட தங்கம் என்று பரப்பினார்கள். கடந்த நான்கு ஆண்டுகளாகவே பலர் இப்படி பொய்யான வீடியோவை உண்மை என்று நம்பி பரப்புகிறார்கள். உண்மையில் அந்த வீடியோ என்ன என்று விசாரித்த போது, அடுக்கிவைக்கப்பட்டிருக்கும் நகைகள், கடந்த ஆண்டு இறுதியில் வேலூர் ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் திருடுபோனவை என்பதும் தெரியவந்தது..

கடந்த 2021ம் ஆண்டு, டிசம்பர் 14-ம் தேதி அன்று, வேலூரிலுள்ள ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையின் பின்பக்கச் சுவரைத் துளையிட்டுத் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. அதே 2021ம் ஆண்டு டிசம்பர் 20-ம் தேதி அன்று, அந்தக் கொள்ளையர்கள் காவல்துறையிடம் சிக்கினர். அதன் பின்னர், காவல்துறையினர் கொடுத்த பிரஸ் மீட்டில் எடுக்கப்பட்ட காணொளிதான் இன்று வரை திருப்பதி அர்ச்சகர் வீட்டில் கைப்பற்றப்பட்ட தங்க நகைகள் என்ற பொய்யான தகவலுடன் வேகமாகப் பரவிவருகிறது. வேலூர் ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் திருடுபோன நகைகளை தவறாக தலைப்பிட்டு பரப்பி வருகிறார்கள் என்பதை அறிய முடியும்.
இதனிடையே இப்படி பொய்யான தகவல் பரப்பிய நபரை டேக் செய்துள்ள, பாஜகவின் எஸ்ஆர் சேகர், இது பொய்யான செய்தி என்றும், வேலூர் ஜோய் ஆலுக்காஸ் கடையில் திருடப்பட்ட நகைகள் இவை என்றும் கூறினார். மேலும் எப்படியாவது பிராமணர்கள் மீது பழியை போட்டு அந்த சமூகத்தை சீரழிக்க வேண்டும் என்ற நயவஞ்சக புத்தியின் வெளிப்பாடு தான் இந்த வீடியோ என்றும் எஸ்ஆர் சேகர் குற்றம்சாட்டியுள்ளார்.

Fact Check
வெளியான செய்தி
திருப்பதி கோயிலில் பணியாற்றும் 16 அர்ச்சகர்களில் ஒருவரின் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. அப்போது 150 கோடி ரூபாய் பணம், 128 கிலோ தங்கம், 70 கோடி மதிப்புள்ள வைர நகைகள் ஆகியவை பிடிபட்டுள்ளதாக
முடிவு
கடந்த 2021ம் ஆண்டு, டிசம்பர் 14-ம் தேதி அன்று, வேலூரிலுள்ள ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையின் பின்பக்கச் சுவரைத் துளையிட்டுத் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. அதே 2021ம் ஆண்டு டிசம்பர் 20-ம் தேதி அன்று காவல்
ரேட்டிங்
-
சட்டுபுட்டுனு அள்ளிப் போடுங்க! தங்கத்தை வாங்கி குவிக்கும் ரிசர்வ் வங்கிகள்.. குறுக்கே வந்த மலேசியா! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம்












Click it and Unblock the Notifications