பாஜகவுக்கு ஆதரவளித்ததால்.. சந்திரபாபு நாயுடுவுக்கு எதிராக ஆந்திராவில் போராட்டமா? உண்மை இதுதான்
அமராவதி: ஆந்திராவில் பெரும்பான்மை வாக்குகளுடன் சட்டப்பேரவை தேர்தலிலும், லோக்சபா தேர்தலிலும் தெலுங்கு தேசம் கட்சி வெற்றிப்பெற்றிருக்கிறது. இந்நிலையில் அக்கட்சி பாஜகவுக்கு ஆதரவளிக்க எதிர்ப்பு தெரிவித்து ஆந்திராவில் போராட்டங்கள் நடப்பதாக தகவல்கள் பரவி வருகின்றன.
சமீபத்தில் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலின் முடிவுகள் வெளியாகி பெரும் விவாதங்களை கிளப்பியிருக்கிறது. கடந்த இரண்டு தேர்தல்களிலும் பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்த பாஜகவுக்கு இந்த முறை பெரும்பான்மை கிடைக்கவில்லை. எனவே கூட்டணி கட்சிகளுடன் ஆட்சியமைக்கிறது. தனியாக பாஜக 240 தொகுதிகளை ஜெயித்திருக்கிறது.

இது கடந்த முறையை விட 63 சீட்டுகள் குறைவு. எனவே கூட்டணியுடன் சேர்த்து 293 என பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சியமைக்கிறது. இந்த கூட்டணி பலத்தில் முக்கியமாக இரண்டு கட்சிகள் இருக்கின்றன. ஒன்று தெலுங்கு தேசம் கட்சி, மற்றொன்று ஐக்கிய ஜனதா தளம். எனவே இந்த கட்சிகளின் எம்பிக்களுக்கு மத்திய அமைச்சரவையில் முக்கிய இலாக்காக்கள் ஒதுக்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இப்படி இருக்கையில், ஆந்திராவில் போராட்டங்கள் வெடித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆந்திரா லோக்சபா தேர்தலில் நான்கு முனை போட்டி நிலவியது. ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி தனியாகவும், தெலுங்கு தேசம் கட்சி, பாஜக, ஜன சேனா கட்சி ஆகியவை சேர்ந்து ஒரு கூட்டணியாகவும், காங்கிரஸ் இடதுசாரிகள் என ஒரு கூட்டணியும், பகுஜன் சமாஜ் கட்சி தனியாகவும் போட்டியிட்டன.
#Breaking: மோடிக்கு ஆதரவு தருவதாக அறிவித்த சந்திரபாபு நாயுடுவுக்கு எதிராக ஆந்திரா முழுவதும் மக்கள் போராட்டம்!
— ஜீரோ நானே⭕ (@Anti_CAA_23) June 6, 2024
போராட்டத்தில் சந்திரபாபு நாயுடுவின் உருவப்படத்தை தீயில் எரித்ததால் பரபரப்பு..😳😳 pic.twitter.com/vSFbM4yMIi
இதில் தெலுங்கு தேசம் கட்சி மொத்தமுள்ள 25 இடங்களில் 16 தொகுதிகளில் தெலுங்கு தேசம் கட்சியும், 3ல் பாஜகவும், 2ல் ஜன சேனாவும் வெற்றி பெற்றன. மீதமுள்ள 4 தொகுதிகளில் ஒய்எஸ்ஆர் வெற்றி பெற்றது. அதேபோல சட்டப்பேரவை தேர்தலில், மொத்த முள்ள 175 தொகுதிகளில் 135ஐ கைப்பற்றி பிரமாண்ட வெற்றி பெற்றிருக்கிறது.

இந்நிலையில் மத்தியில் புதியதாக அமைய உள்ள பாஜக தலைமையிலான ஆட்சிக்கு தெலுங்கு தேசம் கட்சி ஆதரவளித்திருக்கிறது. இதற்கு எதிராக போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளதாக சோஷியல் மீடியாக்களில் தகவல்கள் பரவி வருகின்றன.
மோடிக்கு ஆதரவு தருவதாக அறிவித்த சந்திரபாபு நாயுடுவுக்கு எதிராக ஆந்திரா முழுவதும் மக்கள் போராட்டம் நடத்துக்கிறார்கள் என்றும், போராட்டத்தில் சந்திரபாபு நாயுடுவின் உருவப்படத்தை தீயில் எரித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளதாகவும் வீடியோ பரவி வருகிறது. டிவிட்டரில் இந்த வீடியோக்கள் டிரெண்ட் செய்யப்பட்டு வருகின்றன.
ஆனால் இந்த வீடியோ பழையது என தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த மே மாதம் 13ம் தேதி ஆந்திராவில் சட்டப்பேரவை தேர்தல் நடத்தப்பட்டது. அதற்கு ஒரு நாள் முன்னதாக, அதாவது மே 12ம் தேதியன்று ஒய்எஸ்ஆர் காங்கிரஸின் ஜெகன்மோகன் ரெட்டி ட்வீட் ஒன்றை பதிவிட்டிருந்தார். அதில், இந்த வீடியோவில் உள்ள புகைப்படம் இடம் பெற்றிருந்தது.
"சந்திரபாபு நாயுடுவை இந்த மாநிலம் நாளை நிரந்தரமாக நீக்க வேண்டும். நாளை மிகப்பெரிய திருவிழா நாள். வாக்களிப்பதன் மூலம் இதனை கொண்டாடுங்கள்" என இந்த புகைப்படத்தை பகிர்ந்து ஜெகன்மோகன் ரெட்டி கூறியிருந்தார். எனவே இதுபழைய வீடியோ என்று நிரூபணமாகியுள்ளது.

Fact Check
வெளியான செய்தி
ஆந்திராவின் சந்திரபாபு நாயுடு, மத்தியில் ஆட்சியமைக்க பாஜகவுக்கு ஆதரவளித்ததால் ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவுக்கு எதிராக போராட்டங்கள் வெடித்துள்ளன.
முடிவு
ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவுக்கு எதிராக போராட்டங்கள் வெடித்திருப்பதாக பகிரப்படும் வீடியோ பழையது.
ரேட்டிங்
-
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா?












Click it and Unblock the Notifications