சனி பெயர்ச்சி.. கருநீல கதிர்கள்.. திருநள்ளாறு கோவில் மீது பறக்கும் செயற்கைக்கோள்கள் ஸ்தம்பிக்கிறதா
காரைக்கால்: திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரர் கோவிலை கடக்கும் போது செயற்கைகோள்கள் சில நிமிடங்கள் நின்று செல்லும் என்ற தகவல்கள் நீண்ட காலமாகவே சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன. அந்த தகவல் உண்மையா? நிஜமாகவே செயற்கைக்கோள் நிற்குமா? விஞ்ஞானிகள் என்ன சொல்லியிருக்கிறார்கள் என்று பார்க்கலாம்.
நவ கிரகங்களில் சனி பகவான் இரண்டரை ஆண்டுகாலம் ஒருவரின் ராசியில் தங்கியிருந்து அதற்கான பலன்களைத் தருவார். திருக்கணித பஞ்சாங்கப்படி சனி பகவான் கும்ப ராசியில் பயணம் செய்தாலும் தற்போது வக்ர நிலையில் இருக்கிறார். நவம்பர் முதல் வக்ர நிவர்த்தியாகி நேர் கதியில் பயணம் செய்வார் சனி பகவான்.

சனி கிரகத்திற்கு பரிகார தலமாக திகழ்கிறது திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரர் கோவில். இங்குள்ள நள தீர்த்த குளத்தில் நீராடி சனி பகவானை வழிபட்டால் ஏழரை சனி, அஷ்டமத்து சனி, கண்டச்சனி ஆகியவற்றால் ஏற்படும் தோஷங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை.
காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் சனிக்கிழமைதோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், சனி பெயர்ச்சியின் போது லட்சக்கணக்கான பக்தர்களும் வருகை தந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். இந்த கோவிலில் இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் சனி பெயர்ச்சி விழா வருகிற டிசம்பர் மாதம் 20ஆம் தேதி மாலை 5.20 மணிக்கு நடைபெற உள்ளது. வாக்கிய பஞ்சாங்கப்படி இந்த கோவிலில் சனி பெயர்ச்சி விழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை செய்த அமைச்சர் சந்திர பிரியங்கா, செய்தியாளர்களிடம் பேசும் போது திருநள்ளாறு சனீஸ்வரர் கோவில் சனி பெயர்ச்சி விழாவில் நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாக கூறினார். சனி பெயர்ச்சி விழாவில், திருப்பதியைபோல் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து சாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட உள்ளது. பக்தர்களுக்கு தேவையான பாதுகாப்பு வசதிகள், வரிசை வளாகம், கட்டண வரிசை, இலவச வரிசை, பந்தல், வாகன பார்க்கிங் வசதி, குடிநீர், உணவு, கழிவறை உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகளை செய்ய ஏற்பாடுகளை சிறப்பாக செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆம்புலன்ஸ் உள்ளிட்ட மருத்துவ வசதிகளை தயார் நிலையில் வைத்திருக்கவும், உணவகங்களில் தரமான உணவு வழங்கவும், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதாக கூறினார்.
சனி பெயர்ச்சி வந்தாலே திருநள்ளாறு கோவில் பற்றிய செய்திகள் சமூக வலைத்தளங்களில் பரவத் தொடங்கும். நாசாவின் செயற்கைக்கோள் ஒன்று திருநள்ளாறு சனிபகவான் ஆலயத்தைக் கடக்கும்போது மூன்று நிமிடம் செயலிழந்ததாகவும், பின்னர் அந்தச் செயற்கைக்கோள் தானாகவே செயல்பட்டது எனவும் செய்தி பரவியது.
இந்தக்கோயிலைக் கடக்கும்போது எந்த ஒரு செயற்கைக்கோளும் மூன்று நிமிடங்கள் செயலிழக்குமாம். இதற்குக் காரணம், சனி என்று சொல்லப்படும் சனி கோளிலிருந்து கண்களுக்குப் புலப்படாத கருநீலக்கதிர்கள் அந்தக்கோயிலின் மீது ஒவ்வொரு நொடியும் விழுந்து கொண்டே இருக்கிறதாம். மேலும் இரண்டரை ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் சனிபெயர்ச்சியின்போது 45 நாள்கள் அந்தக் கதிர்களின் அடர்த்தி அதிகமாக இருக்குமாம்.
இந்தச் செய்தி சில செய்தித்தாள்களில்கூட வந்தது. தனியார் பள்ளியின் பாட புத்தகத்தில் கூட இடம் பெற்றிருந்தது. ஆனால், அதை மறுத்த சிலர் இது பொய்யான தகவல் என்பதை எழுதினர். இதுகுறித்து தமிழகத்தைச் சேர்ந்த இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை, விளக்கம் அளித்துள்ளார்.
இந்த தகவல் நீண்ட நாளாக சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒன்றாகும். இது உண்மையிலேயே தவறான ஒன்றாகும். இதுபற்றி இஸ்ரோவில் செயற்கைக்கோள் மையத்தின் இயக்குனராக பணிபுரிந்த மயில்சாமி அண்ணாதுரை ஏற்கனவே ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
'திருநள்ளாறு கோயில் மீது செயற்கைக் கோள்கள் செல்லும்போது எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை; அதனை நானே எனது குழுவினரை வைத்து பிரத்யேகமாக ஆய்வு செய்து உறுதிப்படுத்தியிருக்கிறேன்,'' என்று மயில்சாமி அண்ணாதுரை தெளிவாகக் கூறியுள்ளார். எனவே திருநள்ளாறு கோவில் மீது செயற்கைக்கோள் பறக்கும் போது சில நிமிடங்கள் நின்று செல்லும் என்பது பொய்யான தகவல் என்பது உறுதியாகியுள்ளது.
திருநள்ளாறு சென்று வந்தால் சனி பகவானால் ஏற்படும் கஷ்டங்கள் மறையும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில்தான் பக்தர்கள் இந்த கோவிலுக்கு வந்து செல்கின்றனர். ஏழரை சனியால் பாதிக்கப்பட்டு பல்வேறு துன்பங்களை சந்தித்த நள மகராஜாவே தனது சனி தோஷம் நீங்க இங்குதான் வந்து வழிபட்டதாக புராண கதைகள் சொல்கின்றன. எனவேதான் இங்குள்ள தீர்த்த குளத்திற்கு நள தீர்த்தம் என்ற பெயரும் உண்டானது என்பது குறிப்பிடத்தக்கது.

Fact Check
வெளியான செய்தி
திருநள்ளாறு சனி பகவான் கோவில் மீது செயற்கைக்கோள் கடக்கும் போது செயலிழந்து விடுகிறது என்ற தகவல் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது
முடிவு
திருநள்ளாறு சனி பகவான் கோவில் மீது செயற்கைக்கோள் பறக்கும் செயலிழந்து விடுகிறது என்று பரவும் தகவலில் உண்மையில்லை என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
ரேட்டிங்
-
இந்தியா கோட்டை விட்ட ‘தங்கமான’ வாய்ப்பு! ஈரான் போரை பயன்படுத்தி.. தட்டித் தூக்கிய சீனா! சூப்பர் பவர் -
காங்கிரஸ் கட்சியா இது? தேர்தல் அறிவிப்புக்கு முன்பாகவே அசாம் 2ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! -
கரூர் கேஸ்.. செந்தில் பாலாஜிக்கு மட்டுமல்ல.. "அவங்களுக்கும்" சம்மன் அனுப்பும் சிபிஐ.. பயங்கர செக்! -
4 மணி நேரம் கூட இருக்காது.. தேர்தல் அறிவிப்புக்கு முன்பு மம்தாவின் மாஸ்டர் ஸ்ட்ரோக்.. பாயும் பாஜக! -
தேர்தல் தேதிகளை அறிவித்த நொடி.. சட்டென தேனி வருசநாடு பற்றி பேசிய தேர்தல் ஆணையர்.. ஏன் தெரியுமா? -
போச்சு.. திமுக கூட்டணியில் முதல் விக்கெட்? பாஜக பக்கம் சாயும் பண்ருட்டி வேல்முருகன்? என்ன காரணம்? -
திமுக கூட்டணியில் தொடர்வது மறுபரிசீலனை செய்யப்படும்.. திடீரென டோனை மாற்றிய தவாக தலைவர் வேல்முருகன் -
Tamil Nadu Election 2026 Date: வெளியானது தமிழ்நாடு சட்டசபை தேர்தல் தேதி! எந்தெந்த தேதியில் என்னென்ன நடக்கும்? -
தோல்வியை ஒப்புக்கொண்ட அமெரிக்கா! ஈரான் முன் மண்டியிட்ட டிரம்ப்? குட்டி பாதையால் வீழ்ந்த வல்லரசு -
Rasi Palan: மகரம், கும்பம், மீனம் ராசிக்கான மார்ச் மாத பலன்.. அதிர்ஷ்டத்தை அள்ளப் போவது யார்? -
கான்ஃபிடண்டா இருங்க.. விஜய் வர்றாரு! எடப்பாடிக்கு பாஜக அனுப்பிய மெசேஜ்? இதனால் தான் கிளைமேக்ஸ் லேட்? -
ஏப்ரல் 23ம் தேதி தமிழக சட்டசபை தேர்தல்.. மே 4ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும்.. தேர்தல் ஆணையம்












Click it and Unblock the Notifications