ஸ்ரீவில்லிபுத்தூர் டூ மதுரை.. அரசு பேருந்து கட்டணம் அதிரடியாக உயர்வா? தமிழக அரசு விளக்கம்
சென்னை: ஸ்ரீவில்லிப்புத்தூரில் இருந்து மதுரை செல்லும் அரசு பேருந்தின் கட்டணம் ரூ.75-ல் இருந்து ரூ.100-ஆக முன்னறிவிப்பின்றி உயர்த்தப்பட்டதாக சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது. அரசுப்போக்குவரத்துக்கழகம் இராஜபாளையம் கிளை மூலம் தடம் எண் 940A தடப்பேருந்து இராஜபாளையம் திருச்சி வழித்தடத்தில் சென்ற பேருந்தில் டிக்கெட் கட்டணம்உயர்த்தப்பட்டதாக தகவல்கள் பரவின. ஆனால் அதில் உண்மை இல்லை என்றும், முற்றிலும் வதந்தி என்றும் தமிழக அரசின் உண்மை சரிபார்ப்பு குழு விளக்கம் அளித்துள்ளது.
மகளிர் உரிமை தொகை 5000 ரூபாய் இந்த மாதம் தமிழ்நாட்டில் உள்ள குடும்ப தலைவிகளுக்கு வரவு வைக்கப்பட்டது. இதையடுத்து பல்வேறு கட்டுக்கதைகள் சமூக வலைதளங்களில் பரவி வந்தன. உதாரணமாக 5000 பணத்தை திரும்ப அரசு எடுத்துக்கொள்ளும், வரிகளை உயர்த்தும் என்று பல்வேறு தகவல்கள் பரவின.

அப்படித்தான் ஸ்ரீவில்லிப்புத்தூரில் இருந்து மதுரை செல்லும் அரசு பேருந்தின் கட்டணம் ரூ.75-ல் இருந்து ரூ.100-ஆக முன்னறிவிப்பின்றி உயர்த்தப்பட்டதாக சமூக வலைத்தளத்தில் ஒரு அதிமுக ஆதரவாளர் பரப்பினார். இதனை பலரும் உண்மை என்று நம்பினார்கள். ஆனால் அது உண்மை இல்லை என்று தமிழக அரசின் உண்மை சரிபார்ப்பு குழு தனது எக்ஸ் தளபக்கத்தில் கூறியுள்ளது.
பரவிய செய்தி
ஸ்ரீவில்லிப்புத்தூரில் இருந்து மதுரை செல்லும் அரசு பேருந்தின் கட்டணம் ரூ.75-ல் இருந்து ரூ.100-ஆக முன்னறிவிப்பின்றி உயர்த்தப்பட்டதாக சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது..
உண்மை என்ன?
இது குளிர்சாதன பேருந்து, சாதாரண பேருந்தே 75 ரூபாய்.
ஸ்ரீவில்லிபுத்தூர் டூ மதுரை : அரசு பேருந்து கட்டணம் முன்னறிவிப்பின்றி உயர்த்தப்பட்டதாகப் பரவும் வதந்தி!
— TN Fact Check (@tn_factcheck) February 27, 2026
பரவிய செய்தி
ஸ்ரீவில்லிப்புத்தூரில் இருந்து மதுரை செல்லும் அரசு பேருந்தின் கட்டணம் ரூ.75-ல் இருந்து ரூ.100-ஆக முன்னறிவிப்பின்றி உயர்த்தப்பட்டதாக சமூக வலைத்தளத்தில்… https://t.co/jSpOAIUm6U pic.twitter.com/yAQwXoaazY
'அரசுப்போக்குவரத்துக்கழகம் இராஜபாளையம் கிளை மூலம் தடம் எண் 940A தடப்பேருந்து இராஜபாளையம் திருச்சி வழித்தடத்தில் குளிர்சாதன பேருந்து இயக்கம் செய்யப்பட்டு வருகிறது. அப்பேருந்திற்கு திருவில்லிபுத்தூரில் இருந்து மதுரைக்கு G.O Ms 48 நாள் 28.01.2018 -ன்படி குளிர்சாதன பேருந்திற்குரிய பயணக்கட்டணம் ரூ.100 வசூலிக்கப்பட்டுள்ளது. கூடுதல் பயணக்கட்டணம் ஏதும் வசூலிக்கப்படவில்லை. சாதாரண பேருந்தில் ரூ.75 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. எந்த கட்டண உயர்வும் செய்யப்படவில்லை' என்று மதுரை போக்குவரத்துக் கழக (விருதுநகர் மண்டலம்) உதவி மேலாளர் விளக்கமளித்துள்ளார்.
பொதுவாகவே தேர்தல் காலங்களில் பேருந்து கட்டணம், மின் கட்டணம் உள்பட பல்வேறு கட்டணங்கள் தொடர்பான வதந்திகள் பரவி வருவது வழக்கம். அதனை தமிழகஅரசின் தகவல் சரிபார்ப்பு மையம் அம்பலப்படுத்தி வருகிறது. இப்போது பல்வேறு தகவல்களை அம்பலப்படுத்தி உள்ளது.

Fact Check
வெளியான செய்தி
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூரில் இருந்து மதுரை செல்லும் அரசு பேருந்தின் கட்டணம் ரூ.75-ல் இருந்து ரூ.100-ஆக முன்னறிவிப்பின்றி உயர்த்தப்பட்டதாக சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது..
முடிவு
திருவில்லிபுத்தூரில் இருந்து மதுரைக்கு குளிர்சாதன பேருந்திற்குரிய பயணக்கட்டணம் ரூ.100 வசூலிக்கப்பட்டுள்ளது. சாதாரண பேருந்தில் ரூ.75 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. கட்டணம் உயர்த்தப்படவில்லை
ரேட்டிங்
-
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications