Gold Rate Today: ஒரே நாளில் 2 முறை எகிறிய தங்கம் விலை இன்று ‘கப்சிப்’.. நேற்றைய விலைக்கே விற்பனை!
சென்னை: தங்கம் விலை நேற்று ஒரே நாளில் சவரனுக்கு ரூபாய் 1,600 குறைந்த நிலையில் இன்றைய தங்கம் விலையில் மாற்றம் இல்லை. சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரன் ரூ.1,11,200க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராம் ரூ.13,900க்கு விற்பனையாகிறது.
தங்கம் விலை நாளுக்கு நாள் உயர்ந்து ரூ.1 லட்சத்து 10 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இது சாமானிய மக்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. ஏப்ரல் மாத தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகிறது. சர்வதேச சந்தைகளில் நிலவும் பொருளாதார மாற்றங்கள் மற்றும் முதலீட்டாளர்கள் காட்டும் ஆர்வம் போன்ற காரணங்களால் தங்கம் மற்றும் வெள்ளி விலையில் ஏற்ற இறக்கம் கண்டு வருகிறது.

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 24 ஆம் தேதி ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 குறைந்து, ரூ.1 லட்சத்து 12 ஆயிரத்து 800-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ.60 குறைந்து, ரூ.14 ஆயிரத்து 100 ஆக இருந்தது. தங்கம் விலை ஏப்ரல் 25 ஆம் தேதியன்று சவரனுக்கு ரூபாய் 800 உயர்ந்து ரூ.1,13,600க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.100 உயர்ந்து ரூ.14,200க்கு விற்பனை செய்யப்பட்டது.
5 நாட்களாக குறைந்து வந்த தங்கம் விலை, சனிக்கிழமை சவரனுக்கு 800 அதிகரித்திருந்தது. ஞாயிற்றுக்கிழமை விடுமுறையைத் தொடர்ந்து திங்கட்கிழமை (ஏப்ரல் 27) தங்கம் விலை கணிசமாக உயர்ந்தது. அதன்படி, 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,230க்கும், சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,13,840க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, தங்கம் விலை செவ்வாய்க்கிழமை சவரனுக்கு ரூ. 1,040 குறைந்து விற்பனையான நிலையில், நேற்று (புதன்கிழமை) காலை சவரனுக்கு ரூ. 1,200 குறைந்து ஒரு சவரன் ரூ. 1,11,600-க்கும் கிராமுக்கு ரூ.150 குறைந்து ரூ. 13,950-க்கும் விற்பனையானது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று மாலை வர்த்தகம் நிறைவடையும் தருவாயில் மீண்டும் குறைந்தது. சவரனுக்கு ரூ. 400 குறைந்து ஒரு சவரன் ரூ. 1,11,200-க்கும் கிராமுக்கு ரூ. 50 குறைந்து ஒரு கிராம் ரூ.13,900-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதன் மூலம் ஒரே நாளில் 1600 ரூபாய் விலை குறைந்ததது.
இந்நிலையில், இன்று (வியாழக்கிழமை) தங்கம் விலையில் எப்படியான மாற்றங்கள் இருக்கும் என்பது பெரும் எதிர்பார்ப்பாக இருந்தது. இந்நிலையில், தங்கம் விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லை. சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரன் ரூ.1,11,200க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராம் ரூ.13,900க்கு விற்பனையாகிறது.
கடந்த சில நாட்களில் தங்கம் விலை நிலவரம்
30.04.2026 - ஒரு சவரன் ரூ. 1,11,200 (இன்று)
29.04.2026 - ஒரு சவரன் ரூ. 1,11,200 (நேற்று மாலை)
29.04.2026 - ஒரு சவரன் ரூ. 1,11,600 (நேற்று காலை)
28.04.2026 - ஒரு சவரன் ரூ. 1,12,800
27.04.2026 - ஒரு சவரன் ரூ. 1,13,840
26.04.2026 - ஒரு சவரன் ரூ. 1,13,600
25.04.2026 - ஒரு சவரன் ரூ. 1,13,600
24.04.2026 - ஒரு சவரன் ரூ. 1,12,800
23.04.2026 - ஒரு சவரன் ரூ. 1,13,280
22.04.2026 - ஒரு சவரன் ரூ. 1,14,000
21.04.2026 - ஒரு சவரன் ரூ. 1,14,400
20.04.2026 - ஒரு சவரன் ரூ. 1,14,400
19.04.2026 - ஒரு சவரன் ரூ. 1,14,880
18.04.2026 - ஒரு சவரன் ரூ. 1,14,880
17.04.2026 - ஒரு சவரன் ரூ.1,13,680
16.04.2026 - ஒரு சவரன் ரூ. 1,14,880
15.04.2026 - ஒரு சவரன் ரூ. 1,14,560
14.04.2026 - ஒரு சவரன் ரூ.1,13,760
13.04.2026 - ஒரு சவரன் ரூ.1,12,480
12.04.2026 - ஒரு சவரன் ரூ. 1,12,800
11.04.2026 - ஒரு சவரன் ரூ.1,12,800
10.04.2026 - ஒரு சவரன் ரூ.1,13,000
09.04.2026 - ஒரு சவரன் ரூ.1,12,000
08.04.2026 - ஒரு சவரன் ரூ.1,13,600
07.04.2026 - ஒரு சவரன் ரூ.1,10,880
06.04.2026 - ஒரு சவரன் ரூ.1,11,920 (பிற்பகல்)
06.04.2026 - ஒரு சவரன் ரூ.1,10,480 (காலை)
05.04.2026 - ஒரு சவரன் ரூ.1,11,600 (நேற்று)
04.04.2026 - ஒரு சவரன் ரூ.1,11,600
03.04.2026 - ஒரு சவரன் ரூ.1,10,800
02.04.2026 - ஒரு சவரன் ரூ.1,10,000 (மாலை)
02.04.2026 - ஒரு சவரன் ரூ.1,11,600 (காலை)
01.04.2026 - ஒரு சவரன் ரூ.1,12,400












Click it and Unblock the Notifications