4% உயர்ந்த தங்கம் விலை.. ஈரான் - இஸ்ரேல் போர்.. குண்டுமணி தங்கமாவது வாங்குங்க.. வல்லுனர் வார்னிங்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஈரான் - இஸ்ரேல் போர் தொடங்கிய ஒரே நாளில் அமெரிக்காவில் spot gold விலையானது 1.3% உயர்ந்து உள்ளது.

இஸ்ரேல் ஈரான் மீது நடத்திய வான்வழித் தாக்குதல்களையடுத்து தங்கத்தின் விலை கிடுகிடுவென உயரும் என்று அமெரிக்க பொருளாதார வல்லுனர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் அதிகரித்ததன் காரணமாக, டாலர் மதிப்பு சரியும் வாய்ப்புகள் உள்ளன. உலக அளவில் மார்க்கெட் சரியும்.

gold rate silver investment

இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை நோக்கி படையெடுத்தனர். வேறு முதலீடுகள் எதுவும் பாதுகாப்பானதாக இருக்காது என்பதால்.. தங்கத்தை நோக்கி மக்கள் செல்ல தொடங்கி உள்ளனர்.

தங்கத்தின் விலை உயர்வு

ஈரான் - இஸ்ரேல் போர் தொடங்கிய ஒரே நாளில் அமெரிக்காவில் spot gold விலையானது 1.3% உயர்ந்து, ஒரு அவுன்ஸ் தங்கம் $3,428.10 ஆக இருந்தது. இது ஏப்ரல் மாதத்தில் இருந்த $3,500.05 என்ற வரலாற்று உச்சத்தை மீண்டும் நெருங்கி உள்ளது. இந்த வாரம் மட்டும் தங்கத்தின் விலை சுமார் 4% அதிகரித்துள்ளது.

RJO Futures நிறுவனத்தின் மூத்த சந்தை வியூக நிபுணர் டேனியல் பாவிலோனிஸ் கூறுகையில், "இஸ்ரேல் ஈரானிய இலக்குகளைத் தாக்கியதால் சந்தையில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. ஈரான் பதிலடி கொடுக்க தொடங்கி விட்டதால்.. நிலைமை மோசமாகி உள்ளது. இதனால் சந்தையில் தங்கத்தின் மதிப்பு தொடர்ந்து உயரும் நிலை ஏற்பட்டு உள்ளது. தங்கம் மட்டுமே இப்போதைக்கு பாதுகாப்பாக இருக்கும். மற்ற சந்தை மதிப்புகள் கடுமையாக சரியும் என்பதால் தங்கம் மட்டுமே பாதுகாப்பாக இருக்கும் என்று அவர் எச்சரித்து உள்ளது.

உயரும் தங்கம் விலை

அமெரிக்காவில் பணவீக்கம் குறைந்ததால், பெடரல் ரிசர்வ் வட்டி விகிதங்களை குறைக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இது தங்கத்தின் விலையை மேலும் உயர்த்தியுள்ளது. பொதுவாக தங்கம் பொருளாதார நெருக்கடி மற்றும் புவிசார் அரசியல் கொந்தளிப்பு காலங்களில் பாதுகாப்பான முதலீடாக கருதப்படுகிறது. மேலும், வட்டி விகிதங்கள் குறைவாக இருக்கும்போது தங்கம் சிறப்பாக செயல்படும்.

Goldman Sachs கணிப்பின்படி, மத்திய வங்கிகளின் தொடர்ச்சியான தங்கக் கொள்முதல் காரணமாக, 2025 இறுதிக்குள் தங்கத்தின் விலை $3,700/toz ஆகவும், 2026 நடுப்பகுதியில் $4,000 ஆகவும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. Bank of America அடுத்த 12 மாதங்களில் தங்கம் $4,000/oz வரை உயரும் என்று கணித்துள்ளது. சென்னை நகரில் இன்று 1 கிராம் 24 கேரட் தங்கம் விலை ₹10,141 ஆக உள்ளது, இதேபோல் 1 கிராம் 22 கேரட் தங்கம் விலை ₹9,296 ஆகவும், 1 கிராம் 18 கேரட் தங்கம் விலை ₹7,651 ஆகவும் உள்ளது.

ஈரான் இஸ்ரேல் போர்

ஈரான் அணு ஆயுதங்கள் தயாரிப்பதைத் தடுக்கும் நோக்கில், இஸ்ரேல் வெள்ளிக்கிழமை அன்று ஈரான் மீது தொடர்ச்சியான தாக்குதல்களை நடத்தியது. அணு உலைகள் மற்றும் ஏவுகணை தொழிற்சாலைகளை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாகவும், ராணுவ தளபதிகளை கொன்றதாகவும் இஸ்ரேல் தெரிவித்தது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரான் தனது அணு ஆயுத திட்டத்தை கட்டுப்படுத்த அமெரிக்கா விதித்த கெடுவை மீறியதால் இந்த தாக்குதல் தவிர்க்க முடியாததாகிவிட்டது என்று கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+