Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அலறுது அமெரிக்கா.. தங்க விலை சரியப் போகுதாமே! தங்கம் வாங்க இதுதான் வாங்க நல்ல நேரம்! முக்கிய அட்வைஸ்

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: உலக பொருளாதாரத்தில் பெரும் அழுத்தம் நிலவி வரும் சூழ்நிலையில், தங்கத்தின் விலை இந்த வாரம் கணிசமான ஏற்றத்தாழ்வுகளை சந்திக்கப் போகிறது என்று சந்தை நிபுணர்கள் எச்சரித்து வருகின்றனர். அமெரிக்காவின் வேலைவாய்ப்பு தரவுகள், அமெரிக்க பெடரல் ரிசர்வ் கூட்டம், பெட் தலைவர் ஜெரோம் பவல் வழங்க உள்ள உரை போன்ற முக்கிய நிகழ்வுகள் என அனைத்தும் இந்த வாரத்தில் நடக்க இருப்பதால், தங்கத்தின் விலை எந்த திசை நோக்கிச் செல்லும் என்பது குறித்து முதலீட்டாளர்கள் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது.

கடந்த சில வாரங்களாக அமெரிக்க பொருளாதாரம் பலவீனமடைந்து வரும் அறிகுறிகள் தென்படத் துவங்கியுள்ளன. தொடர்ந்து சரிவில் இருக்கும் வேலைவாய்ப்பு தரவுகள், மந்தமான வளர்ச்சி வீதம் மற்றும் அரசாங்க முடக்கம் போன்ற காரணிகள், பெட் வட்டி விகிதக் கொள்கையில் மாற்றம் செய்யும் சூழ்நிலையை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கை முதலீட்டாளர்களிடையே உருவாகியுள்ளது.

இதனால் தங்கத்தின் விலை நிலவரம் மீதான் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் வரும் காலங்களில் தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கம் மிகவும் கடுமையாக இருக்கும் என பொருளாதார நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.

Gold Gold Price us

தங்கம் விலை

இந்த நிலையில் இந்திய சந்தையில் கடந்த வாரம் MCX-இல் தங்கத்தின் டிசம்பர் விலை சுமார் 2% உயர்ந்திருந்தது. ஆனால் வெள்ளிக்கிழமை மட்டும் தங்கத்தின் விலை ரூ.3,190 வரை சரிந்து ரூ.1,23,561-க்கு முடிவடைந்தது. லாபம் எடுப்பதறாக முதலீட்டாளர்கள் தங்கத்தை அதிகமாக விற்பனை செய்தது இந்த திடீர் சரிவுக்கு முக்கிய காரணமாகும். இதே போல், உலகளாவிய சந்தையான Comex-இலும் தங்கம் 100 அமெரிக்க டாலருக்கே மேல் சரிந்து 4,094.2 என்ற அளவுக்கு சரிந்தது. வெள்ளி விலையும் கூட 4% க்கும் மேல் சரிவைச் சந்தித்தது.

தங்கம் விலை ஏற்றத்தாழ்வு

அமெரிக்காவில் 43 நாட்களுக்கு நீடித்த அரசாங்க முடக்கம், வேலைவாய்ப்பு தரவுகள் தாமதமாக வெளியானது, பவல் உள்ளிட்ட பெட் அதிகாரிகளின் உரைகள் ஆகியவை அனைத்தும் சந்தையில் தெளிவின்மையை ஏற்படுத்தியுள்ளது. இதனால் தங்கம் மற்றும் வெள்ளி விலைகளில் இந்த வாரமும் அதேபோன்ற அதிர்வு தொடரும் என நிபுணர்கள் கருதுகின்றனர். எனினும், இந்த நெருக்கடியான சூழ்நிலையில் கூட தங்கத்திற்கு நல்ல ஆதரவு உருவாகும் என பல ஆய்வாளர்கள் உறுதியாக கூறுகின்றனர்.

காமெக்ஸ் சரிவு

குறிப்பாக ETFs கடந்த காலங்களில் 1 லட்சம் அவுன்ஸுக்கு மேல் தங்கத்தை வாங்கியுள்ளன. ஆண்டு முழுவதும் 17% உயர்வுடன் இதன் மொத்த மதிப்பு USD 480 மில்லியன் வரை சென்றுள்ளது. இது தங்கத்தின் எதிர்கால விலையில் வலுவான விலை உயர்வுக்கான சிக்னலாக இருக்கும் என்று பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.

தங்கம் முதலீடு

இந்த வாரம் அமெரிக்க தரவுகள் மேலும் பலவீனமானதாய் இருந்தால் தங்கம் 4,200 அமெரிக்க டாலரை தாண்டும் என்றும், இதே நிலையில் தொடர்ந்தால் 4,300 முதல் 4,385 டாலர் வரை கூட செல்லும் வாய்ப்பு இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அதனால் தங்கம் குறுகிய காலத்திற்கு சரிந்தாலும், இது நீண்டகால முதலீட்டாளர்களுக்கு தங்கம் வாங்குவதற்கான நல் வாய்ப்பாக இருக்கும் எனவும், தங்கம் வாங்க இதுவே நல்ல நேரம் என்கின்றனர் பொருளாதார நிபுணர்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+