’வாம்மா மின்னலு’ மாதிரி..சர்ருனு எகிறும் ரேட்! தங்கம் வெள்ளி இன்னும் அதிகரிக்குமா? என்ன தான் காரணம்?
சென்னை: தங்கம் விலை நேற்று தொடர்ந்து இரண்டாவது முறையாக உயர்ந்து, புதிய வரலாற்று உச்சத்தை தொட்டுள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,320 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,15,320-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், ஒரு கிராமிற்கு ரூ.515 உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.14,415-க்கு விற்பனையாகி வருகிறது. தங்கம் மட்டுமின்றி வெள்ளி விலையும் கடும் ஏற்றத்தைக் கண்டுள்ளதால், பொதுமக்கள் மற்றும் இல்லத்தரசிகள் மத்தியில் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இந்திய பங்குச் சந்தைகளில் ஏற்பட்ட சரிவும் தங்கம், வெள்ளிவிலைஉச்சத்டைத் தொட ஒரு காரணம் என்கின்றனர்.
கடந்த மாதம் டிசம்பர் 15ஆம் தேதி முதன்முறையாக ஒரு சவரன் தங்கம் ரூ.1 லட்சத்தை தாண்டியது. அதன் பின்னர் சிறிது நாட்கள் விலை குறைந்த நிலையில், டிசம்பர் 22-ஆம் தேதியிலிருந்து மீண்டும் ஏற்றம் காணத் தொடங்கியது.
கடந்த மாதம் 28-ஆம் தேதி புதிய உச்சத்தை எட்டிய தங்கம் விலை, அதன் பின்னர் திடீரென சரிவடைந்தது. ஆனால், கடந்த ஒரு வாரமாக தங்கம் விலை தொடர்ந்து உயர்வையே சந்தித்து வருகிறது. இந்த நிலையில், கடந்த 19-ஆம் தேதி ஒரு கிராம் தங்கம் ரூ.13,450-க்கும், ஒரு சவரன் ரூ.1,07,600-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

தங்கம் விலை உச்சம்
நேற்று முன்தினம் காலை நேரத்தில் கிராமுக்கு ரூ.160-மும், சவரனுக்கு ரூ.1,280-மும் உயர்ந்தது. அதே நாளின் பிற்பகலில் மேலும் கிராமுக்கு ரூ.290-மும், சவரனுக்கு ரூ.2,320-மும் அதிகரித்தது. இதனால் ஒரே நாளில் மட்டும் கிராமுக்கு ரூ.450-மும், சவரனுக்கு ரூ.3,600-மும் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.13,900-க்கும், ஒரு சவரன் ரூ.1,11,200-க்கும் விற்பனையானது. இதன் மூலம் தங்கம் விலை இதுவரை இல்லாத அளவுக்கு உச்சத்தை எட்டியது.
தங்கம் விலை என்ன?
கடந்த ஒரு வார காலத்தில் மட்டும் தங்கம் விலை கிராமுக்கு ரூ.730-மும், சவரனுக்கு ரூ.5,840-மும் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த வரிசையில், நேற்று மீண்டும் தங்கம் விலை உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது. காலை நேரத்தில் சவரனுக்கு ரூ.2,800 உயர்ந்து ரூ.1,14,000-க்கு விற்பனையான நிலையில், பிற்பகலில் மேலும் உயர்ந்து மொத்தமாக ஒரே நாளில் சவரனுக்கு ரூ.4,120 உயர்ந்துள்ளது.
வெள்ளி விலை
தங்கத்தைப் போலவே வெள்ளி விலையும் கடும் ஏற்றத்தை சந்தித்து வருகிறது. நேற்று முன்தினம் காலையில் கிராமுக்கு ரூ.12-மும், கிலோவுக்கு ரூ.12,000-மும் உயர்ந்த நிலையில், பிற்பகலில் மேலும் கிராமுக்கு ரூ.10-மும், கிலோவுக்கு ரூ.10,000-மும் அதிகரித்தது. இதனால் ஒரே நாளில் கிராமுக்கு ரூ.22 உயர்ந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ.340-க்கும், ஒரு கிலோ ரூ.3,40,000-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
பொருளாதார நிபுணர்கள்
தற்போது வெள்ளி விலை மேலும் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.345-க்கும், ஒரு கிலோ ரூ.3,45,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் வெள்ளி விலை ஒரு கிலோ ரூ.3.5 லட்சத்தை தாண்டும் என கணிக்கப்பட்ட நிலையில், அது இந்த மாத இறுதிக்குள்ளாகவே அந்த அளவை எட்டும் வாய்ப்பு இருப்பதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
தங்கம் மற்றும் வெள்ளி விலை
தங்கம் மற்றும் வெள்ளி விலைகளில் ஏற்பட்டுள்ள இந்த வரலாற்று உயர்வுக்கு பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. அதில் முக்கியமான காரணமாக இந்திய பங்குச் சந்தையின் தொடர் சரிவு குறிப்பிடப்படுகிறது. பொருளாதார ரீதியாக பங்குச் சந்தைக்கும் தங்கம் விலைக்கும் தலைகீழ் தொடர்பு உள்ளது. பங்குச் சந்தை சரியும் போது, முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கம் மற்றும் வெள்ளியை நோக்கிச் செல்லும் போக்கு அதிகரிக்கிறது.
பங்குச் சந்தை குறியீடுகள்
அந்த வகையில், நேற்று பங்குச் சந்தை குறியீடுகள் சிவப்பு நிறத்தில் முடிவடைந்ததன் எதிரொலியாக, முதலீட்டாளர்கள் தங்கம் மற்றும் வெள்ளியில் அதிக அளவில் முதலீடு செய்யத் தொடங்கியதாக கூறப்படுகிறது. இதற்கு மேலாக, சர்வதேச வர்த்தக போர் காரணமாக உலக சந்தைகளில் ஏற்பட்டுள்ள குழப்பம், இந்திய சந்தையில் இருந்து வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வெளியேறுவது, அமெரிக்க டாலருடன் ஒப்பிடும்போது இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சி ஆகியவையும் தங்கம், வெள்ளி விலை உயர்வுக்கு முக்கிய காரணங்களாக சொல்லப்படுகின்றன. இதனால் வரும் நாட்களிலும் தங்கம் மற்றும் வெள்ளி விலை ஏற்ற இறக்கங்களுடன் தொடரும் என பொருளாதார நிபுணர்கள் கணிக்கின்றனர்.
-
கோல்டு ETF, வெள்ளி ETF-களில் முதலீடு செய்தவர்கள் கண்ணீர்.. திடீரென சரிவது ஏன்? அடுத்து என்ன செய்ய வேண்டும்? -
Gold Price Today: தடாலடியாக சரிந்த தங்கம் விலை.. 8 நாளில் 8,000 சரிவு.. குஷியில் நகை பிரியர்கள்! இன்றைய ரேட் என்ன? -
தாறுமாறாக சரிந்த தங்கம்.. தொடர்ந்து இன்னும் சரியுமா? விலை வீழ்ச்சிக்கு காரணம் என்ன? -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்?












Click it and Unblock the Notifications