தங்கக் கோட்டை "பிஸ்கட்டில்" அமெரிக்கா.. தங்க நகைகளை பீரோவில் பூட்டி? தங்கத்துக்கு மரியாதை: பிரபலம்
சென்னை: உலகத்திலேயே இந்தியாவில்தான் அதிக தங்கம் உள்ளது.. ஆனால், தங்கத்தின் விலையை பெட்ரோலுடன் சேர்த்து கொள்கிறார்கள்.. பெட்ரோல் விலை ஏறினால் தங்கம் விலையும் ஏறுது.. இதை எல்லாம் கட்டுப்பாட்டில் வைத்து கொண்டிருக்கிறது அமெரிக்கா.. இதை உடைக்கவே முடியல.. சதாம் உசேன் அதில் கை வைக்க பார்த்தார். உடனே கொன்னுட்டாங்க" என்று டாக்டர் காந்தராஜ் பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார்.
BBT Cinemas என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள அரசியல் விமர்சகர் டாக்டர் காந்தராஜ், "ஒரு செம்பு, பித்தளை, இரும்பு போன்ற பல பொருட்கள் அன்றாய வாழ்க்கைக்கு பல வகைகளில் தேவைப்படுகிறது.. ஆனால், இந்த தங்கம் எதுக்குமே பிரயோஜனம் இல்லாத உலோகம்.. நகையை தவிர வேறு என்ன தங்கத்தில் என்ன செய்ய முடியும்? அன்றாட வாழ்க்கையில் தங்கத்தின் தேவை என்ன?

எல்லா வகைகளிலும் பயன்படக்கூடிய இரும்பு, குப்பையில் போடுகிறார்கள்.. ஒன்றுக்குமே உபயோகப்படாத தங்கத்தை பூட்டி வைத்து கொள்கிறார்கள்.. இதுதான் மனிதன்.. எதை பூட்டி வைக்க வேண்டும், எதை தூற்ற வேண்டும் என்று மனிதனுக்கு தெரிவதில்லை.
தங்க நகைகள் விலை
இந்தியர்கள் மாதிரி தங்கத்தை வீணாக்குபவர்கள் யாருமே கிடையாது என்கிறார்கள்.. அதனால்தான் மொரார்ஜி தேசாய் பிரதமரானபோது, தங்கக் கட்டுப்பாட்டை கொண்டு வந்தார்.. அப்போது நகை செய்வதற்கு தங்கத்தை பயன்படுத்தக்கூடாது என்ற வகையில் ஏதோ விதிக்கப்பட்டது. உடனே நகைக்கடைகளை மூடும் அளவுக்கு அன்று செய்துவிட்டது..
இதன்காரணமாக தங்கம் எல்லாம் அரசுக்கு வந்து சேர்ந்தது.. அரசிடம், தங்கம் இருப்பு இருந்தால்தான், ரூபாய் மதிப்பு அதிகமாகும்.. டாலருக்கு நிகராக உயர்ந்தது.. எனவே, இன்றும்கூட இந்தியா ஏழை நாடு கிடையாது.. இந்திய பெண்களிடம் உள்ள நகைகளை வாங்கி வங்கியில் போட்டு வைத்தால், உலகிலுள்ள மற்ற நாடுகளைவிட அதிகமான தங்கம் நம்மிடம்தான் இருக்கும். ஆனால் தங்க நகைகள் எல்லாம் இன்று நம்முடைய பொருளாதாரத்துக்கு பயன்படாமல் போய்விட்டது.
கரியை அடுப்பில் எரித்து சமையல் செய்யலாம்.. அதே கரி மின்னும்போது அது வைரமாகிறது.. உடனே தூக்கி உள்ளே வைத்து கொள்கிறார்கள்.
வைரம், தங்கத்தின் பயன்பாடு
டைரக்டர் கே.கோபாலகிருஷ்ணன் அந்த காலத்தில் ஒரு வசனம் எழுதினார்.. "என்னிடத்தில் இருந்து பிறந்ததுதானே தங்கம், வைரமும்.. அவை மட்டும் இரும்பு பெட்டியில் இருக்கும்போது, நான் மட்டும் ஏன் தரையில் இருக்க வேண்டும் என்று மண் ஆசைப்படக்கூடாது" என்று எழுதியிருந்தார்.. காரணம் மண்ணிலிருந்துதான் தங்கம், வைரம் பிறந்தன.. ஆனால் தங்கம் இல்லாமல் நாம் வாழ முடியும்.. இந்த மண் இல்லாவிட்டால் நம்மால் இங்கே தரையில் நிற்ககூட முடியாது..
தங்களது கவுரவத்தை காட்டி கொள்வதற்காக பளபளவென அணிந்து கொள்ள உதவுகிறது தங்கம், வைரம்.. அந்தவகையில் வெறும் அரை மணி நேர பயன்பாடு மட்டுமே..
இன்று உலக பொருளாதாரம் தங்கத்தை அடிப்படையாக வைத்துதான் உள்ளது.. அமெரிக்காவை ஏன் பணக்கார நாடு என்கிறோம் தெரியுமா? அங்கே ஃபோர்ட் நாக்ஸ் என்கிற ஒரு கோட்டை உள்ளது. அதுதான் அவர்களது ரிசர்வ் வங்கியின் தங்கத்தை இருப்பு வைத்திருக்கும் இடமாகும்..
தங்க கட்டிகள் கோட்டை
அந்த கோட்டைக்குள் என்ன இருக்கிறது என்று ஒரேஒரு முறை போட்டோ வெளியானது.. அதில் செங்கல்லை அடுக்கி வைத்ததுபோல தங்க கட்டிகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.. 20 அடி உயரம், 15 அடி உயரத்துக்கு சுவர் போல அந்த தங்க கட்டிகள் உயரமாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளன..
அந்த கோட்டைக்குள் செல்லும்போது, இரும்பு ஹெல்மெட், இரும்பு செருப்புகளை அணிந்து செல்ல வேண்டும்.. காரணம், தங்க கட்டிகள் மேலிருந்து தவறி கீழே விழுந்தால், மனிதனின் கால் உடைந்துவிடுமாம்.. அந்த அளவுக்கு எடை அதிகமாக இருக்கும்.. அத்தனை தங்கம் அங்கு இருப்பதால்தான், அமெரிக்கா டாலர் விழுவதே கிடையாது..
பிரணாப் முகர்ஜி
பிரணாப் முகர்ஜி நிதியமைச்சராக இருந்தபோது, இந்தியாவின் ரூபாய் மதிப்பு திடீரென உலக சந்தையில் அடிவாங்கியது.. அப்போது வேறு வழியில்லாமல், ரிசர்வ் வங்கியில் நாம் வைத்திருந்த தங்கத்தை விற்றுதான், ரூபாயின் மரியாதையை காப்பாற்றினோம்..
அப்போது விற்பனை செய்வதற்காக அந்த தங்கங்களை லாரியில் ஏற்றும்போது, இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் போட்டோ எடுத்து போட்டுவிட்டார்கள்.. நாடு இவ்வளவு மோசமான நிலைமைக்கு போய்விட்டது என்று தலைப்பில் அந்த போட்டோ வெளியாகியிருந்தது.
தங்கம் - பெட்ரோல் - மோடி
உலகத்திலேயே இந்தியாவில்தான் அதிக தங்கம் உள்ளது.. ஆனால், தங்கத்தின் விலையை பெட்ரோலுடன் சேர்த்து கொள்கிறார்கள்.. பெட்ரோல் விலை ஏறினால் தங்கம் விலையும் ஏறுது.. இதை எல்லாம் கட்டுப்பாட்டில் வைத்து கொண்டிருக்கிறது அமெரிக்கா.. இதை உடைக்கவே முடியல.. சதாம் உசேன் அதில் கை வைக்க பார்த்தார். உடனே கொன்னுட்டாங்க..
ரஷ்யா கை வைக்க பார்த்தது.. சோவியத் யூனியனையே அடித்து தூளாக்கிவிட்டது.. இப்போ மோடி கை வைக்க பார்த்தார்.. கதை கந்தலாகிவிட்டது.. அவர்களின் ஆக்கிரமிப்பால் நம்மால் எதுவுமே செய்ய முடியல.. Biggest Fire.. ஏற்றுமதிக்கு அமெரிக்காவை விட்டால் இடமே கிடையாது.. எந்த உற்பத்தி என்றாலும் அமெரிக்க மார்க்கெட்டையே நம்பியிருக்க வேண்டியிருக்கிறது" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.
உலகத்திலேயே இந்தியாவில்தான் அதிக தங்கம் உள்ளது.. ஆனால், தங்கத்தின் விலையை பெட்ரோலுடன் சேர்த்து கொள்கிறார்கள்.. பெட்ரோல் விலை ஏறினால் தங்கம் விலையும் ஏறுது.. இதை எல்லாம் கட்டுப்பாட்டில் வைத்து கொண்டிருக்கிறது அமெரிக்கா.. இதை உடைக்கவே முடியல.. சதாம் உசேன் அதில் கை வைக்க பார்த்தார். உடனே கொன்னுட்டாங்க" என்று டாக்டர் காந்தராஜ் பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications