Gold Rate Today: இன்று அதிர்ச்சி கொடுக்க போகுது தங்கம் விலை.. ரேட் வேற இப்படி ஏறுதே.. பொதுமக்கள் அதிர்ச்சி
சென்னை: அமெரிக்காவில் அரசு பத்திரங்களின் வருவாய் திடீரென குறைந்ததால் தங்கத்தின் விலை நேற்று புதன்கிழமை உயர்ந்தது. இதன் காரணமாக இன்றைய தினம் இந்தியாவிலும் தங்கம் விலை உயரும் என்றே தெரிகிறது. இருப்பினும், அமெரிக்க மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ் அடுத்த வாரம் எடுக்கவுள்ள வட்டி விகித முடிவுகளை பொறுத்தே தங்கம் விலை இருக்கும்.
அமெரிக்காவின் 10 ஆண்டு கால அரசு பத்திரங்களின் வருவாய் தொடர்ந்து இரண்டாவது நாளாக குறைந்தது. இதனால் தங்கத்தை நோக்கி முதலீட்டாளர்கள் திரும்ப ஆரம்பித்தனர். இதனால் சர்வதேச சந்தையில் தங்கம் விலை லேசாக உயர்ந்தது.

சர்வதேச சந்தை
சர்வதேசச் சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 0.3% உயர்ந்து 4,137.94 டாலராக இருந்தது. அமெரிக்காவில் டிசம்பர் மாத டெலிவரிக்கான கோல்ட் ப்யூச்சர்ஸ் 0.2% உயர்ந்து 4,150 டாலரில் வர்த்தகமானது..
இப்போதைக்கு முதலீட்டாளர்களின் முழு கவனம் அக்டோபர் 27, 28 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள பெடரல் ரிசர்வ் கூட்டத்தின் மீது திரும்பியுள்ளது. அடுத்த வாரம் வெளியாகவுள்ள அமெரிக்காவின் பணவீக்க அறிக்கையும் முக்கியமானது. இந்த இரண்டும் தான் தங்கத்தின் விலையை நிர்ணயம் செய்யும் விஷயமாக இருக்கும்.
வட்டி விகிதம்
தற்போதைய சூழலில் இந்த மாதம் வட்டி விகிதம் உயர்த்தப்பட வாய்ப்பு குறைவு. அதேநேரம் டிசம்பர் மாதம் வட்டி விகிதம் உயர்த்தப்பட வாய்ப்பு அதிகம். இதனால் டிசம்பர் மாதம் வரை தங்கம் விலையில் பெரியளவில் ஏற்றமும் இருக்காது இறக்கமும் இருக்காது. இதே ரேஞ்சிற்குள் சுற்றி சுற்றி வரும் என்கிறார்கள் வல்லுநர்கள்.
அதேநேரம் டிசம்பர் மாதம் அமெரிக்க பெடரல் ரிசர்வ் வட்டி விகிதத்தை உயர்த்த 88% வாய்ப்பு இருக்கிறது. அப்படி உயரும்போது தங்கம் விலை சட்டென குறையும். பொதுவாக பணவீக்கத்துக்கு எதிரான பாதுகாப்பான முதலீடாக தங்கம் கருதப்படுகிறது. ஆனால், வட்டி விகிதங்கள் உயரும்போது வட்டி வருவாய் தரும் முதலீடுகளின் மீதான ஈர்ப்பு அதிகரிப்பதால், தங்கத்தின் முதலீடு எப்போதுமே குறையும்.
தங்கம் விலை
சென்னையில் நேற்றைய தினம் தங்கம் விலை சரிந்தது. ஒரு சவரன் தங்கம் விலை ரூ.800 குறைந்து, ரூ.1,07,120க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் விலை ரூ.100 குறைந்து, ரூ.13,390 விற்பனையானது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து, ரூ.230க்கு விற்கப்பட்டது..
கடந்த சில நாட்களில் தங்கம் விலை
21-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,07,120
20-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,07,920
19-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,08,560
18-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,08,280
17-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,08,280
16-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,08,120
15-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,08,120
14-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,08,720


Click it and Unblock the Notifications
