Gold Rate Today: ரூ.76 ஆயிரத்தை நெருங்கிய தங்கம் விலை.. சென்னையில் ஒரு சவரன் ரூ.75,760க்கு விற்பனை
சென்னை: கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக தங்கம் விலை வரலாற்றில் இல்லாத அளவில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இன்று தங்கம் ஒரு கிராமுக்கு ரூ. 70 உயர்ந்து ரூ.9,470க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் சவரனுக்கு ரூ.560 உயர்ந்து, ஒரு சவரன் ரூ. ரூ.75,760க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை தங்கம் விலை குறைய வேண்டும் என்பதே சாமானிய மக்களின் எண்ணமாக உள்ளது. ஆடி மாதம் நிறைவடைய உள்ள நிலையில், திருமண சீசன் விரைவில் தொடங்க உள்ளது. இதனால் ஆடி மாதத்திலேயே பலரும் அதிகளவில் தங்கம் வாங்க வேண்டிய சூழலில் இருக்கின்றனர். கடந்த மாதம் இறுதி வரை நிலையாக இருந்து வந்த தங்கம் விலை, ஆகஸ்ட் மாதம் தொடங்கியதில் இருந்தே ஏற்றம் கண்டு வருகிறது.

வரலாறு காணாத உச்சம்
அதிலும் கடந்த 4 நாட்களாக வரலாற்றில் காணாத உச்சத்திற்கு தங்கம் விலை அதிகரித்துள்ளது. ஆகஸ்ட் 1ஆம் தேதி ஒரு சவரன் தங்கம் ரூ.73 ஆயிரமாக இருந்த சூழலில், நேற்று ஒரு சவரன் ரூ.75 ஆயிரத்தை கடந்துவிட்டது. இதற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் வரி விகிதமும் ஒரு காரணமாக அமைந்துள்ளது. அமெரிக்க அதிபராக டிரம்ப் வந்ததில் இருந்தே தங்கம் விலை உச்சத்திலேயே இருக்கிறது.
8 நாட்களாக உயரும் தங்கம் விலை
நேற்றைய நிலையை பொறுத்தவரை தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 அதிகரித்து புதிய உச்சத்தை எட்டியது. இதனால் சென்னையில் தங்கம் ஒரு கிராம் ரூ.9,400க்கும், ஒரு சவரன் ரூ.75,200க்கு விற்பனையாகி வந்தது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கடந்த 8 நாட்களாக தொடர்ச்சியாக தங்கம் விலை அதிகரித்து வரும் சூழலில், இன்றாவது குறையுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டிருந்தது.
தங்கம் வாங்க நல்ல நாள்
ஆடி வெள்ளிக்கிழமையான இன்று தங்கம் வாங்குவதற்கு நல்ல நாள் என்பதால், பலரும் நகை வாங்கு குவிவார்கள் என்று பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இன்றும் தங்கம் விலை அதிகரித்திருக்கிறது. சென்னையில் இன்று தங்கம் ஒரு கிராமுக்கு ரூ. 70 உயர்ந்து ரூ.9,470க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் சவரனுக்கு ரூ.560 உயர்ந்து, ஒரு சவரன் ரூ. ரூ.75,760க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
கடந்த சில நாட்களாக தங்கம் விலை
07.08.2025 - ஒரு சவரன் ரூ.75,200
06.08.2025 - ஒரு சவரன் ரூ. 75,040
05.08.2025 - ஒரு சவரன் ரூ.74,960
04.08.2025 - ஒரு சவரன் ரூ.74,360
03.08.2025 - ஒரு சவரன் ரூ.74,320
02.08.2025 - ஒரு சவரன் ரூ.74,320
01.08.2025 - ஒரு சவரன் ரூ.73,200
31.07.2025 - ஒரு சவரன் ரூ.73,360












Click it and Unblock the Notifications