Gold Rate Today: தொடர்ந்து சரியும் தங்கம் விலை.. மக்கள் ரொம்பவே ஹேப்பி! இன்று ரேட் எவ்வளவு
சென்னை: கடந்த ஒரு வாரமாகவே உயர்ந்து தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்து வந்தது வந்தது. இதனால் நகை பிரியர்கள் கவலை அடைந்தனர். நேற்றைய தினம் சற்றே நிம்மதி தரும் வகையில் தங்கம் விலை குறைந்த நிலையில், இன்றும் தங்கம் விலை குறைந்துள்ளது. இன்றைய தினம் சவரனுக்கு ரூ.360 குறைந்துள்ள நிலையில், தங்கம் விலை ரூ.73,000க்கு கீழ் போய் இருக்கிறது.
உலகளவில் தங்கம் விலை கடந்த சில மாதங்களாகவே தொடர்ந்து உயர்ந்து வந்தது. இதற்குப் பல்வேறு காரணங்கள் இருக்கும் போதிலும் டிரம்ப் தான் அதற்குப் பிரதானக் காரணம் என்றே சொல்லலாம். அவர் எடுக்கும் நடவடிக்கைகள் அவர் செய்யும் செயல்கள் தங்கம் விலை தொடர்ந்து உச்சத்திற்குக் காரணமாக இருந்தது.

புவிசார் அரசியல்
இந்தக் காலத்தில் புவிசார் அரசியல் காரணமாக அமெரிக்காவில் ஒரு சின்ன விஷயம் நடந்தாலும் அது உலகெங்கும் எதிரொலிப்பதாகவே இருக்கிறது. அதிலும் தங்கம் மார்கெட்டில் புவிசார் அரசியல் தான் தங்கம் விலையைப் பெறுமளவு தீர்மானிப்பதாக இருக்கிறது. டிரம்ப் செய்த பல காரியங்களால் இந்தியாவிலும் தங்கம் விலை புதிய உச்சத்திற்கே பறந்தது.
இந்தாண்டு ஆரம்பித்ததில் இருந்து மட்டும் தங்கம் விலை 20% வரை அதிகரித்துவிட்டது. இவ்வளவு குறுகிய காலத்தில் தங்கம் விலை இந்தளவுக்கு அதிகரிக்கும் என்பதை யாருமே எதிர்பார்க்கவில்லை என்பதே உண்மை. இதன் காரணமாகத் தங்கம் விலை சீக்கிரமே சரியும் எனப் பலரும் எதிர்பார்த்தனர். வல்லுநர்கள் சிலரும் கூட தங்கம் விலை குறையும் என்றே கணித்தனர்.
கடந்த ஒரு வாரம்
அதன் பிறகு தங்கம் விலை உயரவில்லை என்றாலும் கூட அதிகரிக்காமலேயே இருந்தது. இதனால் மக்கள் சற்றே மகிழ்ச்சி அடைந்தனர். இந்தச் சூழலில் தங்கம் விலை கடந்த ஒரு வாரமாகவே அதிகரித்து வருகிறது. கடந்த ஜூலை 9ம் தேதி ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.9000க்கு விற்பனை செய்யப்பட்டது. கடந்த ஜூலை 14ம் தேதி இது ரூ.9155ஆக உயர்ந்தது. வெறும் 5 நாட்களில் கிராமுக்கு ரூ.155 உயர்ந்தது. நேற்று மட்டும் சற்றே ஆறுதல் தரும் வகையில் 10 ரூபாய் குறைந்திருந்தது.
காரணம் என்ன
சர்வதேச மார்கெட்டிலும் தங்கம் விலையில் இதே போக்கு தான் நீடிக்கிறது. இடையில் சில காலம் இறக்குமதி வரி குறித்து டிரம்ப் பேசாமல் இருந்தார். ஆனால், இப்போது மீண்டும் அவர் அதை ஆரம்பித்துவிட்டார். இப்போது ஆகஸ்ட் 1ம் தேதி வரை இறக்குமதி வரியை டிரம்ப் தள்ளி வைத்திருக்கிறார். அதேநேரம் தினசரி மிரட்டல்களை அவர் கொடுத்தே வருகிறார். இதனால் இறக்குமதி விரி விவகாரத்தில் ஒரு தெளிவற்ற சூழல் இருக்கிறது. அதில் ஒரு தெளிவு வந்த பிறகே தங்கம் விலையில் தெளிவான பாதை தெரியும்.
இன்றைய தங்கம் விலை
நேற்றைய தினம் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.73,160க்கு விற்பனை செய்யப்பட்டது.. இன்றைய தினம் சவரனுக்கு ரூ.360 குறைந்துள்ள நிலையில், தங்கம் விலை ரூ.73,000க்கு கீழ் போய் இருக்கிறது. இன்று சென்னையில் ஆபரண தங்கம் சவரனுக்கு ரூ.72,800க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரண தங்கம் ஒரு கிராம் ரூ.45 குறைந்து, ரூ.9100க்கு விற்பனைாகிறது.
தங்கம் விலை
16.07.2025 (இன்று) - ஒரு சவரன் ரூ.72,800
15.07.2025 (நேற்று) - ஒரு சவரன் ரூ.73,240
14.07.2025 - ஒரு சவரன் ரூ.73,240
13.07.2025 - ஒரு சவரன் ரூ.73,120
12.07.2025 - ஒரு சவரன் ரூ.73,120
11.07.2025 - ஒரு சவரன் ரூ.72,600
10.07.2025 - ஒரு சவரன் ரூ.72,160
09.07.2025 - ஒரு சவரன் ரூ.72,000
08.07.2025 - ஒரு சவரன் ரூ.72,480
-
ஆடிய ஆட்டமென்ன? தலைகீழான தங்கத்தின் தலையெழுத்து! கன் மாதிரி நிற்கும் டாலர்! தள்ளாடும் மார்க்கெட்! -
Gold Price Today: தடாலடியாக சரிந்த தங்கம் விலை.. 8 நாளில் 8,000 சரிவு.. குஷியில் நகை பிரியர்கள்! இன்றைய ரேட் என்ன? -
Gold Price: தாறுமாறாக சரிந்த தங்கம் விலை.. ஒரே நாளில் ரூ.3,200 குறைந்தது.. நகை பிரியர்களுக்கு இன்ப அதிர்ச்சி! -
இல்லத்தரசிகளுக்கு இனிப்பான செய்தி.. தடாலடியாகச் சரிந்த தங்கத்தின் விலை! என்ன காரணம் தெரியுமா? -
தங்கத்தை மொத்தமாக முடக்க புதிய பிளான்.. ஐடியா சொன்ன முக்கிய அமைப்பு.. மத்திய அரசு ஓகே சொல்லுமா? -
Gold Price: தங்கம் விலை இன்று அதிரடி உயர்வு.. ஒரே நாளில் ரூ.1,040 அதிகரிப்பு.. 8 நாள் சரிவுக்கு பிரேக்! -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட்












Click it and Unblock the Notifications