ட்விஸ்ட்.. மீண்டும் உயர்ந்த தங்கம் விலை.. சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ரூ.90,720க்கு விற்பனை!
சென்னை: தங்கம் விலை காலை குறைந்த நிலையில், தற்போது மீண்டும் உயர்ந்து உள்ளது. இன்று காலையில் தங்கம் சவரனுக்கு ரூ.1,320 குறைந்து, ரூ.90,080க்கு விற்பனையாகி வந்தது. தற்போது தங்கம் விலை மீண்டும் சவரனுக்கு ரூ.640 அதிகரித்து, ஒரு சவரன் ரூ.90,720க்கு விற்பனையாகி வருகிறது.
அமெரிக்காவின் வர்த்தக போர் காரணமாக அந்நாட்டு டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அடைந்து வருகிறது. இதனால் பங்குச்சந்தைகளில் முதலீடு செய்வது கணிசமாக குறைந்துள்ள நிலையில், தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்துள்ளது. இதன் காரணமாக தங்கத்தின் விலை தாறுமாறாக ராக்கெட் வேகத்தில் அதிகரித்து வருகிறது.

கடந்த ஒரு வாரமாக காலை மற்றும் மாலை என்று 2 முறை தங்கத்தின் விலை உயர்ந்து வருகிறது. சாமானிய மக்கள் தங்கத்தை வாங்கவே முடியாத நிலைக்கு உயர்வதால் பலரும் அதிர்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். புரட்டாசி மாதம் எந்த திருமண நிகழ்ச்சிகளும் இல்லாத நிலையில், அடுத்த மாதம் திருமணம் முடிவு செய்துள்ள பலரும் கலக்கத்துடன் இருக்கின்றனர்.
நேற்று தங்கம் விலையை பொறுத்தவரை காலையில் கிராமுக்கு ரூ.120ம், பிற்பகலில் ரூ.200ம் அதிகரித்தது. இதனால் ஒரு கிராம் தங்கம் ரூ.11,425க்கும், ஒரு சவரன் ரூ.91,400க்கும் விற்பனையாகியது. அதேபோல் வெள்ளி விலையும் புதிய உச்சத்தில் இருக்கிறது. நேற்று காலையில் ஒரு கிராம் வெள்ளி ரூ.1 அதிகரித்த நிலையில், மாலையில் ரூ.6 அதிகரித்து, ஒரு கிராம் வெள்ளி ரூ.177க்கு விற்பனை செய்யப்பட்டது.
இதனால் இன்றாவது தங்கம் விலை குறையுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. ஒவ்வொரு நாளும் 2 முறை உயர்ந்து வருவதால், நகைப் பிரியர்கள் பீதியில் உள்ளனர். இந்த நிலையில் இன்று காலை தங்கம் விலை கிராமுக்கு ரூ.165 குறைந்து ஒரு கிராம் ரூ.11,260க்கும், சவரனுக்கு ரூ.1320 குறைந்து ஒரு சவரன் ரூ.90,080க்கும் விற்பனையாகி வந்தது. அதேபோல் வெள்ளி விலை ரூ.3 அதிகரித்து புதிய உச்சத்தை எட்டியது. இதனால் ஒரு கிராம் வெள்ளி ரூ.180க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1.80 லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது.
தற்போது தங்கம் விலை மீண்டும் அதிகரித்துள்ளது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.80 அதிகரித்து ஒரு சவரன் ரூ.11,340க்கும், சவரனுக்கு ரூ.640 அதிகரித்து ஒரு சவரன் ரூ.90,720க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. காலையில் தங்கம் விலை குறைந்த போது மக்கள் நிம்மதி அடைந்த நிலையில், அடுத்த 8 மணி நேரத்தில் மீண்டும் அதிகரித்து ஷாக் கொடுத்துள்ளது.
கடந்த சில நாட்களாக தங்கம் விலை நிலவரம்:
10.10.2025 - ஒரு சவரன் ரூ.90,080 (காலை)
09.10.2025 - ஒரு சவரன் ரூ.91,400 (மாலை)
09.10.2025 - ஒரு சவரன் ரூ.91,200 (காலை)
08.10.2025 - ஒரு சவரன் ரூ.91,080 (பிற்பகல்)
08.10.2025 - ஒரு சவரன் ரூ.90,400 (காலை)
07.10.2025 - ஒரு சவரன் ரூ.89,600
06.10.2025 - ஒரு சவரன் ரூ.89,000 (மாலை)
06.10.2025 - ஒரு சவரன் ரூ.89,000 (மாலை)
05.10.2025 - ஒரு சவரன் ரூ.87,600 (காலை)
04.10.2025 - ஒரு சவரன் ரூ.87,600
03.10.2025 - ஒரு சவரன் ரூ.87,200 (மாலை)
03.10.2025 - ஒரு சவரன் ரூ 86,720 (காலை)
02.10.2025 - ஒரு சவரன் ரூ 87,600 (மாலை)
02.10.2025 - ஒரு சவரன் ரூ 87,040 (காலை)
01.10.2025 - ஒரு சவரன் ரூ.87,600 (மாலை)
01.10.2025 - ஒரு சவரன் ரூ.87,120 (காலை)












Click it and Unblock the Notifications