இந்த ட்விஸ்டை எதிர்பார்க்கலையே.. தங்கம் உயர உயரத்தான் நகைக்கடையில் கூட்டம் அள்ளுது! ஏன்? - வீடியோ

Subscribe to Oneindia Tamil

சென்னை: உலக அளவில் தொடர்ந்து தங்கத்தின் விலை உயர்ந்து வருகிறது. இந்த நிலையில் தங்கத்தின் விலை ஏற்றம் காரணமாக அதன் விற்பனை எப்படி இருக்கிறது.. மக்கள் அதை தொடர்ந்து வாங்குகிறார்களா என்பது பற்றிய நேரடி ரிப்போர்ட்டை இங்கே பார்க்கலாம்.

சென்னையில் தங்கத்தின் விலை இன்று மீண்டும் உயர்ந்து உள்ளது. தங்கம் விலை சவரனுக்கு ரூ 200 உயர்ந்து ஒரு சவரன் ரூ 92,200-க்கும் ஒரு கிராம் ரூ 11,525-க்கும் விற்பனையாகிறது. அது போல் வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ 5 உயர்ந்து ஒரு கிராம் ரூ 195-க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ 1,97,000-க்கும் விற்பனையாகிறது.

gold rate silver investment

தங்கத்தை இன்று விட்டால் நாளை வாங்க முடியாது என்று சொல்லும் அளவிற்கு நாளுக்கு நாள் தங்கம் உயர்ந்து வருகிறது. விற்கிற விலையை பார்த்தால் தங்கம் வாங்க முடியுமா என்ற அச்சம் எழுந்துள்ளது. அந்த அளவிற்கு தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

தங்கத்தின் விலை தொடர்ந்து உயருகிறது

முன்பெல்லாம் ஒரு நாள் ஒருமுறை தங்கத்தின் விலை உயரும். இப்போது கடந்த ஒரு வாரமாக ஒரே நாளில் இரண்டு முறை தங்கத்தின் விலை உயர தொடங்கி உள்ளது.

gold rate silver investment

உலகப் பொருளாதாரச் சந்தையில் தங்கம் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. தங்கத்தின் விலை வரலாற்றுச் சிறப்புமிக்க $4,000 டாலராக உயர்ந்துள்ளது. பொருளாதார நிச்சயமற்ற தன்மை, டிரம்ப் வர்த்தக போர், டாலர் சரிவு மற்றும் சீனாவில் அதிகரித்து வரும் தேவை போன்ற காரணங்களால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி அதிக அளவில் தங்கத்தை வாங்குவதே இந்த திடீர் உயர்வுக்குக் காரணமாக அமைந்துள்ளது.

gold rate silver investment

இந்த நிலையில் தங்கம் விலை உயர்வு தொடர்பான நிலவரத்தை அறியும் விதமாக "ஒன்இந்தியா" சார்பாக லலிதா ஜூவல்லர்ஸ், எஸ். ஆர் ஜூவல்லர்ஸ் ஆகிய நகைக்கடைகளுக்கு நேரடி விசிட் அடித்தோம். அங்கே மக்களின் தங்கம் வாங்கும் அனுபவம், விற்பனையாளர்கள் அனுபவம், தங்கம் விலை உயர்விற்கு பின்பும் மக்கள் தொடர்ந்து தங்கம் வாங்க ஆர்வம் காட்டுவது ஏன் என்று பல விஷயங்களை விரிவாக ஆய்வு செய்துள்ளோம்.

லலிதா ஜுவல்லரி விற்பனை பிரிவினர், இப்போது மக்கள் தங்கத்தை ஒரு முதலீடாக பார்ப்பதால் வாங்கும் ஆர்வம் அதிகரித்துள்ளதாக தெரிவித்தனர்.

தங்கம் விலை உயர்விற்கு இடையில் தங்கத்தின் விற்பனை எப்படி உள்ளது, மக்களுக்கு தங்கம் மீதான ஆர்வம் எப்படி உள்ளது என்று இங்கே இணைக்கப்பட்டு உள்ள வீடியோவில் காணலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+