தங்க நகை விலை தாறுமாறாக ஏறுதா.. கவலை வேண்டாம்.. விஞ்ஞானிகள் நடத்தி வரும் சூப்பர் ஆய்வு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தங்கம் விலை ஒரு பவுன் 90 ஆயிரத்தை கடந்து விட்டது. இதனால் தங்கத்தை சாமானிய மக்கள் நினைத்தே பார்க்க முடியாத அளவிற்கு நிலைமை கைமீறிவிட்டது. இந்த சூழலில் தங்கத்திற்கு பதில் ஜொலிக்கக்கூடிய வேறு எந்தெந்த உலோகங்களில் நகை செய்வது குறித்து விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்து வருகிறார்கள். அந்த வகையில் பிளாட்டினம், பல்லேடியம், டங்ஸ்டன், வெள்ளி போன்ற உலோகங்களில் நகைகள் செய்ய முடியும். அதுபற்றி பார்ப்போம்.

இன்றைக்கு நகை என்றாலே தங்கம் தான் நமக்கு முதலில் நியாபகம் வரும்.. ஆனால் தங்கம் மட்டுமல்ல, வைரம், வெள்ளியும் எல்லா நகைக்கடைகளிலும் விற்கப்படுகிறது. ஆனாலும் தங்கம் தான் நமது நாட்டின் கலாச்சாரத்தில் ஒரு அங்கமாக இருக்கிறது. ஒரு பெண்ணை திருமணம் செய்து கொடுக்கும் போது, கட்டியவன் கைவிட்டாலும், உடன் பிறந்தவர்கள் கைவிட்டாலும், தைரியமாக இருக்க வேண்டும் என்பதற்காகவே தங்கத்தை சீதனமாக தரும் கலாச்சாரம் தொடர்ந்து. அந்த கலாச்சாரம் இன்று வரை தொடர்கிறது. தங்கம் இல்லாமல் ஒரு பெண்ணின் திருமணம் இன்றைய தேதியில் சாத்தியமே இல்லை என்று கூறும் அளவிற்கு வந்துவிட்டது.

Scientists study metals that can make jewelry that shines like gold

தங்கம் எட்டாத உயரம்

தங்கம் பெண்களின் வாழ்வில் ஒரு அங்கமாக இருக்கிறது. வசதி உள்ளவர்கள் 100 பவுன் தங்கம், 200 பவுன் தங்கம் கொடுத்து தங்கள் மகளை கட்டிக்கொடுக்கிறார்கள். வசதி குறைந்தவர்கள் 5 முதல் 10 பவுன் வரை போட்டு தங்கள் பெண் பிள்ளைகளை திருமணம் செய்து வைக்கிறார்கள். அந்த தங்கம் பெண்ணிற்கு வெறும் அழகு பொருளாக மட்டுமின்றி, அவர்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்றும் ஒன்றாக இருக்கிறது. அப்படிப்பட்ட தங்கம் கடந்த சில ஆண்டுகளாக எட்டி பிடிக்கவே முடியாத உயரத்திற்கு போய்விட்டது., சாதாரண மக்களுக்கு தங்க நகைகள் எட்டாக்கனியாகி உள்ளது என்பது கசப்பான உண்மை.

தங்கம் விலை பெரிய அளவில் சரியும்? அதிசயம் நடக்குமா.. பொருளாதார நிபுணர் ஹரிகரன் சொன்ன பாயிண்ட்
தங்கம் எப்போது குறையும்

சென்னையில் வீடு வாங்குவது எப்படி ஏழைகளுக்கு சாத்தியமே இல்லையோ, இதுபோன்ற ஒரு நிலை தான் தங்கமும் எட்டியிருக்கிறது. இதனால் ஏற்கனவே கையில் உள்ள தங்கத்தை பாதுகாக்கவே மக்கள் விரும்புகிறார்கள். தற்போதைய நிலையில் அமெரிக்கா இந்தியாவிற்கு விதித்த வரிவிதிப்பு ரத்து செய்யப்பட வேண்டும்.. அதேபோல் ரஷ்யா உக்ரைன் போர் சரியாக வேண்டும்.. இஸ்ரேஸ் காஸா போர் சரியாக வேண்டும். அப்படி புவியியல் பதட்டங்கள் எல்லாம் குறைந்தால் தான் தங்கம் விலை இயல்பு நிலைக்கு திரும்பும். அதேநேரம் அப்படி எல்லாமே சரியானாலும், தங்கம் சற்று தான் குறைய வாய்ப்பு உள்ளது.

எனினும் ஒரு கிராம் 10 ஆயிரத்திற்கு கீழ் வருவதற்கு எல்லாம் வாய்ப்பே இல்லை என்கிறார்கள். தங்கம் விலை தற்போது ஒரு கிராம் ரூ.11 ஆயிரத்து 500-ஐ தொட்டு இருக்கிறது. அதனால் ஏழை-எளிய மக்களால் தங்கத்தை வாங்கி பயன்படுத்த முடியாத நிலை எழுந்துள்ளது.

எனவே விஞ்ஞானிகள் தங்கத்திற்கு மாற்றான விலை குறைவான ஒரு உலோகத்தை கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். இது திடீரென நடந்த முயற்சிகள் இல்லை.. பல ஆண்டுகளாக முயற்சிகள் நடந்து வருகின்றன. அதில் சில உலோகங்கள் பற்றி பார்ப்போம்

பிளாட்டினம்:

தங்கத்தை விட அரிதான ஒரு ஆபரணம்.. விலை உயர்ந்ததுமாக இருந்தாலும், பிளாட்டினம் நகைகள் பிரகாசமாக இருக்கும்.பிளாட்டினம் நகையை பொறுத்தவரை தோலில் ஒவ்வாமை ஏற்படுத்தாது, நீடித்த தன்மை அதிகம் ஆகும். ஆனால் இது தங்கத்தை விட விலை உயர்வாக இருக்கிறது. அதனால் ஏராளமான பணக்கார மக்கள் இதனை வாங்குகிறார்கள்.

பல்லேடியம்

பல்லேடியம் பார்க்க வெள்ளை நிறத்தோற்றத்தில் இருக்கிறது. எடை குறைவாக இருப்பதால் மோதிரங்கள், சங்கிலிகள் போன்றவை செய்ய முடியும். இது அணிந்தால் பார்க்க மிகமிக அழகாக இருக்கும்.

டைட்டானியம்: இது மிகவும் இலகுவானதாக இருக்கும். அதேநேரம் மிகவும் வலிமையாகும் இருக்கும். ஒவ்வாமை ஏற்படாது. எனவே நகைகளில் அதிகம் பயன்படுத்தலாம்.

டங்ஸ்டன்:- மிக வலுவானது; கீறல் எளிதில் வராது என்கிறார்கள். இதில் மோதிரங்கள் செய்வது அண்மை காலத்தில் அதிகமாகிவிட்டது.

வெள்ளி:- வெள்ளியை பற்றி சொல்லவே தேவையில்லை .. இன்றும் வெள்ளி நகை, வெள்ளியில் மோதிரங்கள் போடுவது அதிகமாகவே உள்ளது. தங்கத்தை போலவே வெள்ளியும் அடகு கடைகளில் உடனே வாங்கப்படுகிறது. வெள்ளி நகைகளை எப்போது வேண்டுமானாலும் கொடுத்து நகைக்கடைகளில் பணமாக்க முடியும். ஆனால் வெள்ளியை பொறுத்தவரை விரைவில் கருமைபடர்ந்துவிடும். தங்கம் போல் ஜொலித்தபடியே இருக்காது என்பது தான் ஒரே குறை.

டைட்டானியத்தில் நகை

இதில் தங்கம் போல் பொன்னிறமாக மின்ன வைக்க டைட்டானியத்தில் நகை செய்து தங்க நிறம் தரும் டைட்டானியம் நைட்ரேட் பூச்சு போட்டு, உண்மையான தங்கம் போல தோற்றமளிக்க வைக்க முடியும் என்கிறார்கள். வெள்ளி தங்கக்கலவையை நானோ அளவில் வடிவமைத்து, தேவையான வண்ணத்தையும், பிரகாசத்தையும் உருவாக்க முடியும் என்றும் விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். அதேபோல் டைட்டானியம், நையோபியம் போன்ற உலோகங்களில் நகைகள் தயாரிக்கலாம் என்கிறார்கள். இதுதவிர செயற்கையாக உருவாக்கப்படும் தங்கம் தொடர்பான முயற்சிகளும் நடக்கிறது. ஆனால் இயற்கையான தங்கத்தைவிட உற்பத்தி செலவு அதிகம் என்பதால், இந்த நடைமுறை வெற்றிகரமாக நடைமுறைக்கு வரவில்லை.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+