சர்ரென ஏறிய மவுசு.. தங்கத்தை அடகு வைத்து லோன், கடன் வாங்க போறீங்களா? அப்போ இதை நோட் பண்ணுங்க
சென்னை: தங்கத்தை வைத்து கடன் வாங்கும் திட்டமான கோல்டு லோன் திட்டத்தை பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை 71% உயர்ந்து உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. தங்கத்தை வைத்து கடன் வாங்குபவர்கள் எண்ணிக்கை கடந்த ஜனவரியில் இருந்து வேகமாக உயர்ந்து வருகிறது.
தங்க லோன் தேவை அதிகரிப்பிற்கு பின் முக்கியமான பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. முக்கியமாக கடந்த சில நாட்களாக நகை அடகு தொடர்பாக புதிய விதிகள், மாற்றங்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. இது தங்க நகை லோன் எடுக்க கொஞ்சம் வசதியாக உள்ளது.

1. பர்சனல் லோன் எடுப்பது கஷ்டம் ஆகி உள்ளது. புதிய தனிநபர் கடன் விதிகளை ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது. இனி தனி நபர் கடன் வாங்குவதை.. அதாவது பர்சனல் லோன் எடுப்பதை இந்த நடவடிக்கை கடினமாக்குகிறது. ஜனவரி 1, 2025 முதல், வங்கிகள் சிபில் ஸ்கோர் அறிக்கைகளை 30 நாட்களுக்கு ஒரு முறைக்கு பதிலாக 15 நாட்களுக்கு ஒருமுறை புதுப்பிக்க வேண்டும்.
2. இதன் மூலம் கடன் வழங்குபவர்கள் கடன் வாங்குபவர்களின் நிதிநிலையை நிகழ்நேரத்தில் மதிப்பீடு செய்யலாம். அதாவது துல்லியமாக சிபில் ஸ்கோரை கணக்கிட முடியும். இந்த நடவடிக்கையானது அதிக அந்நியச் செலாவணி மற்றும் கடனைத் திருப்பிச் செலுத்துவதில் நடக்கும் முறைகேடுகளை கட்டுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. கடன் வாங்குபவர்கள் இனி இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை நல்ல கிரெடிட் ஸ்கோரைப் பராமரிக்க வேண்டும். அப்போது மட்டுமே அவர்களுக்கு பர்சனல் லோன் கிடைக்கும். மாத தொடக்கத்தில் ஏதாவது தவறு செய்தால் அது அடுத்த மாதம் உள்ள சிபில் ஸ்கோரில் பிரதிபலிக்கலாம்.. 2 வாரங்களிலேயே பிரதிபலிக்கும். இதனால் தனி நபர் லோன் எடுப்பது குறைந்துள்ளது.
3. இதை ஈடுகட்ட பலரும் கோல்டு லோன் எடுக்கிறார்கள்.
4. நாடு முழுக்க பொதுத்துறை வங்கிகள் மூலம் நகை கடன்கள் ஆய்வு செய்யப்பட்டு உள்ளன என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். நிதி அமைச்சகத்தின் உத்தரவின் பெயரில் இந்த ஆய்வு செய்யப்பட்டு உள்ளது. நகை கடன், அதை அடிப்படையாக வைத்து செயல்படும் அவர்களின் மார்க்கெட் மதிப்பு எல்லாம் ஆய்வு செய்யப்பட்டு உள்ளது. ஆனால் இதில் முறைகேடுகள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. எல்லாம் சரியாக செயல்படுகிறது என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
5. வங்கிகளின் தங்கக் கடன் போர்ட்ஃபோலியோ, நடப்பு நிதியாண்டின் (2024-25) டிசம்பர் வரை ஆண்டுக்கு ஆண்டு 71.3 சதவீதம் உயர்ந்து ₹1.72 டிரில்லியனாக உயர்ந்துள்ளது, இது ஒரு வருடத்திற்கு முன்பு 17 சதவீத வளர்ச்சியுடன் ஒப்பிடுகையில் அதிக வளர்ச்சி. ஆனாலும் இதில் முறைகேடுகள் இல்லை. தங்கத்தின் விலை உயர்வு காரணமாக இந்த வளர்ச்சி எட்டப்பட்டதாக நிதி அமைச்சகம் கூறி உள்ளது. இதுவும் கூட தங்க நகை கடன்கள் அதிகம் வழங்கப்பட காரணமாக மாறி உள்ளது.
6. வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் (NBFCs) மற்றும் Scheduled Commercial Banks (SCBs) ஆகியவை ஒரே மாதிரியான விதிகளால் வழிநடத்தப்படுகின்றன. இவை ஆர்பிஐ கீழே வரவில்லை என்றாலும் ஏலம் விடுவதில் முறையாக ஆர்பிஐ விதிகளை கடைபிடிக்க வேண்டும். கடன் வாங்கியவர் தங்கக் கடனைச் செலுத்தத் தவறினால், NBFCகள் மற்றும் வங்கிகளால் தங்கத்தை ஏலம் விடுவதற்கு என்று முக்கியமான விதிகள், செயல்முறைகள் உள்ளன. இந்த செயல்முறைகளை NBFCகள் மற்றும் வங்கிகள் பின்பற்ற வேண்டும். இந்த செயல்கள் கண்காணிக்கப்பட வேண்டும்.
7. பொதுவாக தங்கத்தை ஏலம் விடுவதற்கு முன் நோட்டீஸ் அனுப்ப வேண்டும். பல முறை நோட்டீஸ் அனுப்ப வேண்டும். நகை கடன் வாங்கியவர் திருப்பிச் செலுத்த வரவில்லை என்றால், வங்கி அல்லது NBFC ஏலத்திற்குச் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படும். ஆனால் அதை முறையாக வாடிக்கையாளரிடம் தெரிவிக்க வேண்டும். இந்த செயல்முறைகள் மீறப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும், என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பும் நகை கடன்கள் வாங்குவதை உயர்த்தி உள்ளது.
நகை கடன் வாங்கும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்
1. வட்டி விகிதங்கள் மற்றும் மறைக்கப்பட்ட கட்டணங்களைச் சரிபார்க்கவும்
அடகுக் கடைகள் அதிக வட்டி விகிதங்களை வசூலிக்கலாம் (பெரும்பாலும் மாதத்திற்கு 2-3%, ஆண்டுதோறும் 24-36% என விதிக்கலாம்). இதை கவனமாக சோதிக்கவும். செயலாக்கக் கட்டணங்கள், மதிப்பீட்டுக் கட்டணம் மற்றும் சேமிப்புக் கட்டணம் போன்ற மறைக்கப்பட்ட கட்டணங்கள் குறித்து எச்சரிக்கையாக இருங்கள்.
2. கடன்-மதிப்பு (LTV) விகிதத்தைச் சரிபார்க்கவும்
RBI விதிமுறைகளின்படி, வங்கிகளும் NBFCகளும் தங்கத்தின் சந்தை மதிப்பில் 75% வரை கடனாக வழங்குகின்றன. வழங்க வேண்டும். ஆனால் சில அடகுக் கடைகள் குறைவாக வழங்கலாம், எனவே மற்ற அடகு கடைகளுடன் இதை ஒப்பிடுங்கள்.
3. முறையான ஆவணங்களை உறுதி செய்யவும் மற்றும் கடன் ஒப்பந்தத்தை உறுதி செய்யவும்
எப்பொழுதும் கடன் தொகை, வட்டி விகிதம், திருப்பிச் செலுத்தும் விதிமுறைகள் மற்றும் அபராதங்களைக் குறிப்பிடும் எழுத்துப்பூர்வ ஒப்பந்தத்தை மேற்கொள்வதை உறுதி செய்து கொள்ளுங்கள். உங்கள் தங்கத்தின் எடை மற்றும் தூய்மை சரியாக குறிக்கப்பட்டு உள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
4. திருப்பிச் செலுத்துதல் & ஏல விதிமுறைகள் குறித்து எச்சரிக்கையாக இருங்கள்
நீங்கள் பணம் செலுத்தத் தவறினால், அடகுக் கடை அறிவிப்பு இல்லாமல் உங்கள் தங்கத்தை ஏலம் விடலாம். அவர்கள் திருப்பிச் செலுத்துவதற்கான காலங்கள் அல்லது நீட்டிப்புகளை வழங்குகிறார்களா என சரிபார்க்கவும். உங்களுக்கு தெரிந்தவர்களிடம் வைப்பது கூடுதல் பாதுகாப்பு.
5. புகழ்பெற்ற & உரிமம் பெற்ற அடகுக் கடையைத் தேர்வு செய்யவும்
உங்கள் தங்கத்தை தவறாகப் பயன்படுத்தக்கூடிய அல்லது மாற்றக்கூடிய பதிவு செய்யப்படாத அல்லது பொய்யான கடைகளைத் தவிர்க்கவும். தங்கத்தின் பாதுகாப்பிற்காக, NBFCகள், வங்கிகள் அல்லது RBI-ல் பதிவுசெய்யப்பட்ட தங்கக் கடன்களை மட்டுமே அணுகவும்.
6. மோசடி மற்றும் திருட்டு ஜாக்கிரதை
எடை மற்றும் தூய்மை சோதனை உங்களுக்கு முன்னால் செய்யப்படுவதை உறுதிசெய்யவும். சில அடகுக் கடைகள் தங்கத்தின் மதிப்பை மதிப்பிடும்போது அதன் எடையை மாற்றலாம் அல்லது குறைக்கலாம்.
7. முன்பணம் செலுத்தும் முறையை சரிபார்க்கவும்
சில கடன் வழங்குபவர்கள் கடனை முன்கூட்டியே திருப்பிச் செலுத்துவதற்கு அபராதம் விதிக்கின்றனர். அதாவது நகையை உடனே திருப்பி கேட்டால் அபராதம் விதிப்பார்கள். கூடுதல் கட்டணங்கள் இல்லாமல் பகுதி அல்லது முழுமையாக திருப்பிச் செலுத்த அனுமதிக்கும் அடகுக் கடையைத் தேர்வு செய்யவும்
தங்க கடன் விதிகள்
வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் (NBFCs) மற்றும் Scheduled Commercial Banks (SCBs) ஆகியவை ஒரே மாதிரியான விதிகளால் வழிநடத்தப்படுகின்றன. இவை ஆர்பிஐ கீழே வரவில்லை என்றாலும் ஏலம் விடுவதில் முறையாக ஆர்பிஐ விதிகளை கடைபிடிக்க
வேண்டும். கடன் வாங்கியவர் தங்கக் கடனைச் செலுத்தத் தவறினால், NBFCகள் மற்றும் வங்கிகளால் தங்கத்தை ஏலம் விடுவதற்கு என்று முக்கியமான விதிகள், செயல்முறைகள் உள்ளன. இந்த செயல்முறைகளை NBFCகள் மற்றும் வங்கிகள் பின்பற்ற வேண்டும். இந்த செயல்கள் கண்காணிக்கப்பட வேண்டும்.
பொதுவாக தங்கத்தை ஏலம் விடுவதற்கு முன் நோட்டீஸ் அனுப்ப வேண்டும். பல முறை நோட்டீஸ் அனுப்ப வேண்டும். நகை கடன் வாங்கியவர் திருப்பிச் செலுத்த வரவில்லை என்றால், வங்கி அல்லது NBFC ஏலத்திற்குச் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படும். ஆனால் அதை முறையாக வாடிக்கையாளரிடம் தெரிவிக்க வேண்டும். இந்த செயல்முறைகள் மீறப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
நிர்மலா சீதாராமன் தகவல்
நாடு முழுக்க பொதுத்துறை வங்கிகள் மூலம் நகை கடன்கள் ஆய்வு செய்யப்பட்டு உள்ளன என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். நிதி அமைச்சகத்தின் உத்தரவின் பெயரில் இந்த ஆய்வு செய்யப்பட்டு உள்ளது.
நகை கடன், அதை அடிப்படையாக வைத்து செயல்படும் அவர்களின் மார்க்கெட் மதிப்பு எல்லாம் ஆய்வு செய்யப்பட்டு உள்ளது. ஆனால் இதில் முறைகேடுகள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. எல்லாம் சரியாக செயல்படுகிறது என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
வங்கிகளின் தங்கக் கடன் போர்ட்ஃபோலியோ, நடப்பு நிதியாண்டின் (2024-25) டிசம்பர் வரை ஆண்டுக்கு ஆண்டு 71.3 சதவீதம் உயர்ந்து ₹1.72 டிரில்லியனாக உயர்ந்துள்ளது, இது ஒரு வருடத்திற்கு முன்பு 17 சதவீத வளர்ச்சியுடன் ஒப்பிடுகையில் அதிக வளர்ச்சி. ஆனாலும் இதில் முறைகேடுகள் இல்லை. தங்கத்தின் விலை உயர்வு காரணமாக இந்த வளர்ச்சி எட்டப்பட்டதாக நிதி அமைச்சகம் கூறி உள்ளது.
நகை கடன் அடகு எச்சரிக்கை
கடந்த ஆண்டு, இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) சார்பாக வங்கிகள், நிறுவனங்களுக்கு முக்கிய உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டது. தங்கக் கடன்கள் குறித்த தங்கள் கொள்கைகள், செயல்முறைகள் மற்றும் நடைமுறைகளை விரிவாக மதிப்பாய்வு செய்ய வேண்டும். இதில் உள்ள முறைகேடுகள், தவறுகள் இடைவெளிகளைக் கண்டறிந்து, சரியான தீர்வு எடுக்க வேண்டும். முறையான நடவடிக்கைகளை சரியான நேரத்தில் மேற்கொள்ளுமாறு நிறுவனங்களுக்கு அறிவுறுத்தியது.
தங்கத்தை அடகு வைத்தவர்.. அதை திருப்பி மீட்காத பட்சத்தில் ஏலம் விடும்போது முறையாக ஆர்பிஐ விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உத்தரவிட்டு உள்ளார்.
வங்கிகள் ஏலம் விடும்போது தங்கத்தை முறையாக ஏலம் விட வேண்டும். வங்கிகள் பொதுவாக ஆர்பிஐ விதிகளை பின்பற்றியே தங்கத்தை ஏலம் விடும். ஆனால் சில அடகு கடைகள் அப்படி செய்வது இல்லை.
வங்கி அல்லாத அடகு நிறுவனங்கள் சில விதிகளை பின்பற்றுவது இல்லை. அவைகள் ரிசர்வ் வங்கி விதிமுறைகளை பின்பற்றாமல் தங்க நகைகளை ஏலம் விடுகின்றன. அடகு நிறுவனங்கள் இப்படி செய்வது தெரிந்தால் அதற்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் எச்சரிக்கை விடுத்து உள்ளார். இந்த நிலையில்தான் நாடு முழுக்க பொதுத்துறை வங்கிகள் மூலம் நகை கடன்கள் ஆய்வு செய்யப்பட்டு உள்ளன என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். நிதி அமைச்சகத்தின் உத்தரவின் பெயரில் இந்த ஆய்வு செய்யப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications