33% உயர்வு.. எதிர்பார்க்காத ஏற்றம்.. தங்க பார், காயின் வாங்குவதுதான் சரியான முடிவு.. நோட் பண்ணுங்க
நியூயார்க்: இந்தியாவில் தங்கம் பார் மற்றும் தங்க காயின் வாங்கும் மக்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருவதாக ஆய்வு அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.
சென்னை நகரில் இன்று 1 கிராம் 24 கேரட் தங்கம் விலை ₹9,730 ஆக உள்ளது, இதேபோல் 1 கிராம் 22 கேரட் தங்கம் விலை ₹8,919 ஆகவும், 1 கிராம் 18 கேரட் தங்கம் விலை ₹7,344 ஆகவும் உள்ளது. 10 கிராம் தங்கத்தின் விலை மீண்டும் 1 லட்சம் ரூபாயை நெருங்கி வருகிறது. இந்த நிலையில் தான் இந்தியாவில் தங்கம் பார் மற்றும் தங்க காயின் வாங்கும் மக்களின் எண்ணிக்கை 33% அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

உயரும் தங்கத்தின் விலை
தங்க நாணயங்கள் தூய தங்கத்தால் ஆனவை. தங்க நாணயங்கள் 0.5 கிராம் முதல் 100 கிராம் வரை பல்வேறு மதிப்புகளில் வருகின்றன, மேலும் 22 அல்லது 24 காரட் என்ற வெவ்வேறு தூய்மை நிலைகளுடன் வருகின்றன. இதற்கு செய்கூலி பெரும்பாலும் பூஜ்யம் என்பதுதான் அவற்றை மலிவு விலையில் வைத்திருக்க உதவுகிறது.
இதன் காரணமாக அந்த தங்கத்தை வாங்கும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளதாக ஆய்வு கூறி உள்ளது. கூடுதலாக, அதை பணமாக மாற்றுவதும் எளிதானது. தங்க பார் போல இல்லாமல் தங்க நாணயங்களை எளிதாக விற்க முடியும். இன்னும் வேகமாக பணமாக மாற்ற முடியும். இதனால் அதை பலரும் விரும்புவதாக கூறப்பட்டு உள்ளது.
வலுவான உதாரணம்
அமெரிக்காவில் MCX தங்கம் விலை ரூ.5100 வரை 10 கிராமிற்கு உயர்ந்து உள்ளது. தங்கம் விலை மீண்டும் மேல்நோக்கி செல்வதற்கு இது வலுவான உதாரணமாக மாறி உள்ளது. தங்கம் விலை கடந்த சில வாரங்களாக தொடர்ந்து உயர்ந்து 10 கிராமிற்கு ரூ.96,050 ஆக உயர்ந்தது. தங்கத்தின் விலை மே 15 அன்று ரூ.90,890/10 கிராமாக இருந்தது. இப்போது தங்கத்தின் விலை ரூ.5,160 ஆக உயர்ந்து 95 ஆயிரத்தை தாண்டி உள்ளது.
ஏப்ரல் மாத தொடக்கத்தில், 2025 ஆம் ஆண்டின் நான்காம் காலாண்டில் தங்கத்தின் விலை சராசரியாக அவுன்ஸ் ஒன்றுக்கு $3,675 ஆகவும், 2026 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் $4,000/அவுன்ஸ் அளவைத் தாண்டும் என்றும் கணித்துள்ளார். இப்போது தங்கம் விலை அவ்வப்போது சரிவது போல தோன்றலாம்.
ஒரு சில வாரங்கள் வேகமாக சரிவை சந்திக்கலாம். ஆனால் கண்டிப்பாக தங்கத்தின் விலை அவுன்ஸ் ஒன்றிற்கு 4 ஆயிரம் டாலர் வரை செல்லும். நாம் நினைத்து பார்க்க முடியாத உச்சத்தை தங்கம் அடையும் சூழல் உள்ளது.
பலரும் கணிப்பு
அதிகம் விற்பனையாகி உலக அளவில் சாதனை படைத்த நிதி நிர்வாக புத்தகமான Rich Dad Poor Dad என்ற புத்தகத்தின் ஆசிரியர் ராபர்ட் கியோசாகி தங்கம் விலை குறித்து தைரியமாக கணித்துள்ளார், 2035-ம் ஆண்டுக்குள் பிட்காயின் $1 மில்லியனைத் தாண்டும், தங்கம் அவுன்ஸ் ஒன்றுக்கு $30,000 ஆக இருக்கும். வெள்ளி 2035-ம் ஆண்டுக்குள் ஒரு நாணயத்திற்கு $3,000-ஐ எட்டும் என்று கணித்துள்ளார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications