70 வயதுக்கு மேற்பட்ட குடிமக்களுக்கான மருத்துவ காப்பீடு திட்டம்- அறிய வேண்டிய 15 பாயிண்ட்ஸ்!
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு நாட்டின் 70 வயதுக்கும் மேற்பட்ட மூத்த குடிமக்கள் அனைவருக்குமான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்தத் திட்டம் மூத்த குடிமக்கள் உள்ள ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ5 லட்சம் காப்பீடு வழங்குகிறது.

70-வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கான மருத்துவ காப்பீடு திட்டம் குறித்த முக்கிய அம்சங்கள்:
1. ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன ஆரோக்கிய யோஜனா-ABPMJAY என்பது மத்திய அரசின் மருத்துவ காப்பீட்டுத் திட்டம்.
2. 2018-ல் ஆயுஷ்மான் பாரத் திட்டம் தொடங்கப்பட்ட போது வருவாய் குறைந்த பிரிவு மக்களுக்கானதாக இருந்தது.
3. 70 வயத்துக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு வழங்கும் வகையில் விரிவாக்கம் செய்யப்பட்ட இந்த திட்டத்துக்கு செப்.11-ந் தேதி பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது
4. மூத்த குடிமக்களுக்கான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்துக்கு வருமான வரம்பு எதுவும் இல்லை.
5. நாட்டின் மொத்த மூத்த குடிமக்கள் 6.5 கோடி. 6.5 கோடி மூத்த குடிமக்களைக் கொண்ட குடும்பங்கள் எண்ணிக்கை 4.5 கோடி
6. 1 குடும்பத்துக்கு ரூ5 லட்சம் என மருத்துவ காப்பீடு வழங்கப்படும்
7. மருத்துவ காப்பீடு பெறும் அனைத்து மூத்த குடிமக்களுக்கும் தனி அடையாள அட்டை வழங்கப்படும்
8. ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் ஏற்கனவே பயனாளியாக இருந்தாலும் மூத்த குடிமக்களுக்கு தனியாக ரூ5 லட்சத்துக்கு அடையாள அட்டை வழங்கப்படும்.
9. ஒரே குடும்பத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட மூத்த குடிமக்கள் இருந்தால் ரூ5 லட்சத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும்
10. இத்திட்டத்தின் கீழான செலவுகளை மத்திய அரசு மற்றும் மாநில அரசுகள் பகிர்ந்து கொள்ளும்
11. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறலாம்.
12. தனியார் நிறுவனங்களில் மருத்துவக் காப்பீடு செய்த மூத்த குடிமக்களும் இத்திட்டத்தின் கீழ் பயனடையாலாம்.
13. மூத்த குடிமக்களுக்கான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்துக்கு மொத்தம் ரூ 3,437 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
14. தமிழ்நாட்டில் கலைஞர் கருணாநிதி காப்பீட்டுத் திட்டம் என்கிற மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் நடைமுறையில் உள்ளது. குடும்ப வருமானம் ஆண்டுக்கு 1,20,000 ரூபாய்க்கு குறைவாக உள்ளோருக்கு இந்த காப்பீட்டுத் திட்டம். தற்போதைய ஆயுஷ்மான் பாரத் திட்டம் இந்த திட்டத்துடன் இணைந்ததாக செயல்படுத்தப்படும்.
15. தமிழ்நாட்டில் கலைஞர் கருணாநிதி காப்பீட்டுத் திட்டத்தில் இருந்தவர்களுக்கு ரூ2 லட்சம், மத்திய அரசின் ஆயுஷ்மான் திட்டத்தில் இணைந்தவர்களுக்கு ரூ5 லட்சம் காப்பீடு வழங்கப்பட்டது. தற்போது அனைவருக்கும் ரூ.5 லட்சம் காப்பீடு வழங்கப்படுகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications