வயது வெறும் 24.! ஜிம்மிற்கு சென்ற இளைஞர்.. திடீரென துடிதுடித்து பலியான சோகம்.. பதற வைக்கும் சம்பவம்
டெல்லி: தலைநகர் டெல்லியில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த வெறும் 24 வயதே ஆன இளைஞர் எதிர்பாராத விதமாக உயிரிழந்த ஷாக் சம்பவம் அரங்கேறியுள்ளது.
இப்போது உலகத்தில் எல்லாமே இணையம் என்று ஆகிவிட்டது. வீட்டை விட்டு வெளியே கால் அடியெடுத்து வைக்காமலேயே காய்கறி முதல் தங்க, வைர நகைகள் வரை அனைத்தையும் வாங்கலாம் என்ற சூழலே இருக்கிறது.

ஆன்லைனில் ஆர்டர் செய்தால் போதும் அனைத்தும் நமது வீடுகளுக்கே தேடி வந்துவிடுகிறது. குறைந்த விலை, பொருட்களை வாங்கிய பிறகு காசு கொடுக்கலாம் என்பதால் பலரும் ஆன்லைனில் பொருட்களை வாங்கவே விரும்புகின்றனர்.
ஜிம்: இதனால் உடல்பருமன் பெரிய பிரச்சினையாக மாறியுள்ளது. இதனால் பலரும் இப்போது ஜிம்மிற்கு செல்ல ஆரம்பித்துள்ளனர். இதனிடையே வடக்கு டெல்லியின் ரோகினி என்ற பகுதியில் உள்ள ஜிம்மில் 24 வயது இளைஞர் ஒருவர் வழக்கம் போல ஜிம்மிற்கு சென்று உடற்பயிற்சி செய்து கொண்டிருந்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமான மின்சாரம் தாக்கி அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மின்சாரம் தாக்கி உயிரிழந்த அந்த நபர் குருகிராமில் உள்ள சக்ஷம் ப்ருதி என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.
பிடெக் படித்துள்ள அவர், குருகிராமில் உள்ள ஒரு நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். ரோகினி செக்டார் 19இல் வசிக்கும் அவர், செக்டர் 15இல் உள்ள ஜிம்ப்ளக்ஸ் ஃபிட்னஸ் சென்டருக்கு சென்று ஒர்க்அவுட் செய்வதை வழக்கமாக வைத்துள்ளார். கடந்த செவ்வாய்க்கிழமை காலை 7.30 மணியளவில் அங்குச் சென்ற அவர் டிரெட்மில்லில் நடந்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அவர் சரிந்து விழுந்தார்.
உயிரிழப்பு: அவரை உடனடியாக அங்கிருந்தவர்கள் அருகே உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இருப்பினும், அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். அதன் பின்னர் மருத்துவர்கள் பிரேதப் பரிசோதனை செய்ததில் மின்சாரம் தாக்கியதே அவரது மரணத்திற்குக் காரணம் என உறுதி செய்யப்பட்டது.
அதாவது டிரெட்மில்லில் மின்சார கசிவு இருந்துள்ளது. இவர் அதில் ஒர்க்அவுட் செய்த போதுதான் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். இதையடுத்து ஜிம் மேலாளர் அனுபவ் துக்கல் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவர் மீது ஹோமோசைட் பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான அடுத்தகட்ட விசாரணை நடத்து வருவதாக போலீசார் தெரிவித்தனர். உடற்பயிற்சி செய்த அந்த இளைஞன் திடீரென இப்படி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
அதிகரிக்கும் மரணங்கள்: இது ஒரு பக்கம் இருக்க நாட்டில் இளைஞர்கள் மத்தியில் ஏற்படும் மாரடைப்பு சம்பவங்களும் கணிசமாக அதிகரித்துள்ளது. ஒரே இடத்தில் நீண்ட காலம் உட்கார்ந்து வேலை செய்யும் தேவையும் அதிகரித்து வருகிறது. அதிலும் கொரோனா வந்தவுடன் ஆபீசுக்கு கூட செல்ல தேவையில்லை. வீடு தான் ஆபீஸ் என்றாகிவிட்டதால் வெளியே செல்வது கணிசமாகக் குறைந்துவிட்டது. இப்படி உடல் ரீதியாக எந்தவொரு நடவடிக்கையும் இல்லாத காரணத்தால் உடல் சார்ந்த பாதிப்புகள் அதிகம் ஏற்பட ஆரம்பித்துள்ளது.
இதனால் முன்பு வயதானவர்கள் மத்தியில் மட்டுமே ஏற்பட்ட மாரடைப்பு என்பது இப்போது இளைஞர்கள் மத்தியிலும் ஏற்படத் தொடங்கியுள்ளது. அதிலும் கொரோனா பரவலுக்குப் பின்னரே இதுபோல திடீர் திடீரென ஏற்படும் மாரடைப்பு அதிகரிப்பதாகச் சொல்லப்படுகிறது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications