Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மனோஜ் உடம்பை பார்த்தீங்களா.. எவ்ளோ ஸ்லிம்.. 14 வருடமா பாஃலோ பண்ற டயட் ரகசியம் இதுதான்!

Subscribe to Oneindia Tamil

மும்பை: கடந்த 13 முதல் 14 ஆண்டுகளாக இரவு உணவை தவிர்த்து வருவதாக பாலிவுட் நடிகர் மனோஜ் பாஜ்பேயி தெரிவித்துள்ளார். மதிய உணவுக்கு பிறகு எங்கள் கிச்சன் முடங்கி கிடக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

பீகாரை சேர்ந்தவர் மனோஜ் பாஜ்பேயி. இவர் திரைப்பட நடிகராவார். இந்தி படங்களில் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு படங்களிலும் இவர் தனது பங்களிப்பை கொடுத்துள்ளார். இவர் இரு தேசிய திரைப்பட விருதுகளை பெற்று 4 பிலிம்பேர் விருதுகளையும் பெற்றார்.

Actor Manoj Bajpayee says that he has not had dinner for the last 13 years

கடந்த 2019ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருதையும் பெற்றுள்ளார். 58 வயதாகும் இவருக்கு ஷபானா ராஸா என்ற மனைவியும் ஒரு மகளும் உள்ளனர். இந்த நிலையில் இவர் இரவு நேரத்தில் உண்பதை கடந்த 13 ஆண்டுகளாக தவிர்த்து வருவதாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மனோஜ் பாஜ்பேயி கூறியிருப்பதாவது: என்னுடைய தாத்தாவின் வழக்கமான இரவு உணவை தவிர்ப்பதை நானும் கடைப்பிடித்து வருகிறேன். பொதுவாக இரவு நேரத்தில் சீக்கிரத்தில் சாப்பிட்டுவிட்டால் அது உடல் நலனுக்கு நல்லது என்பார்கள். இல்லாவிட்டால் உணவானது வயிற்றிலேயே இருக்கும் என்றார்.

இதை கேட்ட எனக்கு சற்று பயமாக இருந்தது. இதனால் நான் இரவு உணவை சாப்பிடுவதை முற்றிலும் நிறுத்திவிட்டேன். மதிய உணவு முடிந்ததும் எங்கள் வீட்டு சமையல் அறை முடங்கி கிடக்கும். எங்கள் மகள் விடுதியில் இருந்து எங்கள் வீட்டுக்கு வந்தால் மட்டுமே இரவில் உணவு தயாராகும். ஆரம்பத்தில் இது போன்ற முறையை பின்பற்றுவதற்கு சற்று கடினமாக இருந்தது.

ஒரு வார காலத்திற்கு மிகவும் கஷ்டப்பட்டேன். எனக்கு பசித்தால் இரு பிஸ்கெட்டை மட்டுமே சாப்பிட்டு தண்ணீர் நிறைய குடித்தேன். இது போக போக அப்படியே பழகிவிட்டது. முன்பெல்லாம் இரவு நேரத்தில் அதுவும் நள்ளிரவு நேரத்தில் ஹெவியான உணவை சாப்பிடுவேன். மாலை நேரத்தில் கடுமையாக பசி இருக்கும். ஆனால் கடந்த 13 ஆண்டுகளாக நான் நோன்பை கடைபிடித்து வருகிறேன்.

Actor Manoj Bajpayee says that he has not had dinner for the last 13 years

காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை ஆரோக்கியமான உணவு முறைகளை உட்கொண்டு விடுவேன், சாப்பிட்ட உணவு செரிக்க வேண்டும். உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் அகல வேண்டும். இதற்காக ஒருவர் முழு தானியங்கள், காய்கறிகள், பழங்கள், புரதச் சத்துள்ள உணவுகளை உட்கொள்ளலாம். சாப்பிடுவது 8 மணி நேரம் முதல் 10 மணி நேரம் வரையும் உண்ணாநோன்பு 14 முதல் 16 மணி நேரம் வரையும் இருக்க வேண்டும் என்றார் மனோஜ்.

இதுகுறித்து மருத்துவர்கள் கூறுகையில் இரவு உண்ணாமை அவரவர் சவுகரியத்திற்கு ஏற்ப இருத்தல் வேண்டும். இதனால் ஒன்று காலை உணவையோ இரவு உணவையோ தவிர்க்க வேண்டும். காலை உணவை காட்டிலும் இரவு உணவை தவிர்ப்பது எளிதானது என மருத்துவர்கள் கூறுகிறார்கள். இரவு நேரம் ஆரம்பிப்பதற்கு முன்பு சீக்கிரமாக உணவை சாப்பட்டுவிட்டு பிறகு இரவு முழுவதும் எதையும் உண்ணாமல் தூங்கி எழுந்துவிட வேண்டும்.

இதுதான் ஜீரணத்தை மேம்படுத்தும். அது போல் இரவில் பசிக்கிறது என்பதற்காக நொறுக்குத் தீனியை சாப்பிடக் கூடாது. இது போல் இரவு நேரங்களில் உண்ணாமல் இருப்பது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும். மாலை வேளைகளில் நன்கு உடல் உழைப்பில் இருக்கும் ஒருவரால் இரவு உணவை தவிர்க்க முடியாது. இதனால் தசைகளில் காயங்கள் ஏற்படும்.

எனவே ஒருவரை பார்த்துவிட்டு இரவு உணவை தவிர்ப்பதை காட்டிலும் மருத்துவரிடம் ஆலோசனை பெற்று அவர் கூறுவதை கேட்டு செயல்படுத்தினால் நன்றாக இருக்கும். இரவு உண்ணாமல் இருத்தல் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் செய்ய வேண்டும். இது எல்லாருக்கும் செட் ஆகும் என சொல்ல முடியாது. இப்படி செய்தால் தலைவலி, மயக்கம், தோல் பிரச்சினைகள், முடிகொட்டுதல் உள்ளிட்டவை ஏற்படும். இது போல் உணவு உண்ணாமல் இருக்க நினைப்பவர்கள் அதை தொடங்குவதற்கு முன்பு தங்கள் உடல் நிலை எப்படி இருக்கிறது என்பதை ஆய்வு செய்துவிட்டு அதற்கேற்ப நடந்து கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+