தினந்தோறும் குல்கந்து.. ஆரோக்கியம் தரும் வெற்றிலை.. மலட்டுத்தன்மையை நீக்கும் அருமருந்து.. ஆச்சரியம்
சென்னை: ஜீரண சக்தி முதல் ஆண்மை கோளாறுகள் வரை சரிசெய்யக்கூடிய வெற்றிலை மற்றும் குல்கந்து பற்றி தெரியுமா? இவைகளிலுள்ள சத்துக்கள் என்னென்ன? இவைகளை மருந்தாக எப்படியெல்லாம் பயன்படுத்தலாம்? சுருக்கமாக இங்கே பார்க்கலாம்.
ஆயுர்வேதத்தில் சிறந்த டானிக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது குல்கந்து.. ஏராளமான கால்சியம் சத்துக்கள் நிறைந்திருக்கின்றன.. குல்கந்து என்பது பன்னீர் ரோஜா இதழ்களினால் தயாரிக்கப்படும் ஒரு சுவை மிகுந்த ஆயுர்வேத மருந்தாகும்.

பன்னீர் ரோஜாக்களின் இதழ்களை தனியாக பிரித்து, சுத்தமாக கழுவி உலர வைத்துவிட வேண்டும். பிறகு ஒரு பெரிய கற்கண்டு மற்றும் உலர வைத்த ரோஜா இதழ்கள் இரண்டையும் நன்றாக இடித்து கொள்ள வேண்டும். தேவைப்பட்டால் சிறிது கசகசா மற்றும் வெள்ளரி விதைகளை சேர்த்து இடித்துக்கொள்ளலாம்.
கண்ணாடி ஜாடி: ஒரு கண்ணாடி ஜாடியில் இடித்து வைக்கப்பட்ட ரோஜா பேஸ்ட்டினை போட்டு, 10 நாட்களுக்கு வெயிலில் வைத்து எடுத்தால் போதும், குல்கந்து ரெடியாகிவிடும். இதனுடன் தேன் கலந்தும் சாப்பிடலாம். அல்லது டீஸ்பூன் குல்கந்துவை தண்ணீரில் கலந்து குடித்து, அந்த ரோஜா இதழ்களை மென்று சாப்பிடலாம். அல்லது குளிர்ந்த பாலில் குல்கந்துவை 1 ஸ்பூன் சேர்த்து குடிக்கலாம். அதேபோல வெற்றிலையிலும் சேர்த்து சாப்பிடலாம்.
இந்த ரோஜா குல்கந்து குளிர்ச்சியை தரக்கூடியது. அதனால், இதனை பெரும்பாலும் கோடை காலத்தில் பயன்படுத்துவார்கள். கோடையில் அதிக வியர்வை, வேர்க்குரு, உஷ்ணம், உடல் சோர்வு, சரும பிரச்சனை என பல உள்ளன. இவைகளுக்கு குல்கந்து ஒரு சிறந்த தீர்வாக இருக்கும்.
சூப்பர் மருந்து: அதேசமயம், எல்லா காலத்திலும் நாம் சாப்பிட வேண்டிய சூப்பர் மருந்துதான் இந்த குல்கந்து. ஏனென்றால், செரிமான பிரச்சனையை போக்குவதுடன், இரைப்பை அழற்சி, தோல் பராமரிப்பு, அல்சர், மன அழுத்தம் இப்படி எண்ணற்ற உபாதைகளுக்கு மருந்தாகிறது.. வயிற்றுப்புண், குடல் புண்கள் உட்பட கடுமையான புண்களையும் குணப்படுத்தக்கூடியது.
கோடை காலத்தில், உஷ்ணம் அதிகமாகி மூக்கிலிருந்து ரத்தம் வடிதல் உட்பட சூடு சம்பந்தப்பட்ட நோய்களுக்கு குல்கந்து பயன்படுத்தலாம்.. ரத்த அழுத்தம் இருப்பவர்களுக்கும் குல்கந்து தீர்வை தரக்கூடியது.. இதனால் இதயம் சம்பந்தமான பாதிப்புகளும் நெருங்காமல் இருக்கும்.. கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்படும் மலச்சிக்கல் தொல்லையை குல்கந்துகள் தீர்க்கின்றன.
மாதவிடாய் : மாதவிடாய் நேரத்தில் அதிக ரத்த போக்கு, வயிறு வலி அதிகமாக இருந்தால், குல்கந்து தாராளமாக சாப்பிடலாம்.. கர்ப்பப்பை கட்டிகளான PCOD பிரச்சனைக்கு இருந்தாலும், அனீமியா தொந்தரவு இருந்தாலும் குல்கந்து கை கொடுத்து உதவக்கூடியது. ரத்தத்தையும் சுத்தப்படுத்தி, உடலிலுள்ள பித்த அளவை சீராக்குகிறது.
ஆண்மை குறைபாட்டை சரிசெய்வதில் வெற்றிலையை போலவே, குல்கந்துவுக்கும் நிறைய பங்கிருக்கிறது.. வெற்றிலை, குல்கந்து இவை இரண்டுமே மலட்டுத்தன்மையை நீக்கக்கூடியவை. அதனால், வெற்றிலையில் குல்கந்துவை வைத்து சாப்பிடுவார்கள்.
வெற்றிலை: நம் உடலில் வாதம், பித்தம், கபம் இவை மூன்றுமே சமநிலையில் பராமரிக்கப்பட வேண்டும். இதற்காகவே, வெற்றிலையில் பாக்கு சுண்ணாம்பு சேர்த்து நாம் பயன்படுத்துகிறோம். குல்கந்துவிலும் இதே பண்புகள்தான் உள்ளன.
குல்கந்துவிலும், வெற்றிலையிலும் கால்சியம் சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. குல்கந்துவும், வெற்றிலையும் செரிமானத்தை சீராக்கி, அஜீரண கோளாறுகளை போக்குகின்றன. அதனால்தான் வெற்றிலையுடன் குல்கந்தையும் சேர்த்து சாப்பிடும்போது கூடுதல் பலன் கிடைக்கிறது.












Click it and Unblock the Notifications