தினந்தோறும் 1 இன்சுலின் இலை.. சர்க்கரை நோயாளி தவறவிடக்கூடாத காசினி கீரை.. 5 தழை பற்றி தெரியாம போச்சே
சென்னை: சர்க்கரை நோயாளிகளுக்கு இயற்கை அளித்த கொடை தான் இந்த 5 மூலிகை இலைகள்.. நீரிழிவு நோயாளிகள் தவற விடக்கூடாத அந்த இலைகள் என்னென்ன தெரியுமா? அதன் பயன்கள் என்னென்ன தெரியுமா?
சீதாப்பழத்தை சர்க்கரை நோயாளிகள் தொட்டுக்கூட பார்க்கக்கூடாது.. ஆனால், சீதாப்பழ மரத்தின் இலைகள் அத்தனையும் நன்மைகளை தரக்கூடியது.. நீரிழிவு எதிர்ப்பு பண்புகள் இந்த இலையில் உள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன.

சீதாபழ இலை: சீதா இலைகளை சாப்பிட்டு வரும்போது கணையத்தில் இன்சுலின் அளவு அதிகரிக்க உதவுகிறது... இதில் ரத்த சர்க்கரையும் குறைகிறது. இந்த இலைகள் உடலிலுள்ள சர்க்கரையை கரைத்து, சீரான அளவில் வைத்திருக்க உதவும்..
சீதா பழ இலைகளை ஒரு கைப்பிடி எடுத்து நன்றாக சுத்தம் செய்து, தண்ணீரில் 5 நிமிடம் கொதிக்க விட்டு பிறகு வடிகட்டி, தினமும் காலையில் குடித்து வந்தாலே சர்க்கரை நோயின் அளவு கட்டுக்குள் இருக்கும் என்கிறார்கள்.
இன்சுலின் சுரப்பு: அடுத்ததாக, சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் தன்மை வேப்பிலைகளுக்கு நிறையவே உள்ளதாக என்சிபிஐ-ன் (NCBI) ஆய்வுகளில் நிரூபணமாகியிருக்கிறது. வெறும் வயிற்றில் நான்கைந்து வேப்பிலையை மென்று சாப்பிட்டு வரும்போது ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்காது. கணையமும் தன்னுடைய வேலையை சரியாக செய்யும்.. இதன்மூலம் இயற்கையான செயல்முறை மூலம் இன்சுலினும் உற்பத்தி செய்யப்படுகிறது.
இதற்கு, ஒரு லிட்டர் நீரில், 20 வேப்பிலையை கழுவி சேர்த்து, பாதியாக சுண்டும்வரை கொதிக்க வைக்க வைக்க வேண்டும். பிறகு இந்த இதனை வடிகட்டி, உணவு சாப்பிடுவதற்கு முன்பு, அரை டம்ளர் மட்டும் குடித்து வந்தால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும் என்கிறார்கள்.
கொய்யா இலை: இதில் கொய்யா இலைகளையும் சேர்த்து கொள்ளலாம்.. ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை மேம்படுத்தும் திறனும், நீண்ட கால ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தக்கூடிய தன்மையும் இந்த இலைகளுக்கு உள்ளது.. இன்சுலின் எதிர்ப்பை நிர்வகிக்கும் பண்புகள் இந்த கொய்யா இலைகளில் உள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன.
அதுமட்டுமல்ல, செரிமானத்தின்போது கார்போஹைட்ரேட்டுகளை குளுக்கோஸாக மாற்றும் பல நொதிகளையும் கொய்யா இலைகள் தடுக்கிறதாம்.. அதிலும், டைப்-2 நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு இந்த கொய்யா இலைகள் பேருதவி புரிகின்றன. கொய்யா குறைந்த கிளைசெமிக் குறியீட்டை கொண்டிருப்பதால், அதனுடைய செரிமானமும், உறிஞ்சுதலும் தாமதமாகிறது.. அதனால், இந்த இலையில் டீ தயாரித்து, உணவு சாப்பிட்ட பிறகு குடித்து வந்தால், குளுக்கோஸ் உறிஞ்சுதலை தடுக்கலாம்..
இன்சுலின் இலை: இன்சுலின் சுரப்பை சுரக்க செய்யக்கூடியது இன்சுலின் கீரைகள்.. நம்முடைய உடலில் இன்சுலினை போல் செயல்பட்டு, சர்க்கரையை கட்டுப்படுத்தக்கூடியது இந்த செடி.. அதனால்தான் இதனை இன்சுலின் செடி என்கிறார்கள். பெயரில் இன்சுலின் இருந்தாலும், இந்த செடியில் இன்சுலின் கிடையாது. சர்க்கரை நோயாளிகள் இந்த செடியின் 2 இலைகளை, வெறுமனே பச்சையாக மென்று சாப்பிட்டு வந்தாலே, சர்க்கரையின் அளவு வெகுவாக கட்டுப்படும்..
சர்க்கரை நோயாளிகள் தவறவிடாமல் சாப்பிட வேண்டிய கீரை இதுவாகும். இதனை சுத்தம் செய்து நன்றாக கழுவி, நிழலில் உலர்த்தி காயவைத்து, பவுடர் செய்து வைத்து கொண்டால் போதும். புரதங்கள், ஆக்ஸிஜனேற்றிகள், அஸ்கார்பிக் அமிலம், இரும்புச்சத்து, டெர்பெனாய்டுகள், ஃபிளாவனாய்டுகள், B-கரோட்டின், கார்சோலிக் அமிலம் போன்ற ஏகப்பட்ட ஊட்டச்சத்துக்கள் இதில் உள்ளன.
காசினிக்கீரை: காசினிகீரை பொடி என்று நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கிறது. இந்த பொடியுடன் நெய் அல்லது நல்லெண்ணெய் விட்டு சாதத்துடன் பிசைந்து சாப்பிட்டாலும் நீரிழிவு நோய் கட்டுப்படும்.
காசினிக்கீரை இன்சுலின் சுரப்பை சுரக்க செய்வதால் இது சர்க்கரை நோயாளிகளின் வரப்பிரசாதம் எனலாம். ஏனென்றால், நீரிழிவு பாதிக்கப்பட்டவர்களுக்கு புண்கள் ஏற்பட்டால், இந்த கீரையை அரைத்து பற்று போட்டு கட்டினால், உடனே ஆறிவிடும். அல்லது இந்த கீரையின் சாற்றினை, புண்களின் மீது தடவினாலே, புண்கள் ஆறிவிடும்.
கற்றாழை இலை: கற்றாழை இலைகளையும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால், இன்சுலின் உற்பத்தி அதிகரித்து, ரத்தத்தில் உள்ள சர்க்கரையை தானாகவே கட்டுப்படுத்தும். இந்த இலைகள் அனைத்துமே, இயற்கையானது என்றாலும்கூட, சர்க்கரை நோயை கட்டுப்படுத்தக்கூடியவை என ஆய்வுகளின் மூலம் நிரூபணமானாலும்கூட, நீரிழிவு நோயாளிகள் இதை மருத்துவர்களின் பரிந்துரையின்றி சாப்பிடக்கூடாது. எந்த உணவையும் மருந்தாக எடுத்து கொள்ளும்போது, டாக்டர்களின் ஆலோசனையின் பேரில் எடுத்து கொள்வதே சிறந்த ஆரோக்கியமாகும்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications