மினுமினுப்பு சருமம் வேணுமா.. மாதுளை இலை கைப்பிடி போதும்.. வாய்ப்புண் ஆற்றும் சூப்பர் மாதுளம் இலைகள்
சென்னை: உடல் முழுவதும் உள்ள உஷ்ணத்தை அகற்றும் சக்தி மாதுளை இலைகளுக்கு உள்ளது.. சரும நோய்களை விரட்டும் தன்மையும் இந்த மாதுளை இலைகளுக்கு உள்ளது.. எப்படி தெரியுமா?
மாதுளம் பழத்தை பொறுத்தவரை, வைட்டமின் C, நார்ச்சத்து, பொட்டாசியம் போன்ற ஆன்டிஆக்சிடன்ட் அதிகம் உள்ளன.. இந்த பழங்களை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், புற்றுநோய் பாதிப்புகள் நம்மை அண்டாது என்கிறார்கள்.. அதனால்தான், புற்றுநோய் சிகிச்சை எடுத்துக் கொண்டவர்களும்கூட, மாதுளம் பழத்தை விடாமல் சாப்பிடுவார்கள்..

கொழுப்பு: உடலிலுள்ள கொழுப்பை கரைப்பதிலும், உடல் எடையை குறைப்பதிலும், நார்ச்சத்தும், நீர்ச்சத்துக்களின் பங்கு அபாரம்.. அந்த சத்துக்கள் அத்தனையும் இந்த மாதுளையில் உள்ளன..
வயிற்றிலுள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைத்து நீக்கும்.. இதயம் சம்மந்தமான நோய் பிரச்சனை உடையவர்களும், மிதமான அளவில் அதுவும் டாக்டர்களின் ஆலோசனையை பெற்று, மாதுளம்பழச்சாறை சர்க்கரை சேர்க்காமல் குடிக்கலாம்.
மாதுளம் பழத்தைபோலவே, இதன் இலைகளும் உடலுக்கு நன்மையை தருகின்றன.. வைட்டமின் C அதிகம் இருப்பதால், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இந்த இலைகள் உதவுகின்றன. எனவேதான், சளி, இருமல் பிரச்சனைகளுக்கு மாதுளை இலையில் டீ, அல்லது கசாயம்போல காய்ச்சி குடிப்பார்கள்..
கைப்பிடி போதும்: ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, ஒரு கைப்பிடி இலைகளை சுத்தம் செய்து, அதில் சேர்த்து கொதிக்கவைத்து, வடிகட்டி குடித்தாலே, சுவாச பிரச்சனைகள் அத்தனையும் தீரும்.. தொண்டை வலியும் நீங்கும்.. இந்த இலைகளின் தண்ணீரை இப்படி கொதிக்க வைத்து இரவு நேரத்தில் குடித்துவிட்டு படுத்தால், ஆழ்ந்த தூக்கம் கிடைக்கும்.
அவ்வளவு ஏன், உடல் எடை குறைய நினைப்பவர்கள், குறிப்பாக தொப்பை இருப்பவர்கள், இந்த இலையின் தண்ணீரை குடித்து வந்தாலே நிறைய பலன்கள் கிடைக்குமாம்... இந்த இலையை கொதிக்க வைத்து குடிக்கும்போது, அஜீரணம் நீங்குகிறது.. செரிமானம் சீராகிறது.. வயிற்றுப்போக்கு, வயிற்றுப்பிரச்சனை தீர்கிறது.. வயிற்று குடலும் சுத்தமாகின்றன.. வயிற்று வலி மற்றும் அது தொடர்பான பிற பிரச்சினைகள் இருந்தால், மாதுளை இலைகளை மருந்தாக உட்கொள்ளலாம்.
வயிறு பிரச்சனை: வயிற்றுபோக்கு இருப்பவர்கள், மாதுளை இலை சாற்றை குடித்தால் உடனே பலன்கிடைக்கும். மாதுளம்பழத்தின் இலைகளிலிருந்து சாறு எடுத்து, இதில், சிறிது மாதுளை ஜூஸையும் சேர்த்து குடித்தால் பலன் இரட்டிப்பாகும்.. இருமல், சளி பிரச்சனைகள் நீங்குகின்றன.. ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்கிறது.. சருமம் பொலிவு பெறுகிறது.
அதேபோல, மூளையில் உள்ள நரம்பியல் கடத்திகள் இயற்கையாகவே தன் சக்திகளை அதிகரித்து, மூளையை சுறுசுறுப்பாக்கும்.. ஞாபக சக்தியை அதிகரிக்க செய்யும்.. அத்துடன் அல்சைமர் மற்றும் மூளைக்கட்டிகள் வராமல் தடுத்து பாதுகாக்கும் தன்மை இந்த மாதுளை இலைகளுக்கு உள்ளது.
குளிர்ச்சி: குளிர்ச்சியை தரக்கூடியது இந்த மாதுளை இலைகளை, உடல் உஷ்ணத்தை விரட்டவும், சருமத்தை காத்து கொள்ளவும் பயன்படுத்தலாம்.. உடலில் ஏற்படும் சரும பாதிப்புகளை இந்த இலையை அரைத்து விழுதாகவும் பயன்படுத்தலாம்.. கொப்புளங்கள், காயங்கள், முகப்பருக்கள், தீப்புண்கள், வீக்கங்கள், இப்படி பலவித சரும தொந்தரவுகளுக்கு இந்த இலைகள் மருந்தாகின்றன.
மாதுளம்பழச்சாறு தலைமுடியின் வேர்களை உறுதிப்படுத்தக்கூடியவை.. தலையில் ரத்த ஓட்டத்தைச் சீராக்கி, முடிவளர்ச்சியையும் தூண்டக்கூடியவை.. இதிலுள்ள வைட்டமின் மற்றும் தனிமங்கள் முடியைப் பளபளப்பாகவும் அடர்த்தியாகவும் மாற்றுகின்றன.
தொற்றுகள்: ஆன்டி பாக்டீரியல், ஆன்டி-ஆக்ஸிடன்ட் பண்புகள் இந்த இலையில் நிறைந்துள்ளதால், அவை வாயில் காணப்படும் பாக்டீரியாக்களை அழித்துவிடக்கூடியது.. எனவே, வாய்ப்புண், வயிற்றுப்புண்களை மாதுளம் இலைகள் ஆற்றுகின்றன.. காது வலியால் அவதிப்படுபவர்களும், மாதுளை இலையின் சாறுகளை சில துளிகள் விட்டால் நிவாரணம் கிடைக்கும். இந்த பசுமையான இலைகளை அரைத்து பேஸ்ட் போல அரைத்து, கண் மீது தடவினால் கண் நோய்கள் குணமாகும்.












Click it and Unblock the Notifications