இட்லிக்கு அரைக்கறீங்களா? இதையும் 3 ஸ்பூன் சேருங்க.. சிவப்பா இருக்கேனு யோசிக்காதீங்க.. சூப்பர் சத்து
சென்னை: இட்லி, தோசைக்கு மாவு அரைக்கும்போது, சத்தான பொருட்களையும் சேர்த்து அரைத்தால், உடலுக்கு ஊட்டச்சத்தும், ஆற்றலும் அதிகமாகவே கிடைக்கும். அந்தவகையில், ஒருசிலவற்றை பார்ப்போம்.
இட்லிக்கு மாவு அரைக்கும்போது அரிசிக்கு பதிலாக சத்து நிறைந்த தானியங்களை பயன்படுத்தலாம்.. கேழ்வரகு, ஓட்ஸ், கொள்ளு, போன்றவற்றை சேர்த்து அரைக்கலாம். வெள்ளை அவல் சேர்த்தும் அரைக்கலாம்.

பாசிபருப்பு: சிலர் பாசிபருப்பு சேர்த்து அரைப்பார்கள்... காரணம், பாசிப்பருப்புகள் நமக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தரக்கூடியவை. உடல் எடையை அதிகரிக்க செய்யாது. அதேபோல, சாதாரண உளுந்துக்கு பதில், கருப்பு உளுந்து சேர்த்து அரைத்தால் கூடுதல் நன்மை கிடைக்கும்.
அதேபோல, மாவு நன்றாக புளிக்க வேண்டும். புளிக்காமல் இருந்தால் இட்லி தோசை செய்து எடுக்கும் போது அது கல்லு போல வந்துவிடும்.. மாவு நன்றாக புளிக்க வேண்டுமானால், அரைத்த மாவை புளிக்க வைக்கும்போது அதில் கொஞ்சமாக தயிர் சேர்த்து அரைத்தால் மாவு எளிதில் புளித்து பஞ்சு போன்ற இட்லி வரும்.
பக்குவம்: இட்லி மென்மையாக வரவேண்டுமானால், மாவு அரைக்கும் பக்குவம் கவனிக்க வேண்டிய ஒன்றாகும்.. இட்லிக்கு மாவு அரைக்கும்போது தண்ணீர் அதிகமாகிவிடக்கூடாது.. அதேபோல மாவு கெட்டியாகிவிடக்கூடாது.. அதேபோல உளுந்து அதிகமாகிவிடவும்கூடாது, குறைவாகிவிடவும் கூடாது, இதனால், இட்லி கெட்டியாகிவிடும்.
குளிர்காலங்களில் மாவு எளிதில் புளிக்காது. அப்போது, இந்த தயிர் நமக்கு கைகொடுத்து உதவும்.. அல்லது தண்ணீருக்கு பதிலாக இளநீர் சேர்த்து அரைத்தாலும், மாவு பொங்கி வரும்.. இப்படி பொங்கிவரும் மாவு, நன்றாக புளித்தே இருக்கும்.. மாவு எவ்வளவு புளிக்கிறதோ அந்த அளவிற்கு இட்லி தோசை மென்மையாக பூ போல வரும்.
அரிசி மாவு: எப்போதுமே, அரைத்த மாவை மட்டும் தனியாக பாத்திரத்தில் எடுத்து வைத்து, குறைந்தது 8 மணி நேரமாவது வெளியேவைத்து புளிக்க வைக்க வேண்டும். அதுமட்டுமல்ல, அரிசி மாவை மட்டுமே புளிக்க விட வேண்டும். உளுந்தப்பருப்பு மாவு புளிக்க வேண்டும் என்ற அவசியமில்லை.
சிவப்பு அவல் சேர்த்து இட்லி அவித்தாலும் சத்தும், ருசியும் கிடைக்கும். இதற்கு அரிசியை தனி பாத்திரத்திலும், அவல், உளுந்து வெந்தயம், 2 ஸ்பூன் ஜவ்வரிசி, இவைகளையெல்லாம் இன்னொரு பாத்திரத்திலும் ஊற வைக்க வேண்டும். நான்கைந்து மணி நேரம் ஊற வைத்து கொள்ள வேண்டும்.
சத்தான இட்லி: முதலில், உளுந்தினை கெட்டியாகவும், பஞ்சுபோலவும் அரைத்து, தனியாக வைத்து கொள்ள வேண்டும் அடுத்ததாக அரிசியில் சிறிது உப்பு சேர்த்து மொறமொறப்பாக அரைக்க வேண்டும். இதற்கு பிறகு இவைகளை ஒன்றாக கலந்து புளிக்க விட்டு இட்லியோ, தோசையோ சுடலாம்.
இந்த அவலில், கொலஸ்ட்ரால், சோடியம், கொழுப்பு கிடையாது.. இரும்புச்சத்து ஆரோக்கியமான கார்போஹைட்ரேட்டுகள் உள்ளன.ஒரு கப் அவலில், 250 கலோரிகள் இருக்கிறதாம். வயிற்றுப்புண், வாய்ப்புண்களை ஆற்றக்கூடியது.. புற்றுநோய் உண்டாக்கும் அமிலங்களை குடலுக்குள் செல்லவிடாமல் தடுப்பதில், சிவப்பு அவலுக்கு பெரும் பங்கு உள்ளது..
உடல் எடை: எனவே, உடல் எடையை குறைக்க முயற்சிப்பவர்கள், சர்க்கரை நோயாளிகளுக்கு இது ஒரு நல்ல உணவாக அமைகிறது. இதிலுள்ள நார்ச்சத்து ரத்தத்தில் உடனடியாக குளுக்கோஸ் கலக்காமல் இருக்க உதவி புரிகிறது. பட்டை தீட்டப்படாத அரிசியிலிருந்து தயாரிக்கப்படுவதால், இதை அளவுடன் நீரிழிவு நோயாளிகள் சாப்பிடலாம்.
மாவு புளிக்க: மாவு நன்றாக புளிக்க வேண்டுமானால், முதலில் அரிசி, உளுந்து வீதம் சரியாக இருக்க வேண்டும். உதாரணத்துக்கு 4 கப் அரிசிக்கு ஒரு கப் உளுந்து என்ற விதத்தில் அரைத்திருக்க வேண்டும்.. அதற்கு பிறகே உப்பு போட்டு கைகளால் கரைக்க வேண்டும். கைகளில் நன்கு கரைத்தால் தான் மாவு நன்றாக புளிக்கும். மாவு உடனே புளித்து வரவேண்டும் என்றால். புதிதாக அரைத்த மாவுடன் ஏற்கனவே அரைத்து புளித்த மாவு இருந்தால் அதனை கலந்து கொள்ளலாம்.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications