மூலச்சூடு முதல் உஷ்ண கட்டிவரை ஓட்டும் பழம்பாசி இலைகள்.. பயனதரும் பழம்பாசி.. அசத்தல் "பச்சை கலர்" தூள்
சென்னை: கோடை வெயில் சுட்டெரித்து கொண்டிருக்கும் நிலையில், கை கொடுத்து உதவக்கூடிய பழம்பாசி இலையை பற்றி தெரியுமா? அதன் மகத்துவம் பாருங்கள்.
பொதுவாக, பழம்பாசி செடி, வேர்களை லேகியமாக தயாரித்து, பெண்களின் பிரசவ காலத்தில் தருவார்கள்.. இந்த பழம்பாசி வேர்கள் மஞ்சள் காமாலைக்கு மருந்தாகிறது. நரம்புத்தளர்ச்சி, வலிப்பு வியாதிகளையும் குணமாக்குகிறது.. ரத்த அழுத்த பாதிப்புகளையும் தீர்க்கக்கூடியது.. அனீமியா பிரச்சனை இருப்பவர்களுக்கு கை கொடுத்து உதவக்கூடிய மருந்து இதுவாகும்..

அருமருந்து: இது அனைத்தையும் விட, இந்த பழம்பாசி இலைகள் உஷ்ணத்தை போக்கக்கூடிய அருமருந்தாகும்.. உடல் சூட்டினால், நமக்கு ஏற்படக்கூடிய அத்தனை உபாதைகளுக்கும் இந்த பழம்பாசி மட்டுமே பலனை தந்துவிடும்.
உடல் வறட்சி, சூடு, போன்றவற்றுக்கு, பழம்பாசி இலைகளை பவுடராக்கி, இதில், சீரகத்தூள், வெந்தயத்தூள் சேர்த்து கலந்து, தினமும் 2 ஸ்பூன் மோரில் சாப்பிட்டு வந்தாலே உடல் உறுப்புகளிலுள்ள அத்தனை உஷ்ணமும் நீங்கிவிடுமாம்... சிறுநீர் பாதையில் எரிச்சல் இருந்தாலும், சிறுநீர் கடுப்பு இருந்தாலும், பழம்பாசி இலைகளை பவுடராக்கி சீரகம் , வெந்தயத்தை பொடியாக்கி மோரில் கலந்து குடித்து வந்தால், சிறுநீர் தாராளமாக பிரியும் என்கிறார்கள்.
பழம்பாசி : அதேபோல, உடல் உஷ்ணத்தினால், பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்போக்கு பிரச்சனைக்கும் இந்த பழம்பாசியே மருந்தாகிறது.. பழம்பாசி இலைகளை பறித்து நன்றாக சுத்தம் செய்து, சீரகம் சேர்த்து அரைத்து மோரில் கலந்து தினமும் காலையில் காபி டீ குடிப்பதற்கு முன்பு குடித்துவந்தாலே வெள்ளைப் படுதல் பாதிப்பு சரியாகிவிடுமாம். இதே உடல் உஷ்ணத்தினால், கருத்தரிக்க முடியாமல் இருந்த பெண்களின் பாதிப்புகளையும் இந்த பழம்பாசி குணமாக்குகிறது..
அதேபோல, உடல் உஷ்ணத்தினால் ஏற்படக்கூடிய மூலவியாதியின் தாக்கத்தையும், பாதிப்பையும், போக்குகிறது இந்த பழம்பாசி இலைகள்.. இதற்கு என்ன செய்ய வேண்டும் தெரியுமா? சிறிது பழம்பாசி இலைகளை நன்றாக கழுவி, பாலில் போட்டு கொதிக்கவைத்து வடிகட்டி எடுத் கொள்ள வேண்டும். இந்த பாலில் சிறிது எலுமிச்சம்பழச்சாறு, தேன் கலந்து தினமும் 2 வேளை குடித்து வந்தாலே மூலச்சூடு பறந்துவிடுமாம்.
குழந்தைகள்: அதேபோல, உடல்சூட்டால் குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு பிரச்சனைக்கும், உடலில் உண்டாகும் உஷ்ண கட்டிகள் போக்குவதற்கும் இந்த பழம்பாசி இலைகளே கை கொடுத்து உதவுகின்றன..
அதுமட்டுமல்ல, இலைகளை விழுதாக அரைத்து, தலையில் தேய்த்து குளித்து வந்தால், உடலிலுள்ள சொறி, சிரங்கு, வேர்க்குரு, கட்டிகள் போன்றவை நீங்கும்.. கண் எரிச்சல், கண்ணிலிருந்து நீர் வடிதல், நீங்கும்.. மலச்சிக்கல் உள்ளவர்களும் இந்த பழம்பாசி இலைகளை மருந்தாக பயன்படுத்தலாம்..!!












Click it and Unblock the Notifications