தூங்க போகும் முன்பு சாப்பிடக்கூடாத பழங்கள் எதெல்லாம் தெரியுமா? லிஸ்டில் வாழைப்பழமும் இருக்கே!
சென்னை: பழங்கள் நம் உடலுக்கு ஆரோக்கியமானது என்றாலும், சில பழங்களை லேட் நைட்டில் சாப்பிடக்கூடாது என்று சுகாதார நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர். அது என்னென்ன பழங்கள் என்பதை இங்கே பார்க்கலாம்.
பழங்கள் நமது உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. பழங்களில் இருக்கும் இனிப்பு, ஊட்டச்சத்து ஆகியவற்றால் பலரும் விரும்பி சாப்பிடும் உணவு பொருளாக பழங்கள் உள்ளன. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பழங்களை விரும்பாத நபர்களே இருக்க மாட்டார்கள்.

என்னதான் பழங்கள் உடல் நலனுக்கு நல்லது என்றாலும் சில பழங்களை லேட் நைட்டில் சாப்பிடக்கூடாது என்று அறிவுறுத்துகிறார்கள் சுகாதார நிபுணர்கள்.. அந்த வகையான பழங்கள் என்னவென்று இங்கே பார்க்கலாம்..
சிட்ரஸ் பழங்கள்: சிட்ரஸ் பழங்கள் என்று சொல்லக்கூடிய ஆரஞ்சுகள், திராட்சை பழங்கள், எலுமிச்சை மற்றும் பிற அமிலதன்மை கொண்ட பழங்களை இரவு நேரத்தில் குறிப்பாக தூங்க போகும் முன்பாக சாப்பிடக்கூடாது. இந்த பழங்களை சாப்பிட்ட உடன் தூங்க போனால், அஜீரணம், நெஞ்சு எரிச்சல், தூக்கத்தில் பாதிப்பு போன்றவை ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஏனெனில், சிட்ரஸ் பழங்களில் உள்ள அமிலம் நமது வயிற்றில் செரிமானக் கோளாறை ஏற்படுத்துமாம்.
அண்ணாச்சிப்பழம்: அண்ணாச்சி பழத்தில் ப்ரோம்லைன் எனப்படும் நொதி உள்ளது. இது ஜீரணத்திற்கு உதவும். சில நேரங்களில் அதிக அளவு இந்த பழங்களை சாப்பிட்டாலோ.. அல்லது வெறும் வயிற்றில் உட்கொள்ளும் போது இரைப்பை குடல் கோளாறுகளை ஏற்படுத்தும். தூங்க போகும் முன்பாக அண்ணாசி பழத்தை சாப்பிடுவது செரிமான பிரச்சினை, வாயு பிரச்சினை ஆகியவற்றை ஏற்படுத்தும். ப்ரோம்லைன் நொதி, இரப்பையில் அதிக அமிலத்தை சுரக்க வைத்து வயிறு உபாதைகளை ஏற்படுத்தக்கூடும்.
தர்ப்பூசணி: வெயில் காலத்தில் சந்தையில் அதிகம் காணப்படும் பழம் தர்பூசணி. சாலையோரங்களில் கூட அதிக அளவில் தர்பூசணி பழங்களை அடுக்கி வைத்திருப்பதை காண முடியும். நீர்ச்சத்து மிக்க இந்த பழங்கள் வெயில் காலத்தில் மிகவும் நல்லது. அதே நேரத்தில், இந்த பழங்களை இரவு நேரத்தில் சாப்பிடக்கூடாது.
ஏனெனில் இரவில் சாப்பிட்டால் வயிறு உப்புசம், அசௌகரியம் ஆகியவை ஏற்படும். குறிப்பாக அதிகமாக சாப்பிட்டால் இதுபோன்ற பிரச்சினைகள் வரலாம். இந்த பழத்தில் அதிகப்படியான நீர் மற்றும் சர்க்கரை சத்து உள்ளதால் ஜீரணம் ஆக நமது உடல் போராடும்.தொப்புளில்.. 2 சொட்டு எண்ணெய் விடுங்க.. அதிசயத்தை பாருங்க.. ஆமா, தேங்காய் எண்ணெய்யா? விளக்கெண்ணெய்யா
மாம்பழங்கள்: கோடைக்காலத்தில் கிடைக்கும் சுவைமிக்க பழங்களில் ஒன்று மாம்பழம். முக்கனிகளில் ஒன்றான மாம்பழம் சுவை மட்டும் இன்றி சத்து மிக்கது. இருந்தாலும் இரவு தூங்கும் முன்பாக மாம்பழத்தை சாப்பிடுவது நமது உடலில் சர்க்கரை அளவு வேகமாக கூட்ட வழிவகுக்கும். மேலும் தூக்கத்திலும் பாதிப்பை ஏற்படுத்தலாம். மாம்பழத்தில் அதிக நார்ச்சத்து இருப்பதால், இரவில் சாப்பிடும் போது ஜீரண கோளாறுகள் ஏற்படும்.
வழைப்பழங்கள்: பழங்கள் என்று சொன்னது நம் நினைவுக்கு வருவது வாழைப்பழங்களாகத்தான் இருக்கும். முக்கனிகளில் ஒன்றான வாழைப்பழம் சுவைமிக்கது மட்டுமின்றி அதிக சத்து நிறைந்தது. விலையும் மலிவு என்பதோடு அனைத்து சீசன்களிலும் கிடைக்க கூடிய இந்த பழங்கள் நாள்தோறும் சாப்பிடும் பழக்கம் பலருக்கும் உள்ளது.
வாழைப்பழத்தில் பொட்டாசியம், மெக்னீசியம் ஆகியவை உள்ளது. இத்தகைய சத்துக்கள் இருந்தாலும் அதிகம் சாப்பிட்டால்.. வாழைப்பழத்தில் சில உடல் உபாதைகளும் ஏற்படலாம். அதாவது, தூங்குவதற்கு முன்பாக அதிகமாக சாப்பிட்டால் நமது ஆற்றல் கூடும். இதனால், தூங்குவதற்கு சிரமம் ஏற்படும். கூடுதலாக, சில நேரங்களில் வயிறு உப்புசம்.. அசவுகரியம் ஆகியவை ஏற்படும். குறிப்பாக நன்கு பழுக்காத பழங்களாக இருந்தால் இந்த அசவுகரியங்கள் ஏற்படலாம்..
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
தமிழ்நாட்டில் விஏஓவாக 2016ல் வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் என்ன சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம்












Click it and Unblock the Notifications