தொப்புளில்.. 2 சொட்டு எண்ணெய் விடுங்க.. அதிசயத்தை பாருங்க.. ஆமா, தேங்காய் எண்ணெய்யா? விளக்கெண்ணெய்யா
சென்னை: ஒரே ஒரு சொட்டு எண்ணெய், உங்கள் உடலில் பல ஆச்சரிய மாற்றத்தை ஏற்படுத்தும் தெரியுமா? அதிலும் தேங்காய் எண்ணெய்யை 4 துளி தொப்புளில் தடவினால் என்னென்ன ஆரோக்கிய பலன்கள் கிடைக்கும் தெரியுமா?
நம்முடைய முன்னோர்கள், இரவு தூங்குவதற்கு முன்பு, வயிற்றில் தொப்புள் பகுதியில் எண்ணெயை தடவி விட்டு குழந்தைகளை தூங்க வைப்பது ஒரு வழக்கமாகவே இருந்து வந்துள்ளது. இது நம்முடைய உடலுக்கு பலவித நன்மைகளை தருகின்றன.. இந்த உண்மையை நவீன மருத்துவமும் நிரூபித்திருக்கிறது.

நரம்புகள்: காரணம், நம்முடைய உடலிலுள்ள ஒட்டுமொத்த நரம்புகளின் மையப்புள்ளியே, தொப்புளில்தான் அமைந்துள்ளது.. குறைந்தபட்சம் எழுபதாயிரத்திற்கும் மேற்பட்ட நரம்புகள் தொப்புளின் பின்னால் அமைந்துள்ளன.. எனவே, ஒரு துளி எண்ணெய்யை தொப்புளில் விட்டுவந்தால், கண் பார்வை கூர்மையடையும்..
குறிப்பாக, கம்ப்யூட்டர், லேப்டாப், செல்போன் போன்றவற்றில் பணிபுரிவோருக்கு கண்களில் வறட்சி என்பது இயல்பாகிவிடுகிறது.. உடலிலும் சூடு அதிகமாகிவிடும்.. இவர்கள், தொப்புளில் ஒரு சொட்டு எண்ணெய் வைத்து வந்தால், கண்கள் வறட்சி, கண்பார்வை குறைப்பாடு நீங்கி குளிர்ச்சியை தரும்.
உடல் சூடு: நிறைய பேருக்கு பாத வெடிப்புகள் முக்கிய பிரச்சனையாக உள்ளன.. அதேபோல, சரும நோய்களும் அடிக்கடி தொந்தரவை தந்துவிடும். இதற்கெல்லாம் முக்கிய காரணமே உடலில் சூடு ஏற்பட்டுவிடுவதுதான். தொப்புளில் ஒருதுளி எண்ணையை வைத்தால், பாத வெடிப்பு மெல்ல குறைந்துவிடும்.. சருமமும் பொலிவு பெறத்துவங்கும்.. தலைமுடியும் ஆரோக்கியமாக வளர துவங்கும்.
ஒருவேளை, நம்முடைய தொப்புளில் ஏதாவது நரம்புகள் துவண்டு போயிருந்தாலும், நாம் விடும் எண்ணெய்யானது, தொப்புளில் உள்ள நரம்புகள் வழியாக சென்று அவற்றை வலுப்படுத்திவிடும்.. மேலும், சீரான ரத்தம் பாய்ந்து உடல் உறுப்புகளை ஆரோக்கியமாக வைக்க தூண்டுகோலாக இருக்கும்..
மூட்டு வலிகள்: முழங்கால் மூட்டு வலிகள் இருப்பவர்கள், தொப்புளில் எண்ணெய் விட்டு வரலாம்.. கால் நரம்புகளில் வலி இருந்தாலும் எளிதில் நீங்கிவிடும்.. மூட்டு, கால் வலிகளும் குணமாகும்... கணைய பாதிப்புகளும் சீராவதுடன், கருப்பையும் வலுப்பெறுகிறது.. தொப்புளில் எண்ணெய் விட்டு வருபவர்களுக்கு நிம்மதியான தூக்கம் வரும்.
அதேபோல, தொப்புளில் எந்தெந்த எண்ணெய்யை வைத்தால், எவ்வளவு சொட்டு விட வேண்டும், அதனால் கிடைக்கும் பலன்கள் என்னென்ன என்பதைகூட, நம்முடைய முன்னோர்கள் அறிந்து வைத்திருக்கிறார்கள்.
சரும வறட்சி: தொப்புளில் நெய் அல்லது தேங்காய் எண்ணெய் 3 சொட்டு வைத்துவிட்டு, லேசாக அங்கு மசாஜ் செய்தால் போதும்.. இதனால், கண்வலி, சரும வறட்சி குணமாகும். தேங்காய் எண்ணெய்யில் உள்ள மீடியம் செயின் ட்ரைகிளிசரைடுகள், வயிற்றுப்பகுதியில் உள்ள கொழுப்பை கரைக்க உதவுகிறது.
உடலில் வலிமையை கூட்டி, ஆற்றலை மேம்படுத்துகிறது. மூளையின் செயல்பாட்டையும் மேம்படுத்துகிறது. சளி தொல்லையில் இருந்து விடுபட தூண்டுகோலாகிறது. மாதவிலக்கு காலத்தில் வயிற்று வலி அல்லது வாய்வால் ஏற்படும் வயிற்றுப் பிடிப்பில் இருந்து நிவாரணம் அளிக்கும். காரணம், தேங்காய் எண்ணெய்யில் அதிகளவு ஆன்டி ஆக்சிடெண்டுகள் நிறைந்திருப்பதால் அடிவயிற்றுவலியைப் போக்கும்...
உடல் எடை குறைப்பு: உடலிலுள்ள ரத்தம் சுத்திகரிக்கப்பட்டு, உடலிலிருக்கும் கசடுகள் நீங்கும். வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து உடல் எடைகுறைப்புக்கும் சிறந்த பலனை பெற்றுத்தரும். உடலில் ரத்த சர்க்கரை அளவையும் குறைத்து நீரிழிவு பாதிப்புகளில் இருந்து பாதுகாக்கும்.
தொப்புளில் ஒரு துளி ஆலிவ் எண்ணெய்யை வைத்துவந்தால், பெண்களுக்கு மாதவிலக்கு நேரத்தில் ஏற்படும் உபாதைகள் குறைந்துவிடும்.. நல்லெண்ணையை அரை ஸ்பூன் அளவு தொப்புளில் விட்டு, இடது, வலது புறமாக சுற்றி மசாஜ் செய்வது போல லேசாக தேய்த்தால், உடல்சூட்டினால் ஏற்படக்கூடிய வயிற்றுவலி குறையும்..
கருச்சிதைவு: தொப்புளில் கடுகு எண்ணையை விட்டு தேய்த்துவந்தால் நரம்பு தளர்ச்சி உடனடியாக சரியாகும். உடல் வறட்சியினால் ஏற்படும் உதடு வெடிப்பும் சரியாகும். தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய்யை தொப்புளில் இட்டு தேய்த்துவந்தால், ஆண் பெண்களின் மலட்டுத்தன்மையே நீங்குமாம்.. குறிப்பாக, அதிலும், கருச்சிதைவு இருக்கும் பெண்கள் தினமும் ஆலிவ் எண்ணையை தொப்புளை சுற்றி தடவிக்கொண்டு தூங்குவது மிகவும் நன்மை தரும் என்கிறார்கள்.
பாதாம் எண்ணெய்யையும தினமும் இரவில் தொப்புளில் வைத்து மசாஜ் செய்யலாம. இதனால், 10 நாட்களிலேயே முகம் மற்றும் சருமத்தில் பளபளப்பு மிளிரும், முகத்தில் உள்ள சுருக்கங்களும் மறையும்.
வேப்பெண்ணெய்: வேப்பெண்ணைய்யை வைத்துக்கூட தொப்புளில் மசாஜ் செய்யலாம். தினமும் 4 சொட்டு வைத்தால் போதும், முகத்திலுள்ள முகப்பருக்கள் சில வாரங்களிலேயே நீங்க ஆரம்பித்துவிடும். சரும வியாதிகளும் பூரணமாக குணமாகும்.. தொற்றுகளும் நம்மை எளிதில் அண்டாது.. நச்சுக்களை அழித்து நோய் எதிர்ப்பு சக்தியும் பெருகும்.
அதுமட்டுமல்ல, எப்போதுமே தொப்புளில் எண்ணெய்யை ஊற்றி ஒருசில வினாடிகள் அப்படியே விட்டுவிட வேண்டுமாம். பிறகு, தொப்புள் பகுதியிலிருந்து அரை அங்குலம் வரைக்கும் லேசாக மசாஜ் செய்ய வேண்டுமாம். ஈர உடம்பு உள்ளவர்கள், மருத்துவர்களின் ஆலோசனையை பெற்று இதை கடைப்பிடிக்கலாம்..
இந்த தொப்புளை, பெண்களிடம் கவர்ச்சி அம்சமாகவே காலங்காலமாக பார்க்கப்பட்டு வருவதும், இதுபோன்ற மருத்துவ நன்மைகளை பலரும் உணராமலேயே போய்விடுவதும், எவ்வளவு கசப்பான உண்மை..!!












Click it and Unblock the Notifications