கிட்னி கல் வெளியேற நாவற் பழங்கள்.. எலும்பு, பற்கள் வலுபெற இனிப்பு, துவர்ப்பு நிறைந்த நாவல் இலை தூள்
சென்னை: வாழை, தென்னை மரங்களை போலவே, நாவல் மரங்களும் பெரும் பலனை தரக்கூடியது.. நாவல் பழம், நாவல் இலை, நாவல் விதைகள் என அத்தனையும் மருத்துவ குணம் கொண்டவை. இதயம் சம்பந்தப்பட்ட நோய்களை நெருங்க விடாமல் செய்யும் நாவல் பழங்கள், வேறு பல நன்மைகளையும் தருகிறது. நாவல் கொட்டைகளை எந்தெந்த நோய்களுக்கு பயன்படுத்தலாம்? எப்படி பயன்படுத்தலாம்? இவைகளை சுருக்கமாக இங்கே பார்க்கலாம்.
வைட்டமின் C, இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ், மெக்னீசியம், ஃபோலிக் அமிலம் என அபரிமிதமான சத்துக்களை கொண்டது நாவல் பழங்கள்.. ஹீமோகுளோபின் பிரச்சனையை சரிசெய்து, இரத்த உற்பத்தியை பெருக்கக்கூடியது. கலோரி குறைந்த பழம் என்பதால்,வெயிட் குறைப்பவர்களுக்கு பெஸ்ட் சாய்ஸ். உடம்பில் தேங்கி கிடக்கும் கொழுப்பையும் கரைக்கக்கூடியது.

கிட்னி, புற்றுநோய்
ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துதல், ரத்த கொழுப்பை குறைத்தல், கல்லீரலை பாதுகாத்தல், வயிற்று புண், ஒவ்வாமை, மூட்டு வீக்கம் போன்றவற்றை குணப்படுத்துதல், கிருமித்தொற்று, சிறுநீரக பாதுகாப்பு, புற்றுநோய் போன்றவற்றுக்கு உதவுகிறது நாவல் பழம் புற்றுநோய்க்கு எதிரான பண்புகளை கொண்டுள்ளது.
ஆனால், நாவல் பழத்தை அதிகமாக சாப்பிடக்கூடாது. இதனால், அஜீரணம், வாயு, மந்தம் போன்ற வயிற்றுப் பிரச்சனைகள் ஏற்படலாம். நாவல் பழத்தை சாப்பிட்ட உடனே தண்ணீர் அல்லது பால் குடிக்கக்கூடாது என்பார்கள்.
நினைவுத்திறன்
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக்கூடிய நாவல் பழங்களை வளரும் குழந்தைகளுக்கு தவறாமல் தர வேண்டும். இதனால் பிள்ளைகளின் நினைவுத்திறனும் அதிகரிக்கும். நுரையீரல் பலம் பெற வேண்டுமானால் நாவல் பழங்களை சாப்பிடலாம். வைட்டமின் C நிறைந்த நாவற்பழங்கள் சரும ஆரோக்கியத்துக்கு உதவுகிறது. குடல்புண்கள், வாய்ப்புண்களை ஆற்றுகிறது.
கால்சியம், இரும்பு, பொட்டாசியம், வைட்டமின் C போன்ற சத்துக்கள் இந்த விதைகள் உள்ளன.. ரத்தசோகை இருந்தால், பழங்களை போலவே, நாவல் விதைகளும் ரத்த சிவப்பணுக்கள் உற்பத்திக்கு உதவுகின்றன. நாவல் பழங்களின் விதைகளை காயவைத்து பவுடராக்கி கொண்டால் பல வகைகளில் பயன்படுத்தலாம். தயிர் + நாவல் விதை பவுடர் கலந்து சாப்பிடும்போது, கிட்னியில் உள்ள கற்கள் கரைந்துவிடும்.
நாவல் பட்டைகள்
நாவல் மர பட்டைகளை சுத்தமாக கழுவி நீரில் கொதிக்க விட்டு, வடிகட்டி குடிக்கும்போது, பெண்களுக்கு ஏற்படும் மாதவிலக்கு தொந்தரவு, அதிக ரத்த போக்கு கட்டுக்குள் வரும். அல்லது இந்த பட்டைகளை தூளாக்கி தயிரில் கலந்து சாப்பிட்டாலும் தீர்வு கிடைக்கும். தொண்டை புண், ஆஸ்துமாவுக்கு இதுவே சிறந்த நிவாரணம்.
நாவல் மர இலைகளிலும் நிறைய சத்துக்கள் உள்ளன.. கால்சியம் அதிகம் என்பதால், எலும்புகள், பற்கள் உறுதிபெறும்.. இந்த இலைகளை தூள் செய்து, பற்களை தேய்க்கலாம். இதனால், தொற்றுகள், நச்சுக்கள் அண்டாது.. பலவீனமான ஈறுகள் இருந்தால், ரத்தக் கசிவு ஏற்படும்.. இதற்கெல்லாம் நாவல் பவுடர் மருந்தாகிறது.
இலைகள் - இன்சுலின்
நாவல் இலையை சுத்தமாக இடித்து ஜூஸ் போல எடுத்து 3 நாட்கள் சாப்பிடும்போது, வயிறு பிரச்சனைகள் தீர்ந்துவிடும். வயிற்றுப்போக்கு அதிகமாக இருந்தால், நாவல் இலைகளின் கொழுந்துகளை சிறிது எடுத்து நசுக்கி சாறு போல எடுத்து, தினமும் 2 வேளை 3 நாளைக்கு சாப்பிட்டு வந்தால் நோய் தீவிரம் குறையும். நாவல் இலை ரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது.
நீரிரிவு நோயாளிகள், நாவல் விதைகளை தூளாக்கி சாப்பிடும்போது, கணையத்தில் இன்சுலின் சுரப்பு அதிகமாகிறது. தினமும் 2 வேளை, ஒரு டீஸ்பூன் அளவு வெதுவெதுப்பான நீரில் நால் விதை பவுடரை கலந்து குடிக்கும்போது, ஒரே மாதத்தில் சர்க்கரை நோயில் வித்தியாசம் காணலாம்.
-
90% பேருக்கு தெரியாது.. கலர் கலராக இருக்கும் ரயில்கள்.. ஒவ்வொன்றுக்கும் என்ன அர்த்தம் தெரியுமா! -
பெட்ரோல் விலை பிச்சுகிட்டு போக போகுது..வேலையைக் காட்டிய ரஷ்யா! இந்தியாவுக்கு காத்திருக்கும் சிக்கல்! -
ரஷ்யா எடுத்த அதிரடி முடிவு.. உச்சத்துக்கு போகும் பெட்ரோல், டீசல் விலை! இந்தியாவுக்கு நெருக்கடி! -
அதிகாலையில் வந்த அறிவிப்பு! மோடியே சொன்னாலும்.. குறையாத பெட்ரோல், டீசல் விலை! -
தடுமாறுதே தங்க சந்தை.. மாறி மாறி சரிந்து எகிறும் தங்கத்தின் விலை! இப்போ வாங்கலாமா? வேண்டாமா? -
பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு என வட மாநிலங்களில் பரவும் வதந்தி..பங்குகளை நோக்கி படையெடுத்த மக்கள்! -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம்












Click it and Unblock the Notifications