இரவில் ஆழமான தூக்கம் வேணுமா? அப்ப மூலிகை டீ குடிச்சிட்டு படுங்க.. நிம்மதி தூக்கத்திற்கு சோம்பு நீர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆரோக்கியமான வாழ்வு அமைய, ஆழமான தூக்கம் அனைவருக்கும் தேவைப்படுகிறது.. இதற்கு சுவாசப்பயிற்சி, முறையான உணவுப்பழக்கம், போன்றவற்றை கடைப்பிடிப்பதுடன், சில பழக்கவழக்கத்தையும் அடியோடு நிறுத்த வேண்டியிருக்கிறது. நிம்மதியான தூக்கத்துக்கு உதவும் சில டிப்ஸ்களை பார்ப்போம்.

தினமும் நேரத்திற்கு தூங்குவதை பழக்கப்படுத்திக் கொண்டாலே, ஆரோக்கியமான வாழ்வை பெறலாம்.. நல்ல தூக்கம் கிடைக்க வேண்டுமானால், சரியான நேரத்திற்கு தூங்குவதை பழக்கப்படுத்தி கொள்ள வேண்டும்.

good sleep herbal tea

சரும பராமரிப்பு: அதாவது, தூங்க செல்வதற்கு முன்பு, இரவில் பல் துலக்குவது, சருமத்தை பராமரித்து கொள்வது, தூங்குவதற்கு உண்டான வெப்பநிலையை சரி செய்து கொள்வது போன்றவைகள் ஆகும். இவைகளை தொடர்ந்து கடைப்பிடித்து வந்தாலே, அது தூங்குவதற்கான நேரம் என்பது மூளை உணர்ந்து கொள்ளும்..

உடலின் ஒவ்வொரு பகுதியையும் கவனம் செலுத்தி, அதில் தளர்வுகளை மேற்கொள்ள வேண்டும். கால் பாதத்தில் தொடங்கி, மேல் நோக்கி தலை வரை, இந்த தளர்வுகளை செய்ய வேண்டும். இதனால் மெல்ல தூக்கம் வர ஆரம்பிக்கும். அதேபோல, தியானம், மூச்சு பயிற்சி செய்யலாம்.. பிடித்த புத்தகங்களை படிக்கலாம்.. இனிமையான பாட்டுக்களை கேட்பதால் மனம் அமைதி பெறும். அல்லது குடும்ப உறுப்பினருடன் பேசிக்கொண்டிருக்கலாம்.

நார்ச்சத்து: அதேபோல, தூங்க போகும்முன்பு வெள்ளரிக்காய் சாப்பிடுவது, காபி குடிப்பது, அல்லது காபின் கலந்து சாக்லேட், கொழுப்பு பொருட்கள், போன்றவற்றை தவிர்க்க வேண்டும். இவைகளை சாப்பிட்டால் 6 மணி நேரத்திற்கு தூக்கம் வராது.. அதேபோல, நார்ச்சத்து அதிகமுள்ள உலர் பழங்கள் உட்பட மற்ற உணவுகளை சாப்பிட கூடாது.

வெறுமனே சோம்பு தண்னீர் அல்லது சோம்பு டீ குடித்து விட்டு படுத்தாலே போதும். கலோரிகள், கொழுப்புகள் சீராகும். அத்துடன், இரவில் சாப்பிட்ட உணவு செரிமானமடைந்து, வயிற்றை சுற்றியிலுள்ள தேவையற்ற சதைகளை கரைக்க இந்த சோம்பு தண்ணீர் உதவும். மூளையில் பிட்யூட்டரி சுரப்பியால் சுரக்கப்படும் மெலடோனின் எனப்படும் நேச்சுரல் ஹார்மோனை சீராக உற்பத்தி செய்து, நிம்மதியான தூக்கத்துக்கு சோம்பு நீர் வழிவகுக்கும். அதேபோல சிறிது மூலிகை டீ குடிக்கலாம்.

நீல ஒளிகள்: அதேபோல, தூங்க செல்வதற்கு முன்பேயே கம்ப்யூட்டர், டிவி, செல்போன், டேப்லெட் இப்படி எல்லாவிதமான மின்சாதன பொருட்களையும் பயன்படுத்தக்கூடாது. இந்த எலக்ட்ரிக் சாதனங்களிலிருந்து வெளியாகும், நீல ஒளியானது, மூளையை களைப்படைய வைத்துவிடும். இதனால், எளிதாக தூங்க முடியாது.

அதேபோல, கட்டிலில் படுத்தபடி, நாக்கை தளர்வாக்கி வாயின் அடிப்பகுதியை தொடுங்கள். இப்போது மெதுவாக மூக்கின் வழியாக சில நொடிகள் மூச்சை உள்ளிழுக்க வேண்டும். 7 நொடிகளுக்கு மூச்சை அடக்கிய பிறகு, அடுத்த 8 நொடிகளுக்கு மெதுவாக மூச்சை வெளியே விட வேண்டும். இதுபோல 3, 4 முறை செய்வதற்குள்ளேயே தூக்கம் வந்துவிடும்.

எண்ணெய் வகைகள்: தூங்க போவதற்கு முன்பு, பாதங்களில், ஆலிவ் எண்ணெய், பாதாம் எண்ணெய், தேங்காய் எண்ணெய் இதில் ஏதாவது ஒன்றை பயன்படுத்தி மசாஜ் செய்யலாம். தூங்குவதற்கு முன்பு, சூடான அல்லது மிதமான நீரில் குளிக்கலாம். இது உங்கள் தசைகளை அமைதிப்படுத்தவும், சோர்வை நீக்கவும் உதவும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+