நீண்ட முடி வளர்ச்சிக்கு நெய்.. வறண்ட தலைமுடிக்கு பால், வெண்ணெய் தடவலாமா? பொடுகு நீங்க தயிர் போதுமே
சென்னை: தலைமுடி வளர்ச்சியில் லாக்டோ பொருட்களின் பலன்கள் அபரிமிதமானது.. அந்தவகையில், பால், தயிர், வெண்ணெய், நெய், மோர் உள்ளிட்டவைகளை பயன்படுத்தி, தலைமுடி உதிர்தலை எப்படி கட்டுப்படுத்தலாம் தெரியுமா? சுருக்கமாக பார்ப்போம்.
பாலை பொருத்தவரை ஏராளமான புரோட்டீன் உள்ளது.. இந்த புரதங்கள் தலைமுடி உதிர்தலை கட்டுப்படுத்தி, புதிய முடிகள் வளர்வதற்கும் உதவுகின்றன.. அதேபோல, பாலில் வைட்டமின் D நிறைந்துள்ளதால், முடிகள் உதிர்வது தடுக்கப்படுகின்றன..

கொலாஜன்: பாலில் வைட்டமின் C சத்துக்கள் கொலாஜன் உற்பத்தியை தூண்டுகிறது... பாலில் உள்ள கால்சியம் சத்துக்கள், முடிகள் வளர்வதை ஊக்குவிக்கின்றன.. இதனை தவிர, வைட்டமின் B6, B7, E, பொட்டாசியம் போன்ற சத்துக்களும் பாலில் உள்ளதால், இவைகளை தலைமுடிக்கு பயன்படுத்தும்போது, அவை வலுவாகின்றன... பொடுகு தொல்லை இருப்பவர்களுக்கும், வறண்ட தலைமுடி உள்ளவர்களுக்கும், மிகச்சிறந்த கண்டிஷனராக பயன்படுகிறது.. இதனால் முடிவெடிப்புகள் குறைந்து, பளபளப்பும் கூடுகிறது..
எனவே, தலைமுடியில் பால் தடவி அலசி, இறுதியில் மென்மையான ஷாம்பு தேய்த்து குளிக்கலாம்.. அல்லது முட்டையுடன் பால் கலந்து மாஸ்க் போலவும் பயன்படுத்தலாம்.. அல்லது தேனுடன் பால் கலந்தும் தலைமுடியில் தேய்க்கலாம்.
புளித்த தயிரை நம்முடைய தலைமுடிக்கு பயன்படுத்தும்போது, முடி வலுப்பெறும்.. காரணம், தயிரில் ஊட்டச்சத்து உள்ளதால், தலைமுடியின் வேர்கள் பலம்பெறுகின்றன..
புளித்த தயிர்: எனவே, புளித்த தயிரை கலக்கி தலையில் தடவி ஊறவைத்து குளிக்க வேண்டும். இதனால் தலைமுடியும் மென்மையாகும். அதேபோல, புளித்த தயிருடன், முட்டையின் வெள்ளை கருவையும் சேர்த்து, தலையில் தேய்த்து ஊறவைத்து குளித்தால் தலைமுடி பொலிவாகும். அல்லது கற்றாழை ஜெல்லையும், புளித்த தயிருடன் விழுது போல அரைத்து தலைக்கு தடவலாம். இதனால் பொடுகு, வறட்சித்தன்மை நீங்கும்.. தயிரிலுள்ள ப்ரோடீன்கள் தலைமுடியை வலுவாக்கும்.
ஊட்டச்சத்துக்கள் நிறைந்த வெண்ணெய்யையும் தலைமுடிக்கு பயன்படுத்தலாம். வெண்ணையில் வைட்டமின் E, B12, புரோட்டீன் போன்ற ஊட்டச்சத்துக்களும், கொழுப்பு அமிலங்கள், வைட்டமின்கள், தாதுக்கள் போன்றவைவையும் நிறைந்துள்ளதால், தலைமுடி பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. வாரம் ஒருமுறை வெண்ணெயை தலைக்கு தடவி மசாஜ் செய்து, 1 மணிநேரம் ஊற வைத்து, பிறகு சீகைக்காய் போட்டு அலசி வந்தால், முடியின் வளர்ச்சி அதிகரிக்கும்.
நெய்: தலைமுடி ஆரோக்கியமில்லாமலும், உறுதியில்லாமலும் இருந்தால், நெய்யை தாராளமாக தடவி வரலாம். காரணம், நெய்யிலுள்ள கொழுப்பு அமிலமானது, தலைமுடியின் சேதத்தை தடுத்து, வேர்க்கால்களுக்கு ஊட்டச்சத்தினை வழங்குகிறது. இதனால் தலைமுடி உறுதியாகிறது. ஆனால், நெய் மட்டுமே நேரடியாக பயன்படுத்தாமல், சிறிது தேங்காய் எண்ணெய்யும் சேர்த்து, லேசாக சூடுபடுத்தி தடவ வேண்டும்.
அல்லது வேப்பிலையை நெய்யுடன் சேர்த்து எண்ணெய் போல காய்ச்சி தடவலாம். அதாவது ஒரு கிண்ணத்தில் 3 ஸ்பூன் நெய், 1 ஸ்பூன் தேன், 15 வேப்பிலையை போட்டு இரவெல்லாம் ஊறவைக்க வேண்டும். காலையில் இதனை லேசாக சூடுபடுத்திவிட்டு, வேப்பிலையை நீக்கிவிட்டு, நெய்யை மட்டும், இளஞ்சூட்டிலேயே தலைக்கு தடவி 30 நிமிடம் ஊறவைத்து குளித்தால், தலைமுடி உதிர்வது நின்றுவிடும்.. பொடுகு, இளநரையும் தடுக்கப்படும்.
நீர்மோர்: தலைமுடிக்கு நீர்மோர் மிகவும் நல்லது.. இந்த மோரில் லாக்டிக் அமிலம், கார்போஹைட்ரேட், புரதம், வைட்டமின் D, A, B12, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, பொட்டாசியம், சோடியம், மக்னீசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன. எனவே, மோரை தலைக்கு தேய்த்து மசாஜ் செய்து 20 நிமிடம் ஊறவைத்து குளித்தால், இறந்த செல்கள் நீங்கிவிடும். தலைமுடியும் வலுப்பெறும்.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications