சர்க்கரை நோயாளியின் கால் புண்கள்.. லேசில் ஆறாத ரணம்.. ஆவாரம்பூ இலையை இப்படி ட்ரை பண்ணுங்க.. சூப்பர்
சென்னை: சர்க்கரை நோயாளிகள் பலரையும், பாடுபடுத்துவது அவர்களது கால் புண்கள்தான். இந்த புண்கள் ஏன் வருகின்றன? இதனை குணப்படுத்த எளிய மருத்துவம் உள்ளதா?
சர்க்கரை நோயாளிகளில் பெருமளவு பாதிக்கப்படுவது நரம்புகள்தான்.. நீரிழிவு நோய் காரணமாக கால்கள் மரத்துப்போகும். மேலும் நரம்புகள் பாதிப்படைவதால், அவற்றின் செயல்திறன் குறைந்து கால்களின் உணர்வு படிப்படியாக குறைந்துவிடும்.
நரம்புகள்: ஆரம்பக்கட்டத்தில் சர்க்கரை நோயாளிகளால் இதை உணர முடியாது. ஆனால், காலப்போக்கில் கால்கள் விரைத்தது போன்ற உணர்வு தோன்றும்.. நரம்புகளில் தளர்வு ஏற்பட்டுவிடும்.. அதேபோல கால்களுக்கு செல்லும் ரத்த ஓட்டமும் போதுமானதாக இருக்காது. இதனால் அரிப்புகள் ஏற்படும்போது சொறிந்துவிடும்போது, புண்கள் வெளிப்படுகின்றன..

அதிகமாக நடப்பது, அதுவும் வெறுங்கால்களால் நடப்பது, கால்களை முறையாக பராமரிக்காமல் இருப்பது, போன்ற காரணங்களினால் கால் புண்கள் அதிகமாக வருகின்றன.. இந்த புண்கள் எளிதில் நீங்குவதுமில்லை. புண்களில் கிருமித்தொற்று ஏற்படவும், பெருகவும் வாய்ப்பு உள்ளது.
கால் புண்கள்: ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருந்தாலும்கூட, காயங்கள் எளிதில் ஆறாது.. எனவே சர்க்கரை நோயாளிகள் கால்களை முறையாக பராமரிக்க வேண்டும்.. மருத்துவர்களை சந்தித்து கால் புண்களை குணமாக்க சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.. ஆரம்ப கட்டத்திலேயே இதுபோன்ற புண்களை குணமாக்காவிட்டால், உறுப்புகளை காப்பாற்றுவதிலும் சிகிச்சையில் சிரமம் வந்துவிடும்.
அதேபோல, சில எளிய மருத்துவத்தையும் நாம் வீட்டிலேயே கடைப்பிடிக்கலாம். குறிப்பாக, சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்படும் புண்களை ஆற்ற, ஆவாரம்பூ இலை பேருதவி செய்வதாக சொல்கிறார்கள்..
ஆவாரம் பூக்கள்: ஆவாரம்பூ இலை பொடிகள், நாட்டு மருந்து கடைகளிலேயே கிடைக்கின்றன. இதில் ஒரு ஸ்பூன் எடுத்து, நல்லெண்ணெயில் சேர்த்து அடுப்பில் நன்றாக சூடுபடுத்தி இறக்கி நன்றாக ஆறவைக்க வேண்டும். பிறகு இதனை ஒரு பருத்தி துணியில் வைத்து நன்றாக மடித்து வைத்து கொள்ள வேண்டும்..
புண்களினால் பாதிக்கப்பட்ட இடத்தை சுடுநீரில் சுத்தமாக கழுவி, துடைத்து கொண்டு, அந்த இடத்தில் இந்த பருத்து துணியை வைத்து இறுக்கமாக கட்டிவிட வேண்டும்.. ஒருமணி நேரம்கழித்து அப்படியே வைத்திருந்தால் போதும்.. இப்படி தினமும் செய்து வந்தாலே சர்க்கரை நோய் புண்கள் மெல்ல ஆறும் என்கிறார்கள்.
அதேபோல, நீர்முள்ளி செடியின் இலைகள், அதன் விதைகளுடன் சிறிது மஞ்சள் சேர்த்து அரைத்து, துணியில் வைத்து மடித்து, புண்களின் மீது கட்டிவிட வேண்டும். ஒரு நாள் முழுவதும் அப்படியே வைத்திருக்க வேண்டும். இப்படி செய்வதாலும் புண்கள் ஆறிவிடும்.
டாக்டர் அட்வைஸ்: அதேபோல, வேப்பம் பட்டையில் கஷாயம் வைத்து குடித்தால், அனைத்து புண்களையும் ஆற்றும் என்கிறார்கள். ஆனால், வீட்டு வைத்தியங்களே என்றாலும், ஆயுர்வேத டாக்டர்களின் ஆலோசனையை முறைப்படி பெற்று கடைப்பிடிப்பதே ஆரோக்கியமாகும்.
-
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு!












Click it and Unblock the Notifications