மீனுடன் தயிரை சேர்த்து சாப்பிட்டால் வெண்குஷ்டம் வருமா? மீனை கீரையோடு சாப்பிடலாமா? டாக்டர் சொல்வதென்ன
சென்னை: அதிகமாக பதப்படுத்தப்பட்ட அல்லது வறுத்த உணவுகளுடனும் மீனை கலந்து சாப்பிடக்கூடாது என்பார்கள்.. இதற்கு காரணம் என்ன? எந்தெந்த உணவுகளுடன் மீன்களை சேர்த்து சாப்பிடக்கூடாது தெரியுமா? தயிருடன் மீனையும் கலந்து சாப்பிட்டால் வெண்குஷ்டம் பாதிப்பு வரும் என்கிறார்களே? அது உண்மையா? இதுகுறித்து மருத்துவர் அருண்குமார் தந்துள்ள விளக்கம் என்ன? இவைகள் குறித்து இங்கே சுருக்கமாக பார்க்கலாம்.
காரமான உணவுகளுடன் மீனை சாப்பிடக்கூடாது என்பார்கள்.. அப்படி சாப்பிட்டால் இரைப்பைக்கும், குடலுக்கும் தொந்தரவு ஏற்பட்டுவிடுவதுடன், வீக்கம் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம்..

முள்ளங்கி மீன்கள்
முள்ளங்கியுடன் மீனை கலந்து சாப்பிடக்கூடாது.. இதனால் சளி, மலச்சிக்கல் தொந்தரவுகள் வரலாம்.. அதுமட்டுமல்ல, மீனும், முள்ளங்கியும் ஒன்றுக்கு, ஒன்று எதிர் எதிர் குணங்களைக் கொண்டவை.
மாவுச்சத்து நிறைந்த உருளைக்கிழங்கையும் மீனுடன் சேர்த்து சாப்பிடக்கூடாது.. அப்படி சாப்பிட்டால் கூடுதல் கலோரிகள் மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் கிடைப்பதுடன் செரிமான அமைப்பை மெதுவாக்கிவிடுமாம். கீரைகளுடனும் சேர்த்து மீன் சாப்பிடக் கூடாது.. இது செரிமான பிரச்சனைகளை தந்து, மந்தப்படுத்திவிடும்..
புரதம் நிறைந்த முட்டை
முட்டைகளை மீனுடன் சேர்த்து சாப்பிடக்கூடாது.. காரணம், முட்டைகளிலும் புரதம் நிறைய உள்ளது.. இரும்புச்சத்தும் நிறைய உள்ளது.. இதனால் அஜீரணம் ஏற்பட்டு, சத்துக்களும் முழுமையாக உடலுக்கு கிடைக்காமல் போய்விடும்.
மீனுடன் சிட்ரஸ் பழங்களையும் சேர்த்து சாப்பிடக்கூடாது.. சிட்ரஸ் பழங்களில் அமிலம் உள்ளதால், இது மீனிலுள்ள புரோட்டீன்களுடன் சேர்ந்து வினைபுரிந்து, உடல் நலக் கோளாறுகளை தந்துவிடும்.. தேன் குடித்துவிட்டு, மீன் சாப்பிடும்போது, சுவாசப் பிரச்சனைகள் வரலாம். அதேபோல, மீன் சாப்பிட்டதுமே, உடனடியாக பாலில் செய்யப்பட்ட ஐஸ்கிரீம் போன்ற இனிப்புகளை சாப்பிடக்கூடாது.
மீனும் தயிரும்
அந்தவகையில், தயிரையும் மீனையும் ஒன்றாக சாப்பிட்டால், விட்டிலிகோ அதாவது வெண்குஷ்டம் வந்துவிடும் என்ற பேச்சும் உள்ளது.. உடலில் தோன்றும் வெண்புள்ளிகளுக்கும் மீனுக்கும் என்ன சம்பந்தம்? உண்மையிலேயே தயிரையும், மீனையும் ஒன்றாக சாப்பிட்டால் வெண்குஷ்டம் வந்துவிடுமா?
இது குறித்து டாக்டர் அருண்குமார் தன்னுடைய சோஷியல் மீடியா பக்கத்தில் இதுகுறித்து விரிவாகவே விளக்கியுள்ளார்.
தயிரையும் மீனையும்
அதில் அவர் சொல்லியிருப்பதாவது: "தயிரையும், மீனையும் ஒன்றாக சாப்பிடக்கூடாது என்று ஆயுர்வேதத்தில் கூறப்பட்டுள்ளது. இதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன..
அதில் ஒன்று தயிர் குளிர்ச்சியான பொருள், மீன் ஒரு அசைவம் மட்டுமின்றி சூடான பொருளும்கூட.. இப்படி குளிர்ச்சியான பொருளையும், சூடான பொருளையும் கலந்து சாப்பிட்டால், அது அஜீரண கோளாறுகளையோ, தோல் பிரச்சனைகளையோ ஏற்படுத்தலாம் என்பது போன்ற கருத்து உள்ளது.
இரண்டாவதாக, தயிர், மீன் ஆகிய இரண்டுமே புரோட்டீன் நிறைந்தது மற்றும் மிருகங்களிடம் இருந்து பெறக்கூடியது. இப்படி கலந்து சாப்பிடும்போது அது அஜீரண கோளாறை ஏற்படுத்தலாம். எனவேதான், ஒன்றாக சாப்பிடக்கூடாது என்று நம் முன்னோர்களும் கூறியிருக்கலாம்
விட்டிலிகோ என்றால் என்ன ?
ஆனால், அதற்கு முன் விட்டிலிகோ என்றால் என்ன என்பதை ஒவ்வொருவரும் தெரிந்து கொண்டால் தான், உண்மையா இல்லையா என்பது தெரியும். விட்டிலிகோ என்பது ஒரு ஆட்டோ இம்யூன் நோய். அதாவது பொதுவாக நம்முடைய சருமத்திற்கு என்று ஒரு நிறம் உள்ளது. இந்த நிறத்திற்கு காரணம் மெலனின் என்னும் நிறமி பொருள். இந்த நிறமியை மெலனோசைட் என்னும் செல்கள் தான் உற்பத்தி செய்கின்றன.
ஆனால் விட்டிலிகோ என்னும் நிலையில், நம்முடைய உடலின் நோயெதிர்ப்பு மண்டலம் இந்த மெலனோசைட் செல்களை எதிரியாக கருதி அழித்துவிடும்போது, அந்த அழிக்கப்பட்ட மெலனோசைட் செல்கள் இருந்த பகுதி நிறமிழந்து வெள்ளை திட்டுக்களாக தோன்றும்.. இப்படிப்பட்ட சூழ்நிலையில் மீனையோ, தயிரையோ ஒன்றாக உட்கொண்டால், விட்டிலிகோ வருமா என்றால், அதற்கான அறிவியல் ஆதாரங்கள் எதுவும் இல்லை.
பால் பொருட்கள்
சில சமயங்களில் சில வகையான ஆட்டோ இம்யூன் நிலைமைகள் சில வகையான உணவுகளால் தூண்டப்படலாம். பொதுவாக ஆட்டோ இம்யூன் பிரச்சனைகள் உள்ளவர்களை கோதுமை, பால் பொருட்கள், நட்ஸ் போன்றவற்றை அதிகம் உட்கொள்ள வேண்டாம் என்று டாக்டர்கள் சொல்வார்கள்.
எனவே இதை வைத்து, கற்பனை செய்து தயிரையும், மீனையும் ஒன்றாக உட்கொள்ளக்கூடாது என்று முடிவெடுக்க வேண்டாம். மொத்தத்தில் தயிரையும் மீனையும் ஒன்றாக உட்கொண்டால் விட்டிலிகோ வரும் என்பதில் எந்தவிதமான அறிவியல் உண்மையும் கிடையாது. அதனால் தாராளமாக இரண்டையும் சேர்த்து சாப்பிடலாம்" என்று டாக்டர் அருண்குமார் தன்னுடைய பதிவில் தெரிவித்துள்ளார்.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி யாருக்கெல்லாம் உறுதி? இந்த ஒரு தப்பு மட்டும் செஞ்சுடாதீங்க -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள்












Click it and Unblock the Notifications