தோசைக்கு அரைக்கறீங்களா? நீங்க இட்லி மாவு பாக்கெட்டை கடையில் வாங்கறீங்களா? அப்ப இந்த டிப்ஸ் பாருங்க
சென்னை: இட்லி, தோசை மாவு பாக்கெட் கடைகளில் வாங்கறீங்களா? அப்ப இந்த விஷயத்தையும் நோட் பண்ணிக்குங்க.
இப்போது, இட்லி, தோசை நம்முடைய தவிர்க்க முடியாத உணவாகிவிட்டது. எளிதில் ஜீரணமாக கூடிய சத்தான உணவாகவும் இட்லி கருதப்படுகிறது.. வீடுகளில் இன்றும் பலர் இட்லி, தோசை மாவு அரைத்து பயன்படுத்துகிறார்கள்.

எனினும் நிறைய பேர் வேலைக்கு செல்கிறார்கள்.. இவர்களால் தினந்தோறும் இட்லிக்கு மாவு அரைக்க முடிவதில்லை.. எனவே, பாக்கெட் இட்லி மாவு வாங்குவதில் ஆர்வம் காட்டுகிறார்கள்..
பாக்கெட் மாவு: அதேபோல பேச்சுலர்களுக்கு எளிதில் கை கொடுப்பதும் இந்த இட்லி மாவு பாக்கெட்டுகள்தான். இதனால், பெண்களின் வேலைச்சுமை குறைகிறது... பேச்சுலர்களின் சாப்பாட்டு பிரச்சனையும் தீர்கிறது. அதைவிட முக்கியமாக, மாவு விற்பனை செய்பவர்களுக்கும் சிறந்த தொழிலாக கை கொடுக்கிறது.
ஆனால், கடைகளில் விற்கப்படும் இட்லி, தோசை மாவு பாக்கெட்டுகள் நம்முடைய உடலுக்கு தீங்கு தரக்கூடியவை என்று டாக்டர்கள் எச்சரிக்கிறார்கள்.. காரணம், இந்த மாவில் எளிதில், புளிப்பு வாசனை வராமல் இருப்பதற்காகவே, புண்களுக்கு தடவப்படும் போரிக் ஆசிட் (Boric Acid), ஆரோட் மாவு போன்றவற்றை சிலர் கலந்து விற்கிறார்களாம்.
ஆரோக்கியம்: அதேபோல, மாவு புளித்து போகாமல் இருப்பதற்காக, கால்சியம் சிலிக்கேட் என்ற வேதிப்பொருளும் சேர்க்கப்படுகிறது.. இவைகளை சாப்பிடும்போது, குடல் ஆரோக்கியம் தடைபடுகிறது.. வயிறு உபாதைகள், அஜீரணம் ஏற்படுகின்றன.. அதேபோல, உடலுக்கு பல நன்மைகளை தரும் வெந்தயத்தையும், அரிசியில் கலந்து பலரும் அரைப்பதில்லையாம்.
முக்கியமாக, நீண்ட நேரத்துக்கு கிரைண்டர்களில் மாவு அரைக்கும்போது, ஆட்டுக்கல் சிறிது சிறிதாக தேய்ந்து மாவில் கலக்கிறது.. இந்த கற்களை நாம் உண்ணும்போது, சிறுநீரகத்தில் கற்கள் வர நேரிடுகிறது. மேலும், இந்த மாவில் சுத்தமான தண்ணீரை கலந்து அரைக்கப்படுகிறதா? என்றும் நமக்கு உறுதியாக தெரியாது..
இட்லி மாவு: அதேபோல, மாவு ஆட்டுகின்ற போது, கிரைண்டரை கழுவும்போது எந்த தண்ணீரை பயன்படுத்தி சுத்தம் செய்யப்படுகிறது என்று தெரியாது.. சுத்தமான தண்ணீரை கொண்டு கல்லை கிளீன் செய்யாவிட்டால், ஈகோலி என்ற பாக்டீரியா தாக்கம் அதிக அளவில் ஏற்படுமாம்.. இதனால், நாள்பட்ட வயிற்று வலி, உடல் வறட்சி, இரைப்பை நோய் உள்ளிட்டவை ஏற்படக்கூடும் என்கிறார்கள்.
வீட்டிலேயே மாவு அரைத்தாலும்கூட, 1 வாரத்துக்கு ஃபிரிட்ஜில் வைத்து பயன்படுத்தினால், வயிறு வலி, செரிமான பிரச்சனை உள்ளிட்ட பாதிப்புகள் வந்துவிடும்.. குடலிலுள்ள இயற்கையான நுண்ணுயிரிகளை வளர செய்யாமல், கெட்ட பாக்டீரியாவை வளர செய்துவிடும்.. எனவே, வீட்டிலேயே மாவு அரைத்தாலும், 2 நாட்களுக்கு மேல் அதை ஃப்ரிஜ்ஜில் வைத்து பயன்படுத்த வேண்டாம் என்கிறார்கள்..
விவரங்கள்: தவிர்க்க முடியாத சூழலில், இட்லி, தோசை மாவு பாக்கெட் கடைகளில் வாங்க நேர்ந்தால், நம்பிக்கையான ஒரே கடையில் தொடர்ந்து வாங்க வேண்டும்.. அதேபோல, மாவு அரைத்து எத்தனை நாட்கள் ஆனது? என்ற விவரத்தையும் கவனித்து பயன்படுத்த வேண்டுமாம்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications