தொப்பை கரையணுமா? இடுப்பு கொழுப்பு குறையணுமா? அரைஞாண் கொடி இருக்கே.. பெண்கள் அணியலாமா? வரப்பிரசாதம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அரணாகொடி என்று பேச்சுவழக்கில் சொல்லக்கூடிய அரைஞாண் கயிற்றினை பெண்கள் அணியலாமா? இதன் நன்மைகள் என்னென்ன?
பிறந்த குழந்தைகளுக்கு ஆண் குழந்தையாக இருந்தாலும் சரி, பெண் குழந்தையாக இருந்தாலும் சரி, பிறந்த அரைஞாண் கயிற்றை இடுப்பில் கட்டிவிடுவார்கள்... திருஷ்டிக்காக இதை கட்டுவார்கள். ஆனால், இதன் அறிவியல் காரணத்தை ஆராய்ந்தால் மலைக்க வைக்கிறது..

Can women wear Waist Card and Do you know Health Benefits of Araignan kayiru to reduce Belly Fat

இடுப்பு பகுதி: இடுப்பு பகுதியில் உள்ள எலும்பு பகுதிக்கு தூய தமிழில் "கூபக அறை" என்று சொல்வார்கள.. 'ஞாண்' என்றால் வளைத்து கட்டுவது என்று அர்த்தமாம்.. அதனால்தான், 'அரைஞாண் கயிறு' என்று பெயர் வந்ததாம்.. "அரை" என்பது, இடுப்பு வரையிலான பாதி உடலை குறிக்கும் என்பதாலும், இந்த பெயர் வந்ததாம்.

பொதுவாக, ஆண்களுக்கு சிறுநீரகத்திலிருந்தும், விதைப்பையிலிருந்தும் வரக்கூடிய ரத்தக்குழாய்கள் ஒன்றுகூடும் இடம்தான், அடிவயிற்றுப்பகுதிதான்... அதனால்தான், ஆண்கள் கடினமாக வேலை செய்தாலும், இந்த இடத்தை சுற்றி கயிறு கட்டும்போது, மேல்வயிற்று பகுதியிலுள்ள குடல் கீழே இறங்காமல் இருக்குமாம்.. சிறுநீர்ப்பை, மலப்பைகளுக்கு ரத்த ஓட்டமும் சீராக இருக்கும்.

சிறுநீரக கோளாறு: சிறுநீரக கோளாறுகளையும், ஹெல்னியா என்ற குடல் கீழிறக்கம் பிரச்சனையையும் தடுத்து நிறுத்தி, உள்ளுறுப்புகளை பாதுகாப்பதற்கு கவசமாக திகழ்வதால்தான், ஆண்கள் அரைஞாண் கயிறு அணிகிறார்கள். .. அலும், எல்லா வயதிலும் இதனை அணிவது மிகவும் நல்லது. இதனால், விரைவாதம், அண்டவாதம் போன்ற பிரச்னைகளும் வராது.

பெண்கள் இந்த அரைஞாண் கயிறு கட்டலாமா? என்ற சந்தேகமும் பலருக்கு வருவதுண்டு.. பெண்களுக்கு குடல் இறக்க நோய் வருவதற்கான வாய்ப்பு குறைவு,.. மிகக்குறைந்த அளவிலேயே இந்நோய் வரும் என்பதால் அவர்கள் அரைஞாண் கயிறுகளை கட்டுவதில்லை.. அதற்கு பதிலாக அழகுக்காக பல தினுசாக கட்டிக் கொள்கிறார்கள்..

கயிறு கட்டுதல்: ஆனால், பெண்கள் இடுப்பில் அரைஞாண் கயிறு கட்டுவது மிகவும் நல்லது என்றே சொல்கிறார்கள்.. இதற்கு காரணம், அரைஞாண் கயிறு கட்டுவதால் இடுப்பு சதை பெருக்காது.. பெண்களுக்கு தொப்பை ஏற்படுவதையும், இந்த கயிறு தடுத்து நிறுத்தும் என்கிறார்கள்..

அதுமட்டுமல்ல, பெண்கள் அரைஞாண் கயிறு கட்டினால் அவர்களுக்கு மாதவிடாய் நேரத்தில் ஏற்படும் முதுகு வலி குறையும் என்றும் நம்முடைய முன்னோர்கள் சொல்கிறார்கள்.. அதனால், பிறந்த குழந்தை ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும், அரைஞாண் கயிறு கட்டினார்கள்... எனவே, அழகுக்கு இல்லாமல், ஆரோக்கியத்துக்காகவும், இந்த அரைஞாண் கயிறினை பெண்கள் அணியலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+