தூங்கி எழுந்ததும் தண்ணீர் குடிக்கலாமா? சரியான நேரம் எது? எக்ஸ்பர்ட் கொடுக்கும் விளக்கம் இதோ
உடல் ஆரோக்கியமாக இருக்க எப்போது, எந்த நேரத்தில் தண்ணீர் குடிப்பது உடலுக்கு உகந்ததாக இருக்கும் என்று ஊட்டச்சத்து நிபுணர் விளக்கம் அளித்துள்ளார்.
டெல்லி: நமது உடல் இயக்கத்திற்கு தண்ணீர் இன்றியமையாதது. போதுமான அளவு குடிநீர் குடித்தால் மட்டுமே உடல் உறுப்புகள் செயல்பாடு சீராக இருக்கும். உடல் இயக்கத்திற்கு அத்தியாவசியமாக இருக்கும் குடிநீரை எந்த நேரத்தில் குடிக்க வேண்டும் என்பது தொடர்பாக பல்வேறு தகவல்கள் சொல்லப்படும் நிலையில், இது தொடர்பாக பிரபல ஊட்டச்சத்து நிபுணர் அளித்த தகவல் இங்கே விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்க்கலாம்.
நீரின்றி அமையாது உலகு என்பது வள்ளுவர் வாக்கு... இந்த உலகத்தில் உயிர்கள் வாழ்வதற்கு அடிப்படையான ஒன்றில் நீரும் தவிர்க்க முடியாதது. நாம் வாழும் இந்த பூமியில் 71 சதவீதம் நீரே உள்ளது. இதில் நன்னீரின் பங்கு 2.5 சதவீதமே..
மனிதன் உள்பட பூமியில் வாழும் அனைத்து உயிர்களுக்கும் ஜீவாதாரமாக இருப்பது நீரே.. மனிதன் உடல் 60-70 சதவீதம் நீரால் நிரம்பியதுதான். விலங்குகள், மரங்கள் என இந்த பூமிப்பந்தில் வாழும் அனைத்து ஜீவராசிகளும் நீர் இன்றி வாழ்ந்து விட முடியாது. மனிதனை பொறுத்தமட்டில் உணவு இல்லாமல் சில நாட்கள் உயிர் வாழ முடியும். ஆனால், தண்ணீர் அருந்தாமல் அப்படி இருக்க முடியாது.

உடல் இயக்க செயல்பாடுகளுக்கு...
உடலின் உள்ளுறுப்புகள் அனைத்தும் சீராக இயங்க நீர்ச்சத்து இன்றியமையாதது. போதிய அளவு நீர் அருந்தாமல் உடலின் நீர்ச்சத்து குறைந்தால் உடல் ஆரோக்கியத்தில் பல்வேறு பாதிப்புகளை உணர முடியும். தலைவலியில் தொடங்கி பல ஆரோக்கிய பிரச்சினைகளுக்கு நீர்ச்சத்து குறைவது அடிப்படை காரணியாக இருக்கும். எனவே, நாம் மருத்துவர்களிடம் ஆலோசனை கேட்டாலும் சரி.. நமக்கு தெரிந்த நண்பர்கள் அறிவுரை சொன்னாலும் சரி... முதலில் கூறுவது போதிய அளவு குடிநீர் குடியுங்கள் என்பதாகத்தான் இருக்கும்.

மாறுபட்ட தகவல்கள்
எனினும் குடிநீர் ஒரு நாளைக்கு எவ்வளவு குடிக்க வேண்டும் என்பதில் தொடங்கி எந்த நேரத்தில் குடிப்பது உடல் நலத்திற்கு ஆரோக்கியமானது... வெறும் வயிற்றில் தண்ணீர் குடிக்கலாமா? ஜிம் போவதற்கு முன் நீர் அருந்தலமா? என பல்வேறு ஐயங்களும் பலருக்கும் எழுவதுண்டு. இது தொடர்பாக மாறுபட்ட தகவல்களைக் கூட அடிக்கடி கடந்து வந்திருப்போம். எதுதான் சரியான தகவலாக இருக்கும் என்ற குழப்பங்கள் பலருக்கு இருக்கலாம். எனவே இந்த சந்தேகங்களுக்கு விடையளிக்கும் வகையில் பிரபல ஊட்டச்சத்து நிபுணர் லாவ்னித் பத்ரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எந்த நேரத்தில் தண்ணீர் குடிக்க வேண்டும் என்ற சில தகவல்களை பகிர்ந்துள்ளார்.

எந்த நேரத்தில் தண்ணீர் குடிக்க வேண்டும்
நாம் தண்ணீர் குடிக்காமல் இருக்கக் கூடாத ஐந்து முக்கிய தருணங்களை லாவ்னித் பத்ரா குறிப்பிட்டுள்ளார். அதுகுறித்த விவரத்தை இங்கே பார்ப்போம். தூக்கத்தில் இருந்து விழித்தவுடன், அதாவது இரவு தூங்கச் சென்றுவிட்டு காலையில் எழுந்ததும் தவிர்க்காமல் தண்ணீர் குடிக்க வேண்டுமாம். நாம் விழித்தவுடன் நமது உடல் உள்ளுறுப்புகள் நன்கு செயல்பட துவங்குவதற்கு தூங்கி விழித்தவுடன் தண்ணீர் குடிப்பது மிக மிக அவசியமாம்.

உடற்பயிற்சியை முடித்த பிறகு
காலையில் தூங்கி எழுந்ததும் போதுமான அளவு தண்ணீர் குடிப்பது ஓகே.. அதன்பிறகு உடற்பயிற்சிக்காக மைதானங்களுக்கும் உடற்பயிற்சி கூடங்களுக்கும் (ஜிம்) பலரும் செல்வதுண்டு. உடற்பயிற்சி முடித்த பிறகு தண்ணீர் குடிக்கலாமா? அது உடலுக்கு நல்லதுதானா என்ற டவுட் பலருக்கும் இருக்கிறது. இது குறித்து ஊட்டசத்து நிபுணர் கூறுகையில், "உடல் பயிற்சி முடித்தவுடன் போதுமான அளவு தண்ணீர் குடிப்பது நமது இதய துடிப்பை இயல்பு நிலைக்கு கொண்டு வர பெரிதும் உதவும். உடற்பயிற்சி செய்யும் போது வியர்வை மூலமாக உங்கள் உடலில் இருந்து நீர் வெளியேறும். எனவே உடற்பயிற்சி முடித்த பிறகு தண்ணீர் குடிப்பது உடல் நீர்ச்சத்து இழந்து போவதை தடுக்கும்" என்கிறார்.

சாப்பாட்டுக்கு முன்பாக
நாம் உணவு அருந்துவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பாக தண்ணீர் குடிக்க வேண்டுமாம். சாப்பாட்டுக்கு பிறகு தண்ணீர் குடிப்பது செரிமான பிரச்சினைகளுக்கு வழி வகுக்கக் கூடும் என்ற வாதமும் முன்வைக்கப்பட்டுள்ளது. உடல் நிலை சரியில்லாத நேரத்தில், நமது உடல் நிலை சரியில்லாத நேரத்தில் இயல்பாகவே உடலில் நீர்ச்சத்து குறைய வாய்ப்பு உள்ளது. எனவே போதிய அளவு நீர்ச்சத்து நமது உடலுக்கு அவசியமானது. நமது உடல் சீராக இயங்குவதற்கும் விரைவில் குணம் அடையவும் போதிய அளவு நீர் குடிப்பது கட்டாயம்.

நீர்ச்சத்து குறைந்தால்
அதேபோல், உடலில் நீர்ச்சத்து குறைந்தால் மிகவும் சோர்வாக உணர முடியும். எனவே போதிய அளவு தண்ணீர் அருந்தினால் புத்துணர்ச்சியுடன் இருக்கலாம் என்று ஊட்டச்சத்து நிபுணரான லாவ்னித் பத்ரா தனது பரிந்துரையில் தெரிவித்துள்ளர். தண்ணீர் எவ்வளவு குடிக்க வேண்டும்... எந்த நேரத்தில் குடிக்க வேண்டும் என்ற பல்வேறு வேறுபட்ட தகவல்கள் பரிந்துரைக்கப்பட்டாலும் இது ஒரு நபரின் தனிப்பட்ட உடல் நலன் சார்ந்தும் மாறுபடும் என்று பல்வேறு மருத்துவ நிபுணர்கள் சொல்கின்றனர். எனவே, தண்ணீர் எந்த நேரத்தில் குடிப்பது.. எவ்வளவு நேரத்தில் குடிப்பது என்பது குடும்ப மருத்துவர்களிடம் ஒருமுறை ஆலோசனை பெறுவதே சிறந்தாக இருக்கும் என்பதும் மருத்துவ நிபுணர்கள் முன்வைக்கும் வாதமாகவும் உள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications