Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பானிபூரி வைத்த "வேட்டு".. புற்றுநோயை உருவாக்குதா பானி பூரிகள்? கண்ணை உறுத்தும் பச்சை கலர் தண்ணீர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பானிபூரி கடைகளிலும் சோதனை நடத்த உணவுத்துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், சில முக்கிய நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.

புற்றுநோய் காரணிகளை கொண்ட நிறமிகள் பானி பூரி மசாலாவில் கலக்கப்படுவதாக எழுந்த புகாரின் அடிப்படையில் தமிழகம் முழுவதும் உள்ள பானி பூரி கடைகளில் தீவிர சோதனை மேற்கொள்ள உணவு பாதுகாப்பு துறை உத்தரவிட்டுள்ளது.

Health Pani puri Cancer

கடந்த சில தினங்களாகவே பானி பூரி விற்பனை குறித்த தகவல்கள் உணவு பிரியர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகிறது.. கர்நாடகாவில் பானிபூரி நீரில் கேன்சருக்கான காரணிகள் கண்டறியப்பட்டிருக்கிறது.

மாதிரிகள்: தமிழகத்தில் சோதனை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. பானி பூரி கடைகளில் பயன்படுத்தப்படும் பூரி மசால், மசாலா நீரின் மாதிரிகளை சோதனை செய்ய ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கர்நாடகாவில் ரோட்டோரம் விற்பனையாகும் பானி பூரிகளின் தரம் குறித்து புகார்கள் எழுந்தன.. இதையடுத்து, கர்நாடக மாநிலத்தில் விற்கப்படும் அனைத்து வகையான ஓட்டல்களிலும் பானி பூரி மாதிரிகளை, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை செய்தார்கள்.. அப்போதுதான், கேன்சரை விளைவிக்கும் செயற்கை நிறமிகள் பானிபூரியில் கலக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.

மசாலா தண்ணீர்: இதனால், உடனடியாக தமிழகத்திலும் இதே பகீர் கிளம்பியது.. பானி பூரிக்கு தயாராகும் மசாலா தண்ணீரில், பச்சை நிறத்தில் கலர் பவுடர் கலக்கப்படுவதாக புகார் எழுந்தது.. இதையடுத்து, தமிழகத்திலும், அனைத்து பானி பூரி கடைகளிலும் பானி பூரியின் மசாலா தண்ணீரை ஆய்வு செய்ய வேண்டும் என்றும், அந்த தண்ணீரின் தன்மை குறித்து ஆராய வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு உணவு பாதுகாப்புத்துறை ஆணை பிறப்பித்துள்ளது.

அதன்படியே, சென்னையில் இந்த அதிரடி சோதனை ஆரம்பமானது.. சென்னை மெரினா கடற்கரையில் உள்ள பானி பூரி கடைகளில், சென்னை மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை நியமன அதிகாரி சதீஷ்குமார் தலைமையிலான குழுவினர் தீவிர சோதனையில் ஈடுபட்டார்கள்.. இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் சொல்லும்போது:

கஸ்டமர்கள்: "சென்னையை பொறுத்தவரை 1000-க்கும் மேற்பட்ட பானி பூரி கடைகள் செயல்பட்டு வருகின்றன. பானி பூரி என்பது ஆரோக்கியமான உணவு வகைகளில் ஒன்று. பானி பூரி சாப்பிடுவதால் சுறுசுறுப்பு தன்மை உடலில் அதிகரிக்கிறது.. ஆனால் பானிபூரி கடைகளில் முறையாக பாதுகாப்பு வழிமுறைகள் பின்பற்றப்படுவதில்லை.. வெற்று கையுடன் பானி பூரியை உடைத்து அதில் மசாலாவை வைத்து கஸ்டமர்களுக்கு தருகிறார்கள். இதுதான் சுகாதாரமற்ற முறையாகும்.

அதேபோல, ஒருமுறை பயன்படுத்தப்பட்ட மசாலா தண்ணீரை, ஒருசிலர் மறுநாளும் பயன்படுத்துகிறார்கள். இதுவும் தொற்று நோய் பரவ காரணமாகிறது. அதேபோல, பானிதயாரிக்க "ஆப்பிள் கிரீன்" என்ற டையை (நிறமியை) கலக்குகின்றனர். இது புற்றுநோய்க்கான காரணியாக இருக்கலாம். புற்றுநோய்க்கான காரணிகள் கண்டறியப்பட்டால் உடனடியாக சம்பந்தப்பட்ட வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

உணவு மாதிரிகள்: உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி சதீஷ்குமார் இன்னொரு டிவி சேனலுக்கு அளித்துள்ள பேட்டியில், பானிபூரி கடைகளின் மாதிரிகளை சோதனை செய்து வருகிறார்கள். பானிபூரி கடைகளில் சுகாதாரம் இல்லாமல், கைகளாலேயே உடைத்து அப்படியே அந்த நீரில் மூழ்கடித்து எடுத்து தருவது சுகாதாரமற்ற செயலாகும்..

தமிழ்நாட்டில் வடமாநில இளைஞர்கள்தான் அதிகளவில் இருக்கிறார்கள். அவர்களுக்கு இந்திதான் தெரிகிறது. தமிழ் தெரிவதில்லை. நீங்கள் நல்ல பானி பூரி சாப்பிட்டீர்கள் என்றால் சுறுசுறுப்பு வரும். ஆனால் சுகாதாரமற்ற முறையில் செய்வதை சாப்பிட்டால் உடல்நல பாதிப்பு ஏற்படலாம்.

பச்சை கலர்: பானி பூரியில் உபயோகிக்கப்படும் பானியை ஒரு நாள் மட்டும்தான் உபயோகப்படுத்த வேண்டும். சாதாரண பானி பூரியில் பானி அவ்வளவு பச்சையாக இருக்காது, காரணம், அதில் கொத்தமல்லி, புதினா தான் இருக்கும். ஆனால் சில கடைகளில் அந்த பச்சைக் கலருக்காக ஒரு டை கலக்கிறார்கள்.. என்னைப் பொறுத்தவரை, அந்த டை கூட கேன்சரை உண்டு பண்ணக்கூடிய காரணியாகும் என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+