கேன்சர் டேஞ்சர்.. பெருங்குடல் புற்றுநோய் இத்தனை ஆபத்தானதா? யாரையெல்லாம் தாக்கும்? அறிகுறிகளை பாருங்க
சென்னை: பெருங்குடல் புற்றுநோய் என்பது என்ன? இந்த நோய் ஏற்பட காரணங்கள் என்னென்ன? அறிகுறிகள் என்னென்ன? இந்த பாதிப்பு ஏற்படாமல் தடுக்கக்கூடிய உணவுமுறைகள், வழிமுறைகள் என்னென்ன? இவைகளை சுருக்கமாக இங்கே பார்க்கலாம்.
புற்றுநோய்களில் ஒருவகைதான், இந்த பெருங்குடல் புற்றுநோய்.. நம்முடைய செரிமான மண்டலத்தின் இறுதிப்பகுதியே பெருங்குடலாகும்.. உட்பகுதிகளில் பாலிப்ஸ் என்ற உயிரணுக்களில் சிறு சிறு கட்டிகள் தோன்றும்.. இந்த கட்டிகள் இணைந்து பெருங்குடல் புற்றுநோயாக உருவெடுக்கும். எந்த வயதிலும் இந்த புற்றுநோய் வரலாம்.. ஆனால், 50 வயதுக்கு மேற்பட்டவர்களை தாக்க அதிக வாய்ப்பு உள்ளது..
காரணங்கள்: இந்தநோய் தாக்குவதற்கு ஏராளமான காரணங்கள் உள்ளன.. முக்கியமாக உணவு முறை, உடல் எடை அதிகரிப்பு, புகையிலை, ஆல்கஹால் பயன்பாடுகள், முறையற்ற வாழ்வியல் பழக்கவழக்கங்கள் போன்றவையே பிரதான காரணமாக இருக்கின்றன..

குறைந்த நார்ச்சத்து உணவுகள் சாப்பிடுபவர்கள், நீரிழிவு நோய் அல்லது குறைந்த இன்சுலின் எதிர்ப்பு கொண்டவர்கள், கொழுப்பு நிறைந்த உணவுகளை சாப்பிடுபவர்கள், உடலுழைப்பு இல்லாதவர்கள், பதப்படுத்தப்பட்ட மற்றும் சிவப்பு இறைச்சியை அதிகம் சாப்பிடுபவர்களுக்கு பெருங்குடல் புற்றுநோய் அபாயம் ஏற்படலாம்.
அறிகுறிகள்: மலத்தில் ரத்தக்கசிவு, ரத்தப்போக்கு, வாயுத்தொல்லை, வயிற்று வலி போன்றவைகளை அலட்சியப்படுத்தக்கூடாது. எனினும், ஆரம்ப கட்டத்திலேயே சில அறிகுறிகளை வைத்து அறிந்து கொண்டால், இந்த அபாயத்திலிருந்து விடுபடலாம்.
நம்முடைய நாட்டை பொறுத்தவரை 40000-க்கும் மேற்பட்ட பெருங்குடல் புற்றுநோய் பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. நம் ஊர்களில் பெருங்குடல் புற்றுநோய் மிகவும் குறைவாக இருந்தது. ஆனால் இப்போது அது அதிகமாகி வருகிறது. 40 முதல் 50 வயதுக்கு இடைபட்டவர்களுக்கு பெருங்குடல் புற்றுநோய் அதிகமாக வருவதாக கண்டறியப்பட்டுள்ளது.
உடனடி மாற்றம்: எனவே உணவு பழக்கவழக்கங்களில் உடனடி மாற்றத்தை கையாள வேண்டியிருக்கிறது. நார்ச்சத்து நிறைந்த காய்கறிகள், பழங்களை உணவில் சேர்த்து கொள்ள வேண்டும்... பெருங்குடல் புற்றுநோய் மற்றும் அழற்சி குடல் நோய்க்கு எதிராக சேப்பங்கிழங்கு பாதுகாப்பதாக பல்வேறு ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. கால்சியம், பாஸ்பரஸ் சத்துக்கள் நிறைந்த சேப்பங்கிழங்குகள் செரிமான கோளாறுகளை நீக்கி, குடல் புண்களையும் ஆற்றக்கூடியவை.
புகைப்பிடித்தல், புகையிலை பழக்கத்தை கைவிட்டு, குறைந்தது 30 நிமிடங்களாவது உடற்பயிற்சி செய்ய வேண்டும்.. உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்.
தடுப்பு மருந்துகள்: ஸ்கிரீனிங் சோதனை உள்ளிட்டவைகள் பெருங்குடல் புற்றுநோயை ஆரம்ப கட்டத்திலேயே தடுக்க முடியுமாம். .. அதேபோல, முன்கூட்டியே புற்றுநோயின் அபாயத்தை குறைக்க சில மருந்துகள் கண்டறியப்பட்டுள்ளன.. தடுப்பு மருந்துகளும் உள்ளன.. கீமோதெரபி முதல் அறுவை சிகிச்சை வரை எத்தனையா சிகிச்சை முறைகளும் உள்ளன.. எனவே, டாக்டர்களின் முறையான ஆலோசனைகளை பெற்று, சிகிச்சை பெறுவதே பூரண ஆரோக்கியத்தை தரும்.
முதலிலேயே அதை கண்டுபிடித்து அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். அப்போதுதான் அந்த நோயை முற்றிலும் குணப்படுத்த முடியும். அதனால், குடல் சார்ந்த பிரச்சனைகள் ஏற்படும்போது நாம் கவனமாக இருக்க வேண்டும். உலக இரைப்பை குடலழற்சி அமைப்பு, ஒவ்வொரு ஆண்டும் ஒரு கருத்தை முன்னிறுத்தி விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது.
புற்றுநோய்: அந்த வகையில் இந்த ஆண்டுக்கான கருத்தாக மலக்குடல் அல்லது பெருங்குடல் புற்றுநோயை (கோலான் கேன்சர்) முன்னிறுத்தி இருக்கிறது. இந்த ஆண்டு முழுவதும் இந்த நோயைப் பற்றி டாக்டர்கள், மக்களிடையே இந்த அமைப்பு, பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை உலகளவில் நடத்துகிறது.
எனவேதான், உலக காஸ்ட்ரோலஜி அமைப்பு, தமிழ்நாடு காஸ்ட்ரோஎன்டாலஜிஸ்ட் டிரஸ்ட் மற்றும் அப்பல்லோ மருத்துவமனை ஆகியவற்றின் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள பெருங்குடல் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு கையேட்டை, சென்னை தலைமைச் செயலகத்தில் கடந்த மே மாதம் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications